நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு விஷயத்தில் பொய் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். ஆனால், பொய் சொல்வதையே தங்களின் வாழ்க்கையாகக் கொண்ட சிலரால்தான் இருக்க முடியும். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், அதிகமாக பொய் சொல்லக்கூடிய 5 ராசிக்காரர்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். இது ஒரு சுவாரஸ்யமான ஜோதிட ஆய்வு!
பொய் சொல்வதில் கில்லாடி இந்த ராசிக்காரர்கள்!
மிதுனம் (Gemini)
புதன் பகவான் அதிபதியாகக் கொண்ட மிதுன ராசியினர் புத்திசாலித்தனமாகவும், இனிமையாகப் பேசக்கூடியவர்கள். இவர்களின் வசீகரமான மற்றும் நகைச்சுவையான பேச்சானது மற்றவர்களை எளிதில் நம்பும்படியாக இருக்கும். அதனால், இவர்கள் பேசுவது மெய்யா, பொய்யா எனக் கண்டுபிடிக்காத வகையில் மிக இயல்பாக பொய் சொல்வார்கள். 12 ராசிகளில் மிகச் சிறப்பாகப் பொய் சொல்லக்கூடியவர்கள் இந்த ராசியினர் எனச் சொல்லலாம். அதே சமயம், இவர்களின் பொய்யானது தங்களைக் காப்பாற்றிக் கொள்ளச் சொல்வார்கள்; மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்துடன் சொல்லமாட்டார்கள். (கணவன் மனைவி, மாமியார் மருமகள் சண்டையில் இருந்து விடுபட எளிய ஜோதிட நிவாரணம்.)
சிம்மம் (Leo)
நவகிரகங்களின் தலைவனான சூரியன் ஆளக்கூடிய சிம்ம ராசியினர் பெரும்பாலும் ஆளுமை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களின் குடும்பம் அல்லது பணியிடத்தை சிறப்பாக, கட்டுக்குள் வைத்திருக்கும் விதமாக சூழலைப் பாதிக்கக்கூடிய சில விஷயங்களை மறைப்பதும், அதற்காகப் பொய் சொல்லும் போக்கையும் கொண்டவராக இருப்பார்கள். இவர்கள் பொதுவாக மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் பொய் சொல்வதோடு, தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் ஹீரோவாக ஜொலிக்க நினைப்பார்கள். (நல்ல கணவன், நல்ல மனைவி கிடைக்க வழிபட வேண்டிய தெய்வம்? - ஜோதிட பரிகாரம்.)
துலாம் (Libra)
சுக்கிர பகவான் ஆளக்கூடிய துலாம் ராசியினர் வசதியாக, ஆடம்பரமாக வாழ நினைப்பார்கள். இவர்களின் செயல்பாடு இராஜதந்திரம் நிறைந்ததாக இருக்கும். தங்களின் வசதிக்காக, அதிக பொய் சொல்லக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். மேலும், தங்கள் உறவில் நல்லிணக்கமும், சமநிலையையும் பராமரிப்பதற்காக அவ்வப்போது சிறிய பொய்களைக் கூறுவார்கள். உதாரணமாக, தன் மனைவி சமைத்தது பிடிக்கவில்லை என்றாலும், அது நன்றாக இருக்கிறது. ஆனால் இப்படிச் சற்று மாற்றிச் செய்திருக்கலாம் எனப் பொய்யும், தங்களுக்குத் தேவையான வகையில் மாற்றவும் சொல்லிவிடுவார்கள். குடும்பத்திலும், பணியிடத்திலும் இவர்கள் சொல்லக்கூடிய பொய் யாராலும் கண்டுபிடிக்க முடியாததாகவும், தூய்மையான நோக்கத்துடன் சொல்வார்கள். (திருமண பொருத்தம்: வெற்றிகரமான காதல், திருமணம் வாழ்க்கை, விவாகரத்து யாருக்கு அமையும்? ஜோதிட அமைப்பு என்ன?)
விருச்சிகம் (Scorpio)
செவ்வாய் ஆளக்கூடிய விருச்சிக ராசியினர் பொய் சொல்வதில் சிறப்பாகச் செயல்படுவார்கள். அதோடு, தாங்கள் சொன்ன பொய்யை அப்படியே பராமரிப்பதில் கவனமாக இருப்பார்கள். தங்களுக்குத் தேவை என்றால் எதைப் பற்றியும், எங்கும் பொய் சொல்லத் தயங்கவே மாட்டார்கள். மேலும், சூழலுக்கு ஏற்றவாறு பொய் சொல்லி சமாளித்து விடுவார்கள். அவர்களின் பேச்சுக்களை உற்று நோக்கினால் மட்டுமே அவர்கள் சொல்வதில் சற்று பொய் இருக்கிறது என கண்டுபிடிக்க முடியும். (திருமணத்தின் போது களத்திர ஸ்தானம், குடும்பஸ்தானம் ஏன் கவனிக்க வேண்டும்?)
மீனம் (Pisces)
குரு ஆளக்கூடிய மீன ராசியினர் பொதுவாக மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். அதே சமயம், இவர்கள் மற்றவர்களின் உணர்வுகள் புண்படுவதைத் தவிர்க்க, உறவுகளில் நெருக்கமும், நல்லிணக்கத்தையும் பேண அவ்வப்போது பொய்களைச் சொல்லத் தயங்க மாட்டார்கள். தாங்கள் கூறக்கூடிய சிறிய பொய்களால் மற்றவர்களின் ஆன்மா பாதிக்காமல் இருக்க, உணர்வுகளை மதிப்பதற்காகப் பொய்கள் சொல்வார்கள். அதோடு, அவர்கள் சொல்லக்கூடிய பொய்க்காக உடனே வருத்தம் தெரிவிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். (Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்)
முக்கிய அம்சங்கள்
இந்த பதிவில் நாம் கண்டறிந்த பொய் சொல்லும் ராசிகளின் முக்கிய அம்சங்கள்:
- மிதுனம்: புத்திசாலித்தனம் மற்றும் இனிமையான பேச்சால் இயல்பாகப் பொய் சொல்வார்கள்.
- சிம்மம்: ஆளுமைக்காகவும், சூழலைக் கட்டுக்குள் வைக்கவும் பொய் சொல்வார்கள்.
- துலாம்: ஆடம்பர வாழ்க்கை, இராஜதந்திரம், உறவில் நல்லிணக்கம் பேண பொய் சொல்வார்கள்.
- விருச்சிகம்: தேவைப்பட்டால் தயங்காமல் பொய் சொல்வார்கள், அதை அப்படியே பராமரிப்பார்கள்.
- மீனம்: மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் இருக்க பொய் சொல்வார்கள், உடனே வருத்தப்படுவார்கள்.
இந்த ஜோதிடக் குறிப்புகள் வெறும் வழிகாட்டுதல்கள் மட்டுமே. ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணாதிசயங்களும் வேறுபடலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
ஜோதிடத்தின்படி, மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மீனம் ஆகிய 5 ராசிக்காரர்கள் அதிகம் பொய் சொல்லக்கூடியவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
மிதுன ராசியினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், மற்றவர்களுக்குத் தீங்கிழைக்காத வகையிலும் மிக இயல்பாகப் பொய் சொல்வார்கள். இவர்களின் இனிமையான பேச்சு நம்பும்படியாக இருக்கும்.
பொதுவாக, இந்த ராசிக்காரர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, உறவுகளைப் பேண, அல்லது சூழலைக் கட்டுக்குள் வைத்திருக்கவே பொய் சொல்வார்கள். மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணம் பெரும்பாலும் இருக்காது.