Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

கிருஷ்ணா 108 போற்றி

கலியுக கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுவதற்கு இந்த கிருஷ்ணா 108 போற்றி மந்திரங்கள் மிகச் சிறந்த வழி. தினமும் இந்த போற்றிகளைச் சொல்லி கிருஷ்ணரின் அருளைப் பெற்று, உங்கள் வாழ்வில் அமைதி, ஆனந்தம் மற்றும் செல்வச் செழிப்பைப் பெறுங்கள். ஜோதிடம் 360 உங்களுக்காக இந்த தெய்வீக போற்றிகளை வழங்குகிறது.

ஸ்ரீ கிருஷ்ணா 108 போற்றி மந்திரங்கள்

தினமும் மனதார உச்சரித்து கிருஷ்ணரின் கருணையைப் பெறுங்கள்.

  • ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி

  • ஓம் அரங்கமா நகருளானே போற்றி

  • ஓம் அற்புத லீலா போற்றி

  • ஓம் அச்சுதனே போற்றி

  • ஓம் அமரேறே போற்றி

  • ஓம் அரவிந்த லோசனா போற்றி

  • ஓம் அர்ஜுனன் தோழா போற்றி

  • ஓம் ஆதி மூலமே போற்றி

  • ஓம் ஆயர் கொழுந்தே போற்றி

  • ஓம் ஆபத்சகாயனே போற்றி

  • ஓம் ஆலிலை பாலகா போற்றி

  • ஓம் ஆழ்வார் நாயகா போற்றி

  • ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி

  • ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி

  • ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி

  • ஓம் ஆனிரை காத்தவனே போற்றி

  • ஓம் இமையோர் தலைவா போற்றி

  • ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி

  • ஓம் உடுப்பி உறைபவனே போற்றி

  • ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி

  • ஓம் உலகம் உண்ட வாயா போற்றி

  • ஓம் ஊழி முதல்வனே போற்றி

  • ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி

  • ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி

  • ஓம் எண் குணத்தானே போற்றி

  • ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி

  • ஓம் எழில் மிகுதேவா போற்றி

  • ஓம் ஏழைப் பங்காளா போற்றி

  • ஓம் ஒளிமணிவண்ணா போற்றி

  • ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி

  • ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி

  • ஓம் கலியுக தெய்வமே போற்றி

  • ஓம் கண்கண்ட தேவா போற்றி

  • ஓம் கம்சனை அழித்தாய் போற்றி

  • ஓம் கருட வாகனனே போற்றி

  • ஓம் கல்யாண மூர்த்தி போற்றி

  • ஓம் கல்மாரி காத்தாய் போற்றி

  • ஓம் கமலக் கண்ணனே போற்றி

  • ஓம் கஸ்துாரி திலகனே போற்றி

  • ஓம் காளிங்க நர்த்தனா போற்றி

  • ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி

  • ஓம் கிரிதர கோபாலனே போற்றி

  • ஓம் கீதையின் நாயகனே போற்றி

  • ஓம் குசேலர் நண்பனே போற்றி

  • ஓம் குருவாயூர் அப்பனே போற்றி

  • ஓம் கோபியர் தலைவனே போற்றி

  • ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி

  • ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி

  • ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி

  • ஓம் கோகுல பாலகனே போற்றி

  • ஓம் கோவிந்த ராஜனே போற்றி

  • ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி

  • ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி

  • ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி

  • ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி

  • ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி

  • ஓம் சாந்த குணசீலனே போற்றி

  • ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி

  • ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி

  • ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி

  • ஓம் தாமரைக் கண்ணனே போற்றி

  • ஓம் திருமகள் மணாளனே போற்றி

  • ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி

  • ஓம் துவாரகை மன்னனே போற்றி

  • ஓம் தேவகி செல்வனே போற்றி

  • ஓம் நந்த கோபாலனே போற்றி

  • ஓம் நந்தகோபன் குமரனே போற்றி

  • ஓம் நப்பின்னை மணாளனே போற்றி

  • ஓம் நவநீத சோரனே போற்றி

  • ஓம் நான்மறை பிரியனே போற்றி

  • ஓம் நாராயண மூர்த்தியே போற்றி

  • ஓம் பரந்தாமனே போற்றி

  • ஓம் பக்த வத்சலனே போற்றி

  • ஓம் பலராமர் சோதரனே போற்றி

  • ஓம் பவள வாயனே போற்றி

  • ஓம் பத்ம நாபனே போற்றி

  • ஓம் பார்த்த சாரதியே போற்றி

  • ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி

  • ஓம் பாண்டவர் துாதனே போற்றி

  • ஓம் பாண்டு ரங்கனே போற்றி

  • ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி

  • ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி

  • ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி

  • ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி

  • ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி

  • ஓம் புருஷோத்தமனே போற்றி

  • ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி

  • ஓம் பூதனையை கொன்றவனே போற்றி

  • ஓம் மதுசூதனனே போற்றி

  • ஓம் மண்ணை உண்டவனே போற்றி

  • ஓம் மயிற்பீலி அழகனே போற்றி

  • ஓம் மாய கிருஷ்ணனே போற்றி

  • ஓம் மாயா வினோதனே போற்றி

  • ஓம் மீராவின் வாழ்வே போற்றி

  • ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி

  • ஓம் முழுமதி வதனா போற்றி

  • ஓம் யமுனைத் துறைவனே போற்றி

  • ஓம் யசோதை செய்தவமே போற்றி

  • ஓம் யதுகுலத் திலகமே போற்றி

  • ஓம் ராதையின் நாயகனே போற்றி

  • ஓம் வசுதேவர் புதல்வா போற்றி

  • ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி

  • ஓம் வெள்ளை மனத்தானே போற்றி

  • ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி

  • ஓம் வேதியர் வாழ்வே போற்றி

  • ஓம் வேணு கோபாலனே போற்றி

  • ஓம் வைகுண்ட வாசனே போற்றி

  • ஓம் வையம் காப்பவனே போற்றி

  • போற்றி!

தொடர்புடைய பிற மந்திரங்கள் : விஷ்ணு சகஸ்ரநாமம் , பெருமாள் 108 போற்றி

கிருஷ்ணா 108 போற்றி சொல்லுவதன் பலன்கள்

  • மன அமைதி: தினசரி உச்சரிப்பு மன அழுத்தத்தைக் குறைத்து அமைதியைத் தரும்.

  • செல்வச் செழிப்பு: கிருஷ்ணரின் அருள் செல்வ வளத்தை அதிகரிக்கும்.

  • கஷ்டங்கள் நீங்கும்: துன்பங்கள் விலகி, வாழ்க்கை இனிமையாகும்.

  • நினைத்த காரியம் வெற்றி: நல்ல எண்ணங்கள் ஈடேறி, காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

  • ஆரோக்கியம்: உடல்நலம் மேம்படும், நோய்கள் அண்டாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

கிருஷ்ணரின் மீது பக்தி கொண்ட எவரும், வயது வித்தியாசமின்றி இந்தப் போற்றி மந்திரங்களைச் சொல்லலாம். இது ஒரு எளிய வழிபாடாகும்.

தினமும் காலையில் குளித்து முடித்த பின், பூஜை அறையில் அல்லது அமைதியான இடத்தில் உச்சரிப்பது மிகவும் உகந்தது. மாலை நேரத்திலும் சொல்லலாம்.

மன அமைதி, செல்வச் செழிப்பு, கஷ்டங்கள் நீங்குதல், நல்ல ஆரோக்கியம் மற்றும் நினைத்த காரியங்களில் வெற்றி ஆகியவை கிருஷ்ணா 108 போற்றி மந்திரங்களைச் சொல்வதால் கிடைக்கும் முக்கிய பலன்களாகும்.

Our Other Services