நாம் விரலில் மோதிரம் அணிவதை வெறும் அழகுக்காகவோ, ஆடம்பரத்திற்கோ மட்டுமல்ல. ஜோதிடத்தின் படி, இது நம் உடலில் நல்ல மாற்றத்தை உருவாக்கக் கூடியதாகவும், உடல் மற்றும் மனதின் அமைதியை அதிகரிப்பதற்காகவே அணியப்படுகிறது. ஆன்மீகத்தில் தங்கம் மகாலட்சுமியின் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. அதுவே அறிவியலில் இதை அணிவதால் பல நல்ல நேர்மறை எண்ணங்களும், நல்ல உடல் மாற்றமும் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. உங்கள் காதல் துணைக்கு ரத்தினக்கல் பதித்த மோதிரத்தை வாங்க விரும்புபவர்கள், அவர்களின் ராசியை அறிந்து சரியான ரத்தினத்தை தேர்வு செய்ய இந்த வழிகாட்டி உதவும்.
உங்கள் ராசிக்குரிய அதிர்ஷ்ட ரத்தினக் கற்கள்
மேஷம் (Aries) - ரத்தினம்: சிவப்பு பவளம்
மேஷ ராசி அதிபதி செவ்வாய் பகவான். இவர் தைரியம், ஆற்றல், உத்வேகத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார். இவர்களுக்கு மேலும் நல்ல வலிமையைத் தரக்கூடிய ரத்தினம் சிவப்பு பவளம். இது மேஷ ராசியினரின் மந்த தன்மையை நீக்கி, வாழ்க்கையில் புதுமையை ஏற்படுத்தும். மேஷ ராசியினருக்கு தங்களின் உயிர் சக்தியை உயிர்ப்பிக்கும் வகையில் சிவப்பு பவளக்கல் பதித்த மோதிரத்தை அல்லது நெக்லஸை பரிசளிக்கலாம்.
ரிஷபம் (Taurus) - ரத்தினம்: வெள்ளை சபையர்
ரிஷப ராசி அதிபதி சுக்கிர பகவான். இவருக்கு மிகவும் பிடித்த நிறம் வெள்ளை. அதனால் ரிஷப ராசியினர் வைரம் அல்லது வெள்ளை சபையர் (White Sapphire) ரத்தினம் பதித்த மோதிரத்தை அணிந்து கொள்ளலாம். இது அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் பெற்றிட உதவும். மேலும் இதன் மூலம் தீய மற்றும் எதிர்மறை ஆற்றலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மிதுனம் (Gemini) - ரத்தினம்: மரகதம்
மிதுன ராசி அதிபதி புதன் பகவான். இவர்கள் அறிவு ரீதியாகவும், நுண்ணறிவுடன் செயல்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். மிதுன ராசியினருக்கு உகந்த ரத்தினம் மரகதம். மரகதம் பதித்த மோதிரம், நெக்லஸை அணிவதன் மூலம் அதிர்ஷ்டமும், நேர்மறை சிந்தனையும் உண்டாகும். மிதுன ராசியினர் மரகதம் பதித்த மோதிரத்தை சுண்டு விரலில் அணிய வேண்டும்.
கடகம் (Cancer) - ரத்தினம்: முத்து
கடக ராசி அதிபதி சந்திர பகவான். மனோ காரகன் சந்திர பகவான் ஆளக்கூடிய கடக ராசியினர் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருப்பார்கள். இவர்கள் முத்து பதித்த மோதிரத்தை அல்லது நெக்லஸை அணிவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் உணர்ச்சி கட்டுக்குள் வரும். திறத்தன்மை அதிகரித்து, காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் குதூகலம் மலர செய்யும்.
சிம்மம் (Leo) - ரத்தினம்: மாணிக்கம்
சிம்ம ராசி அதிபதி சூரிய பகவான். இவர்கள் அச்சமற்றவர்களாகவும், ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களாகவும் அறியப்படுகிறார்கள். மாணிக்கம் அன்பின் சின்னமாக கருதப்படுகிறது. இதை அணிபவர்கள் தங்களின் துணை மீது அன்பு, அரவணைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னம்பிக்கையை மேம்படுத்தக்கூடிய இந்த மாணிக்கம் உங்களின் உறவில் வலுவை சேர்க்கும்.
கன்னி (Virgo) - ரத்தினம்: மரகதம், ஓனிக்ஸ்
கன்னி ராசிக்காரர்கள் பொதுவாக கூச்ச சுபாவம் கொண்டவர்களாகவும், குறைந்த அளவு பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். பல சமயங்களில் தங்கள் மீதான நம்பிக்கையை குறைத்துக் கொள்வது ஏமாற்றத்தை உண்டாக்கும். கன்னி ராசிக்காரர்கள் குறிப்பாக பச்சை ஓனிக்ஸ் அணிவது மிகவும் சிறப்பானது. இதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும், மன அழுத்தத்தை குறைக்க முடியும். சகிப்புத்தன்மையும், புத்திசாலித்தனமான முடிவெடுக்கவும் உதவும்.
துலாம் (Libra) - ரத்தினம்: வெள்ளை குவார்ட்ஸ்
துலாம் ராசிக்காரர்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்கள். இவர்கள் நிலையற்ற உணர்ச்சிகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் சூழலை சரியாக கையாளுவதில் கஷ்டம் ஏற்படும். இந்த ராசியினர் வெள்ளை குவார்ட்ஸ் மோதிரம் அல்லது வைர மோதிரத்தை அணிந்து கொள்வது நல்லது. இது உறவுகளை வலுப்படுத்தி, அன்பும், அரவணைப்பும், தைரியமும் அதிகரிக்க உதவும்.
விருச்சிகம் (Scorpio) - ரத்தினம்: பவளம், கார்னெட்
விருச்சிக ராசியினர் ஆழ்ந்த சிந்தனையாளர்கள் மற்றும் உடல் ஆற்றலை கொண்டவர்கள். இவர்கள் சிவப்பு நிற பவளம் அல்லது கார்னெட் அணியும்போது பக்தி உணர்வும், உடல் சக்தியும் அதிகரிக்கும். இது நல்ல உணர்வுகளையும், நம்பிக்கையையும் தரக்கூடியதாக இருக்கும்.
தனுசு (Sagittarius) - ரத்தினம்: கனக புஷ்பராகம்
குரு ஆளக்கூடிய தனுசு ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் லட்சியம் கொண்டவர்கள். இவர்கள் புஷ்பராகம் ரத்தினத்தை பதித்த மோதிரத்தை அணிவதன் மூலம் எந்த செயலுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதை தேர்வு செய்வதில் சிறப்பாக செயல்பட முடியும். வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். அன்பானவர்கள் மீது நெருக்கம் அதிகரிக்கும்.
மகரம் (Capricorn) - ரத்தினம்: நீலக்கல்
சனிபகவானால் ஆளப்படக் கூடியவர் மகர ராசிக்காரர்கள். இந்த ராசியினர் நீல மணிக்கல்லை அணிவதன் மூலம் மன எண்ணங்கள் சீர்படுத்தப்படும். மேலும் ஏராளமான செல்வம் மற்றும் செழிப்புடன் வாழ்வதற்கான அதிர்ஷ்டம் கிடைக்கும். இது உங்கள் பங்குதாரர்களுடனான கடினமான விஷயங்கள் தீரவும், துணையுடன் உறவு மேம்படவும் உதவும்.
கும்பம் (Aquarius) - ரத்தினம்: அயோலைட்
கும்பம் ராசியில் பிறந்தவர்கள் தனித்துவமான மனதுடன் நடிப்பு, மாடலிங் போன்ற தொழிலில் ஈடுபடுவார்கள். இவர்கள் அயோலைட் பதித்த அணிகலனை அணிவதால் உறவுகள் வலுப்படும். காதல், திருமண உறவை வலுப்படுத்தக்கூடும். நேர்மறையான சிந்தனையும், அன்பானவர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
மீனம் (Pisces) - ரத்தினம்: சிட்ரின்
குரு பகவான் ஆளக்கூடிய ராசி மீனம். இவர்கள் சிட்ரின் (மஞ்சள் நிற கல்) அணிவதன் மூலம் உங்களின் கோபம், எதிர்மறை உணர்வுகள் மற்றும் ஆழமாக வேரூன்றிய அச்சங்களிலிருந்து விடுவிக்க உதவுகிறது. இது அணிபவருக்கு நம்பிக்கையுடன் முன்னேற உதவுகிறது. உங்கள் வாழ்க்கையில் உறவுகளில் முன்னேற்றம் கிடைக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மேலும் விரிவான ஜோதிட தகவல்களுக்கு Jothidam360.in ஐப் பார்வையிடவும்.