நம் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு இன்பத்திற்கும் துன்பத்திற்கும், ஜாதகத்தில் அமையக்கூடிய நவக்கிரகங்களின் நிலை ஒரு முக்கிய காரணியாக அமைகிறது என ஜோதிடம் கூறுகிறது. மனித உடலில் பஞ்சபூதங்களின் பங்குடன், கிரகங்களின் ஆதிக்கம் எப்படி நோய்களாக வெளிப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம். தமிழ் மொழியில் வழங்கப்படும் இந்த விரிவான தகவல், உங்களின் ஆரோக்கிய பயணத்திற்கு வழிகாட்டும். மேலும், கிரக தோஷங்களால் உண்டாகும் பிரச்சனைகளுக்கு முருகன் ஆலயங்கள் மற்றும் ஆறுபடை வீடுகள் தரிசனம் சிறந்த பரிகாரமாக அமையும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
சூரியன் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளால் ஏற்படும் நோய்கள்
சூரியனின் எதிர்மறை தாக்கத்தால் நோய் எதிர்ப்புச் சக்தி இன்மை, நரம்பு தொடர்பான நோய்கள், இதய நோய், எலும்பு சம்பந்தமான நோய்கள், பித்தம், நிறம், வயிறு பிரச்சனை, வயிறு எரிச்சல், தொழுநோய், காய்ச்சல், இரத்தப்போக்கு, மயக்கம், கை கால் வலிப்பு போன்ற நோய்கள் ஏற்படலாம். இந்த பாதிப்புகளிலிருந்து விடுபட ஜோதிட பரிகாரங்களை நாடுவது சிறந்ததாகும்.
சந்திரன் ஏற்படுத்தும் எதிர்மறையால் ஏற்படும் நோய்கள்
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் வலு இல்லாமல் இருப்பின் அல்லது பாதகமாக இருப்பின் அவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படும். இடது கண்ணில் பிரச்சனை உண்டாகும். சரியான தூக்கம் இல்லை, மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆஸ்துமா, சர்க்கரை நோய், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய வாந்தி மயக்கம், சிறுநீரக கோளாறு, இருமல், வாய் தொடர்பான பிரச்சனைகள், மூக்கு தொடர்பான நோய்கள் ஏற்படும்.
செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் நோய்கள்
ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் சாதகமற்ற அமைப்பில் இருப்பின் அவருக்கு தோல் சார்ந்த நோய்கள் ஏற்படும். உடம்பில் புண், அரிப்பு, விஷ நோய்கள், கழுத்து, தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படும். ரத்தம் தொடர்பான பிரச்சனைகளும், சிறுநீரக பிரச்சனைகளும் ஏற்படும். குறிப்பாக விபத்தினால் ரத்தப்போக்கு, கூர்மையான ஆயுதத்தால் வெட்டுப்பட்டு இரத்தம் இழப்பு போன்றவை ஏற்படும். செவ்வாயின் தாக்கத்தால் தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளன.
புதன் கிரகம் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள்
ஒருவரின் ஜாதகத்தில் புதன் பகவான் எதிர்மறையான அல்லது வலுவிழந்து காணப்பட்டால் அவர் படிப்பில் பின்தங்கி இருப்பார். அவருக்கு நரம்பு, மூக்கு தொடர்பான நோய்கள், பக்கவாதம், அஜீரணம், வாய்வு தொல்லை, நிமோனியா, மலேரியா போன்ற நோய்கள் தாக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு பேச்சு குறைபாடு, நரம்பு தொடர்பான குறைபாடுகள் ஏற்படும்.
வியாழன் கிரகம் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள்
ஒருவரின் ஜாதகத்தில் குரு வலுவிழந்து இருப்பின், அல்லது எதிர்மறையைத் தாக்கம் தரக்கூடியதாக இருப்பின் அவருக்கு சிறுநீரகம், மண்ணீரல், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய், காது தொடர்பான பிரச்சனைகள், எலும்பு மஞ்சள் குறைபாடு, உடல் பருமன் தொடர்பான நோய்கள், மூளை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
சுக்கிரன் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள்
ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சாதகமற்றதாக அல்லது எதிர்மறையான விளைவுகள் தரக்கூடியதாக அமைந்திருந்தால் அவருக்கு பாலுணர்வு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக ஆண்மை குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்ணாக இருப்பின் மலட்டுத் தன்மை ஏற்படும். பிறப்புறுப்பு தொடர்பான பிரச்சனைகள், சிறுநீரகம், அஜீரணக் கோளாறு, நாளமில்லா சுரப்பிகள் தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உண்டு. போதைப் பொருள் பயன்படுத்துதல் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புண்டு.
சனி பகவான் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள்
ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் எதிர்மறையான அமைப்பில் இருப்பின் அவருக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக கை, கால் மூட்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். எலும்பு தேய்மானம், வலுவில்லாத எலும்பால் முறிவு ஏற்படுதல் உண்டாகும். சிலருக்கு பக்கவாதம், காதுகேளாமை, ஆஸ்துமா, அஜீரண கோளாறு, தசை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
ராகு ஏற்படுத்தக்கூடிய நோய்கள்
ஒருவரின் ஜாதகத்தில் ராகு எதிர்மறையான விளைவுகள் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பின் அவருக்கு மூளை தொடர்பான கோளாறுகள் ஏற்படும். வயிற்று புழுக்கள், கல்லீரல் சம்பந்தமான கோளாறுகள், கடுமையான உடல் உறுப்பு வலி, பைத்தியம், பெரியம்மை, உடல் பலவீனம், உடல் உபாதைகள் போன்ற விஷயங்களும், விலங்குகளால் பாதிப்பு, தொழுநோய் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் தர வாய்ப்புள்ளது.
கேது தரக்கூடிய பாதகமான பலன்கள்
கேது ஜாதகத்தில் பாதகமானதாக இருப்பின் அவருக்கு தோல் நோய், உடலில் காயங்கள், ஒவ்வாமை, காற்றினால் பரவக்கூடிய நோய்கள், சோம்பல், நாய் கடி போன்ற விஷயங்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நவக்கிரக நோய்கள் - முக்கிய அம்சங்கள்
- சூரியன்: இதய நோய், எலும்பு பாதிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு.
- சந்திரன்: மன ஆரோக்கியம், நுரையீரல், இதய பிரச்சனைகள், தூக்கமின்மை.
- செவ்வாய்: தோல் நோய்கள், ரத்தப்போக்கு, விபத்துக்கள்.
- புதன்: நரம்பு, மூக்கு தொடர்பான நோய்கள், பேச்சு குறைபாடு.
- வியாழன் (குரு): கல்லீரல், மண்ணீரல், சர்க்கரை நோய், உடல் பருமன்.
- சுக்கிரன்: பாலுணர்வு, இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சனைகள்.
- சனி: மூட்டு வலி, எலும்பு தேய்மானம், தசை பிரச்சனைகள்.
- ராகு: மூளை கோளாறுகள், புற்றுநோய், விலங்குகளால் பாதிப்பு.
- கேது: தோல் நோய், ஒவ்வாமை, நாய் கடி போன்ற பாதிப்புகள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காரகத்துவம் உண்டு. ஜாதகத்தில் ஒரு கிரகம் வலுவிழந்து அல்லது பாதகமான நிலையில் இருக்கும்போது, அது தொடர்பான உறுப்புகள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஜோதிட ரீதியாக கிரகங்களின் அமைப்பை ஆராய்ந்து, உரிய பரிகாரங்களை மேற்கொள்வது முக்கியம். குறிப்பிட்ட தெய்வங்களை வழிபடுதல், ரத்தினங்கள் அணிதல், தானங்கள் செய்தல் போன்றவை பலனளிக்கும். உதாரணமாக, முருகன் ஆலயங்கள் சென்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
மனித உடல் பஞ்சபூதங்களால் ஆனது. ஜோதிடத்தில், ராசிகளும் இந்த பஞ்சபூத தன்மைகளுடன் தொடர்புடையவை. கிரகங்களின் நிலை பஞ்சபூத சமநிலையை பாதிக்கும்போது, அது உடல்நலப் பிரச்சனைகளாக வெளிப்படுகிறது.