Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

சப்த சிரஞ்சீவி மந்திரங்கள்: நோய்கள் நீங்கி, நீண்ட ஆயுள் பெற

புராணங்களில் குறிப்பிடப்படும் சப்த சிரஞ்சீவிகள் மரணத்தை வென்றவர்கள் என்றும், கலியுகத்திலும் உயிருடன் வாழ்வதாக ஐதீகம். இவர்கள் அனைவரையும் நினைத்து உச்சரிக்கும் சக்திவாய்ந்த மந்திரங்கள், தீராத நோய்களை குணப்படுத்தி, நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கும் வல்லமை கொண்டவை. ஜோதிடம் 360 உங்களுக்காக இந்த சப்த சிரஞ்சீவி மந்திரங்களை இங்கே வழங்குகிறது.

சப்த சிரஞ்சீவிகள் யார்?

சிரஞ்சீவிகள் என்றால் மரணத்தை வென்றவர்கள் என்று பொருள். இவர்கள் பல யுகங்கள் கடந்தாலும் அழிவின்றி, உயிருடன் இருப்பார்கள் என சொல்லப்படுகிறது. கலியுகத்திலும் இவர்கள் மனிதர்களின் கண்களுக்குத் தெரியாமல் உயிருடன் இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. அடிக்கடி நோயால் பாதிக்கப்படுபவர்கள் இந்த சப்த சிரஞ்சீவிகளையும் தொடர்ந்து வழிபட்டு வந்தால், நோய் நீங்கி குணம் பெற முடியும்.

  • 1. அனுமன்
  • 2. விபீஷணன்
  • 3. மகாபலி சக்கரவர்த்தி
  • 4. மார்க்கண்டேயர்
  • 5. வியாசர்
  • 6. பரசுராமர்
  • 7. அசுவத்தாமன்

தீராத நோய்கள் விரைவாகத் தீர, இந்த சப்த சிரஞ்சீவிகளை நினைத்து அவர்களுக்கான மூல மந்திரங்களை உச்சரித்து வந்தால், தீராத நோய்கள் தீர்ந்து நல் ஆரோக்கியத்துடன் வாழலாம். அகால மரணம் ஏற்படாமல் காக்கும். உடல் நலம் குறை உள்ளவர்கள் ஏதேனும் மருந்து உட்கொண்டு வந்தால், மருந்து சாப்பிடும் முன்னர் இந்த மந்திரங்களை ஒரு முறையேனும் ஜெபித்து வந்தால் அவர்களின் நோய் விரைவில் குணமடைந்து உடல் நலம் பெறலாம்.

சப்த சிரஞ்சீவி மூல மந்திரம்

இந்த மந்திரத்தை வலது கையில் ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு, அதில் ஒன்றிரண்டு அறுகம்புல் போட்டு, வடக்கு நோக்கி நின்று அல்லது அமர்ந்து 21 முறை ஜெபிக்க வேண்டும். பின்னர் அந்த நீரை அருந்தி வந்தால் தீராத நோய்கள் தீர்ந்து நல் ஆரோக்கியம் பெறலாம்.

"ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயாய நமஹ ஓம் ஸ்ரீ பரசுராமாய நமஹ ஓம் ஸ்ரீ மார்க்கண்டேயர் நமஹ ஓம் ஸ்ரீ மகாபலி மக்கரவர்த்தி நமஹ ஓம் ஸ்ரீ வேதவியாசாய நமஹ ஓம் ஸ்ரீ அஸ்வத்தாமா நமஹ ஓம் ஸ்ரீ விபீஷணாய நமஹ"

உடல்நலம் இல்லாதவர்கள் விரைவில் தேறிவர, அவர்கள் எழுந்த உடனும், உறங்கும் முன்னரும் ஏழு முறையாவது அவர்கள் முன் ஜெபிக்க வேண்டும். மருந்து உட்கொள்ளும் முன் இந்த மந்திரங்களை ஒரு முறையேனும் ஜெபித்து வந்தால், நோய் விரைந்து குணமாகும்.

சப்த சிரஞ்ஜீவி காயத்ரி மந்திரங்கள்

சிரஞ்சீவி பெயர்காயத்ரி மந்திரம்
அசுவத்தாமன்"ஓம் ஸ்திராயுஷ்மன்தாய வித்மஹே துரோணபுத்ராய தீமஹி தன்னோ அஸ்வத்தாம ப்ரசோதயாத்"
மகாபலி"ஓம் மஹாபுருஷாய வித்மஹே யஸோதநாய தீமஹி தன்னோ மஹாபலி ப்ரசோதயாத்"
வேத வியாசர்"ஓம் சர்வ சாஸ்த்ராய வித்மஹே முனிஸ்ரேஷ்டாய தீமஹி தன்னோ வியாஸ ப்ரசோதயாத்"
விபீஷணன்"ஓம் ராம பக்தாய வித்மஹே சர்வாஸ்ரயாய தீமஹி தன்னோ விபீஷண ப்ரசோதயாத்"
அனுமன்"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்"
மார்கண்டேயர்"ஓம் மார்க்கண்டாய வித்மஹே சிரஞ்சீவாய தீமஹி தந்நோ ம்ருத்யு ப்ரசோதயாத்"
பரசுராமர்"ஓம் ஜமதக்நாய வித்மஹே மஹாவீராய தீமஹி தந்நோ பரசுராமர் ப்ரசோதயாத்"

இந்த மந்திரங்களை சொல்ல சொல்ல உடல் வலிமை, ஆரோக்கியம் ஏற்படும், நோய்கள் விலகும். எதிரிகளின் சூழ்ச்சிகளை வெல்ல முடியும். ஆபத்துக்களில் இருந்து விடுபடலாம். ஜோதிடம் 360 வழங்கும் இந்த மந்திரங்கள் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டுவரும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

புராணங்களின்படி, சிரஞ்சீவிகள் என்பவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர்கள். இவர்கள் கலியுகத்திலும் உயிருடன் வாழ்வதாக ஐதீகம். அனுமன், விபீஷணன், மகாபலி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் ஆவர்.

இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் தீராத நோய்கள் குணமாகும், உடல் ஆரோக்கியம் மேம்படும், அகால மரணம் தவிர்க்கப்படும், எதிரிகளின் சூழ்ச்சிகள் அகலும், மேலும் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

சப்த சிரஞ்சீவி மூல மந்திரத்தை வடக்கு நோக்கி நின்று அல்லது அமர்ந்து, வலது கையில் அறுகம்புல் போட்ட தண்ணீருடன் 21 முறை ஜெபித்து அந்த நீரை அருந்தலாம். காயத்ரி மந்திரங்களை தனித்தனியாகவும் உச்சரிக்கலாம். நோய்வாய்ப்பட்டவர்கள், மருந்து உட்கொள்ளும் முன் ஜெபிப்பது சிறப்பு.

Our Other Services