ரத்தின சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு ரத்தினத்திற்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட குண நலன்களும், பலன்களும் உண்டு. இதில் புலி கண் ரத்தினத்தை அணிவதால் கிடைக்கும் ஜோதிட பலன்கள் மற்றும் அதை எந்த கிழமையில், எந்த விரலில் அணிய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக அறிவோம்.
புலி கண் ரத்தினம்: பலன்களும் அணியும் முறையும்
ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்களின் அசுப நிலை காரணமாக வாழ்க்கையில் பல பிரச்சனைகள் சூழ்ந்திருக்கும். ஜோதிட ரீதியாக, இந்த புலி கண் ரத்தினத்தை அணிவதன் மூலம் சனி, சுக்கிரன், செவ்வாய், வியாழன், ராகு மற்றும் கேது உள்ளிட்ட கிரகங்களால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளைக் குறைக்கலாம் என ஜோதிட வல்லுநர்கள் நம்புகின்றனர். இருப்பினும், சரியான ஜோதிட ஆலோசனை இல்லாமல் இந்த ரத்தினத்தை அணிய வேண்டாம். ஏனெனில் நன்மைக்கு பதிலாக சில எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நவகிரக தோஷ நிவர்த்திக்கு புலி கண் ரத்தினம் அணியும் முறை:
- சூரிய பகவான்: ஜனன ஜாதகத்தில் சூரிய பகவானின் அமைப்பானது அசுப நிலையில் இருப்பின், திங்கட் கிழமைகளில் மோதிர விரலில் புலி கண் ரத்தினத்தை அணியலாம்.
- செவ்வாய் பகவான்: மோசமான பலன்களை குறைக்க, செவ்வாய் கிழமையில், உங்களின் ஆள்காட்டி விரலில் புலி கண் பதித்த மோதிரத்தை அணிவது நல்ல நிவாரத்தை அளிக்கும்.
- புதன் பகவான்: புதன் பகவானின் நல்லருள் பெற்றிட, புதன் கிழமையில், உங்களின் சுண்டு விரலில் இந்த புலி கண் பதித்த மோதிரத்தை அணிவது நற்பலனை தரும்.
- ராகு-கேது தோஷம்: புதன் கிழமையன்று வலது கையில் இந்த ரத்தினத்தை அணிவதன் மூலம், ராகு தோஷங்களில் நிவாரணமும், இடது கையில் அணிவதால் கேதுவின் அசுப தோஷங்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
- குரு பகவான்: குரு பகவானின் நல்லருள் கிடைக்கவும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற்றிட, வியாழக்கிழமையில் ஆள்காட்டி விரலில் அணியவும்.
- சுக்கிரன் பகவான்: சுக்கிரன் பகவானின் நல்லருள் மற்றும் கிரக வலுப்படுத்த, வெள்ளிக் கிழமையில் உங்கள் கழுத்தில் புலி கண் பதித்த செயின் அணியலாம்.
- சனி பகவான்: சனி பகவானின் நல்லருள், தோஷ நிவர்த்தி பெற்றிட, இந்த ரத்தினத்தை உங்களின் நடுவிரலில் அணியலாம்.
புலி கண் ரத்தினம் அணிவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்:
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்: டைகர் ஸ்டோன் அணிவதால் உங்களில் உள்ளூர தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- மன அழுத்த நிவாரணம்: உங்களின் மன அழுத்தத்திலிருந்து விடுபட இது பயனுள்ளதாக இருக்கும்.
- திருமண வாழ்க்கை மேம்பாடு: திருமண வாழ்க்கையில் இருக்கக்கூடிய மன கசப்புகள் தீரும்.
- தொழில் முன்னேற்றம்: வேலை, தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்தபடி முன்னேற்றத்தை பெற்றிட இந்த புலி கண் ரத்தினத்தை அணிவது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
- கிரக தோஷ நிவர்த்தி: நிழல் கிரகங்கள், அசுப கிரகமான ராகு - கேதுவின் அசுப பலன்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், அணிவதற்கு முன் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.