வாழ்க்கையில் மன அமைதியும், திருப்தியான பொருளாதாரமும் பெற அனைவருக்கும் ஆசை. கடன் சுமையால் நிம்மதி இழந்தவர்களுக்கு, எளிய வாஸ்து பரிகாரங்கள் மூலம் அதிலிருந்து விடுபட இந்த தமிழ் ஜோதிடக் கட்டுரை வழிகாட்டுகிறது.
கடன் பிரச்சனைகளும் வாஸ்து தீர்வுகளும்
ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் மன அமைதியும், திருப்தியான பொருளாதாரம் இருக்க வேண்டும் என கடுமையாக உழைக்கின்றனர். சில கடினமான நேரத்தில் வாங்கக்கூடிய கடன் பிரச்சனையில் இருந்து விடுபட நாம் செய்ய வேண்டிய எளிய வாஸ்து பரிகாரங்கள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம். கடமை சுமை ஒருவரின் நிம்மதியை குறைத்து, எப்போதும் ஒருவித மன இறுக்கத்தில் இருக்க வைக்கும். நிதி சமநிலை மோசம் அடைவதால் கடன் வாங்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது. சிலர் தங்களின் வருமானத்தை விட அதிக செலவுகள் செய்வதால் கடனாளியாக மாறிவிடுகின்றனர். பல நேரங்களில் கடனை திருப்பி செலுத்த முடியாமல், மன வருத்தமும், அவமானமும் சந்திக்க வாய்ப்புள்ளது. ஒருவரின் நிதி சிக்கல், கடன் பிரச்சினை போன்றவற்றில் இருந்து விடுபடுவதற்கான வாஸ்து குறிப்புகள் நிச்சயம் உதவும்.
1. அரச மர வழிபாடு
சனிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை நேரத்தில் அரச மரத்திற்கு அடியில் விளக்கேற்றி வழிபாடு செய்யவும். குறிப்பாக நான்கு முகம் கொண்ட விளக்கை ஏற்றி, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மரத்தை சுற்றி வழிபாடு செய்து வர, கடன் குறையத் தொடங்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
2. மகாலட்சுமியின் திசை - பணப்பெட்டி
கடனிலிருந்து விடுபட உங்கள் வீடு அல்லது கடையில் வடக்கு திசையில் பணப்பெட்டியை வைப்பது நல்லது. இந்த திசை மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. இதனால் உங்களின் கடன் தொகை மெது மெதுவாக குறையத் தொடங்கும். செவ்வாய்க்கிழமைகளில் கடனை திருப்பி செலுத்துவதற்கு சிறந்த நாளாக கருதப்படுகிறது. இதன் காரணமாக நீங்கள் வாங்கிய கடன் தொகையில் உங்களால் முடிந்த அளவு செவ்வாய்க்கிழமைகளில் திருப்பி செலுத்த முயற்சி செய்யவும். அதனால் விரைவாக கடன் அடையும்.
3. குபேரன் சிலை வழிபாடு
வாஸ்து சாஸ்திரத்தின் படி, லட்சுமி தேவியின் சிலை மற்றும் குபேரனின் சிலையை வீடு அல்லது கடையின் வடக்கு திசையில் வைத்து தினமும் வழிபாடு செய்து வரவும். இதனால் உங்களுக்கு பண ஆதாயம் அதிகரிப்பதோடு, உங்களின் கடன் குறைய தொடங்கும் என நம்பப்படுகிறது.
4. வாஸ்து அமைப்பு குறைபாடுகள்
உங்கள் வீட்டின் தவறான வாஸ்து அமைப்புகள், குறிப்பாக வடக்கு திசையில் உள்ள குறைபாடுகள் உங்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கு கடினமாக்குவதோடு, மேலும் கடனாளியாக வாய்ப்புள்ளது. சமையலறை இந்த திசையில் இருக்கக்கூடாது. நெருப்பு மற்றும் மின்சாதனங்களை இங்கே வைப்பதை தவிர்க்கவும். இந்த வாஸ்து குறிப்புகள் மூலம் உங்கள் நிதி நிலையை மேம்படுத்தி மன நிம்மதி பெறலாம்.
முக்கிய வாஸ்து குறிப்புகள் சுருக்கம்
- சனிக்கிழமை அரச மர வழிபாடு: காலை மற்றும் மாலை நேரத்தில் அரச மரத்திற்கு அடியில் நான்கு முகம் கொண்ட விளக்கேற்றி வழிபாடு செய்யவும்.
- வடக்கு திசை பணப்பெட்டி: மகாலட்சுமியின் அம்சமான வடக்கு திசையில் பணப்பெட்டியை வைப்பது கடன் சுமையைக் குறைக்கும்.
- செவ்வாய்க்கிழமை கடன் அடைப்பு: வாங்கிய கடன் தொகையை செவ்வாய்க்கிழமைகளில் திருப்பி செலுத்த முயற்சி செய்யவும்.
- லட்சுமி மற்றும் குபேரன் சிலை: வீடு அல்லது கடையின் வடக்கு திசையில் லட்சுமி, குபேரன் சிலைகளை வைத்து வழிபட, பண ஆதாயம் அதிகரிக்கும்.
- வாஸ்து குறைபாடுகளைத் தவிர்க்கவும்: குறிப்பாக வடக்கு திசையில் சமையலறை, நெருப்பு மற்றும் மின்சாதனங்களை வைப்பதைத் தவிர்க்கவும்.