இந்துக்களின் பாரம்பரிய ஜோதிட முறைப்படி, எந்த ஒரு சுப காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து துவங்குவது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது. அதிலும் சுப முகூர்த்த நாட்களிலே நல்ல காரியங்களை துவக்குவது, செய்வது ஆகியவற்றை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி சில குறிப்பிட்ட முகூர்த்த நாள் மற்றும் நேரத்தில் துவங்கப்படும் செயல்களில் ஒளிமயமான எதிர்காலத்தை, வளர்ச்சியை, பெருக்கத்தை, அதிர்ஷ்டத்தை தரும் என்பது பெரும்பாலானவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக முருகன் அருள் வேண்டி செய்யப்படும் எந்த செயலிலும் சுப முகூர்த்த நாட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
சுப முகூர்த்த நாட்களின் முக்கியத்துவம்
சுப முகூர்த்த நாட்கள் மற்றும் நேரங்களில் இறைவனை மனதார நினைத்து, வணங்கி விட்டு செய்யப்படும் எந்த ஒரு செயலுக்கும் இறைவனின் அருள் முழுவதுமாக இருக்கும். இது வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி செல்வதற்கும், வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கும், வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைப்பதற்கும் உதவியாக இருக்கும். சுபகாரியங்களில் துவங்கப்படும் காரியங்கள் வெற்றியை தரும் என்பதால் இந்த நாட்களை தேர்வு செய்து துவக்குவது நல்லது.
திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்துவதற்கும் மட்டுமின்றி வாகனங்கள் போன்ற சொத்துக்கள் வாங்குவதற்கும் குறிப்பிட்ட நாளில் வரும் குறிப்பிட்ட நேரத்தில் வாங்குவது அல்லது அதற்கான பண பரிவர்த்தனை செய்வது, அதற்கான முன்பதிவு செய்வது அல்லது அதற்கான முயற்சிகளில் இறங்குவது ஆகியவற்றையும் இந்த சுப முகூர்த்த நாட்களில் செய்வது சிறப்பு. புதிய வாகனங்கள் வாங்குவது, புதிய தொழில் துவங்குவது, புது வீட்டிற்கு குடிபெயர்வது உள்ளிட்டவற்றிற்கு கிரகங்களின் நகர்வுகளின் அடிப்படையில் சுபமுகூர்த்த நாட்கள் குறிக்கப்படுகின்றன. அப்படி மோட்டார் வாகனங்களான் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்கு என தனியான முகூர்த்த நாட்கள் உள்ளன. அந்த வகையில் இறை அருள், நேர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றை அதிகம் பெறுவதற்கு செப்டம்பர் மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்கான சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் நேரங்களின் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். தமிழ் ஜோதிட சாஸ்திரப்படி இந்த நாட்கள் கணக்கிடப்பட்டுள்ளன.
செப்டம்பர் மாதம் வாகனம் வாங்க உகந்த சுப முகூர்த்த நாட்கள்:
செப்டம்பர் மாதத்தில் பண பரிவர்த்தனை செய்வதற்கும், வாகனங்கள் வாங்குவதற்கும், புதிய முதலீடுகள் செய்வதற்கும் ஏற்ற சுப முகூர்த்த நாட்கள் மற்றும் அந்த நாட்களில் வரும் நல்ல நேரம் ஆகியவற்றின் விபரங்கள் இதோ:
- செப்டம்பர் 05 & 06:காலை 06.01 முதல் செப்டம்பர் 06ம் தேதி பகல் 03.12 வரை
- செப்டம்பர் 07:காலை 06.02 முதல் இரவு 09.41 வரை
- செப்டம்பர் 24 & 25:காலை 06.10 முதல் செப்டம்பர் 25ம் தேதி காலை 06.11 வரை
- செப்டம்பர் 25:காலை 06.11 முதல் 07.06 வரை
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 4 சுபமுகூர்த்த நாட்கள் மட்டுமே உள்ளது. அதனால் வாகனங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் மேலே குறிப்பிட்ட இந்த நான்கு சுப முகூர்த்த நாட்களில் வரும் நல்ல நேரங்களில் வாகனங்களை வாங்குவது சிறப்பு. ஜோதிட ரீதியாக இவைகள் உகந்த நாட்களாகும்.