Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

நவம்பர் 2025 பண்டிகைகள், விரத நாட்கள் மற்றும் சுப முகூர்த்தம் - முழு விவரங்கள்

ஆங்கில காலண்டரில் 11வது மாதமான நவம்பர் மாதம் குளுமை, மழை என இரு காலநிலைகளையும் கொண்டது. ஆன்மீக ரீதியாக, இது வாழ்வில் உயர்ந்த நிலை, முக்தி நிலை மற்றும் பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் சேர்க்க உகந்த மாதமாக கருதப்படுகிறது. சிவ வழிபாட்டிற்குரிய ஐப்பசி மாதமும், ஹரிஹர சுதனான ஐயப்ப வழிபாட்டிற்குரிய கார்த்திகை மாதமும் இணையும் மாதமாக இது அமைகிறது. இந்த மாதத்தில் வரும் முக்கிய விசேஷங்கள், விரத நாட்கள், சுப முகூர்த்தங்கள் மற்றும் ஜோதிட ரீதியான முக்கிய தினங்களை இங்கு விரிவாகக் காணலாம். குறிப்பாக முருகன் வழிபாட்டிற்கு உகந்த கிருத்திகை போன்ற தினங்களும் இதில் அடங்கும்.

நவம்பர் 2025 முக்கிய விசேஷங்கள்

ஆங்கில மாதம் தமிழ் மாதம் கிழமை விசேஷம்
நவம்பர் 05 ஐப்பசி 19 புதன் மஹா அன்னாபிஷேகம்

நவம்பர் 2025 விரத நாட்கள்

விரதங்கள் ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை
அமாவாசை நவம்பர் 19 கார்த்திகை 03 புதன்
பெளர்ணமி நவம்பர் 05 ஐப்பசி 19 புதன்
கிருத்திகை நவம்பர் 06 ஐப்பசி 20 வியாழன்
திருவோணம் நவம்பர் 26 கார்த்திகை 10 புதன்
ஏகாதசி நவம்பர் 01, நவம்பர் 15 ஐப்பசி 15, ஐப்பசி 29 சனி, சனி
சஷ்டி நவம்பர் 10, நவம்பர் 26 ஐப்பசி 24, கார்த்திகை 10 திங்கள், புதன்
சங்கடஹர சதுர்த்தி நவம்பர் 08 ஐப்பசி 22 சனி
சிவராத்திரி நவம்பர் 18 கார்த்திகை 02 செவ்வாய்
பிரதோஷம் நவம்பர் 03, நவம்பர் 17 ஐப்பசி 17, கார்த்திகை 01 திங்கள், திங்கள்
சதுர்த்தி நவம்பர் 24 கார்த்திகை 08 திங்கள்

நவம்பர் 2025 சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை முகூர்த்தம்
நவம்பர் 03 ஐப்பசி 17 திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
நவம்பர் 10 ஐப்பசி 24 திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
நவம்பர் 16 ஐப்பசி 30 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
நவம்பர் 23 கார்த்திகை 07 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
நவம்பர் 27 கார்த்திகை 11 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
நவம்பர் 30 கார்த்திகை 14 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்

நவம்பர் 2025 அஷ்டமி, நவமி, கரி நாட்கள்

திதி ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை
அஷ்டமி நவம்பர் 12, நவம்பர் 28 ஐப்பசி 26, கார்த்திகை 12 புதன், வெள்ளி
நவமி நவம்பர் 13, நவம்பர் 29 ஐப்பசி 27, கார்த்திகை 13 வியாழன், சனி
கரி நாட்கள் நவம்பர் 06, நவம்பர் 17, நவம்பர் 26 ஐப்பசி 20, கார்த்திகை 01, கார்த்திகை 11 வியாழன், திங்கள், புதன்

நவம்பர் 2025 வாஸ்து நாள் மற்றும் சுபமுகூர்த்த நேரம்

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை வாஸ்து நேரம்
நவம்பர் 24 கார்த்திகை 08 திங்கள் காலை 11.29 முதல் பகல் 12.05 வரை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

நவம்பர் 05 அன்று மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் இந்த மாதம் முழுவதும் பல முக்கிய விரத நாட்கள் மற்றும் சுப முகூர்த்தங்கள் ஜோதிடம் ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அமாவாசை, பௌர்ணமி, முருகன் வழிபாட்டிற்கு உகந்த கிருத்திகை, திருவோணம், ஏகாதசி, சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி, சிவராத்திரி, பிரதோஷம் ஆகியவை நவம்பர் மாதத்தின் முக்கிய விரத நாட்கள் ஆகும்.

ஆம், நவம்பர் மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறை முகூர்த்த நாட்கள் பல உள்ளன. இந்த சுப முகூர்த்தம் நாட்கள் திருமணங்கள், புதுமனை புகுவிழா போன்ற சுப காரியங்களுக்கு உகந்தவை என ஜோதிடம் கூறுகிறது.

Our Other Services