நவராத்திரி என்பது அம்பிகை வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான காலம். இந்த ஒன்பது நாட்களும் அம்பிகையை விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்வில் உள்ள தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்களை வழிபடும் இந்த நவராத்திரி விழா குறித்த முழுமையான தகவல்களை இங்கு காணலாம். ஜோதிடம் மற்றும் ஆன்மீக தகவல்களுக்கு jothidam360.in ஐ தொடர்ந்து பார்வையிடுங்கள்.
நவராத்திரி 2024 முக்கிய தேதிகள் மற்றும் வழிபாட்டு முறை
இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22ம் தேதி துவங்கி, அக்டோபர் 01ம் தேதி சரஸ்வதி பூஜையுடன் நிறைவடைகிறது. அக்டோபர் 02ம் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ளது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகையை விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்வில் இருக்கும் தீமைகள், துன்பங்கள் அனைத்தும் விலகி, அம்பிகையின் அருளால் அதிகம் நன்மைகள் நடைபெறும் என்பது தமிழ் கலாச்சாரத்தில் ஒரு நம்பிக்கை.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிகையை துர்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியாகவும், கடைசி மூன்று நாட்கள் கலைமகளாவும் (சரஸ்வதி) பாவித்து வழிபடுவது வழக்கம். இதனால் முப்பெரும் தேவியர்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நவராத்திரி வழிபாட்டு முறைகள்:
- கொலு அமைத்து வழிபடுதல்
- கலசம் அமைத்து வழிபடுதல்
- படம் வைத்து வழிபடுதல்
- அகண்ட தீபம் ஏற்றி வைத்து வழிபடுதல்
நவராத்திரி கொலு வைப்பதற்கான நல்ல நேரம்
கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுபவர்கள், சில சமயங்களில் முந்தைய நாளான மகாளய அமாவாசை நாளிலேயே கொலு பொம்மைகளை அடுக்க துவங்கி விடுவார்கள். இன்னும் சிலர் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து மூன்று நாட்களுக்கு முன்பே அடுக்க துவங்கி விடுவார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரங்கள் கொலு அமைப்பதற்கு உகந்தவை.
செப்டம்பர் 21ம் தேதி நல்ல நேரம்:
- காலை 6:00 முதல் 11:50 வரை
- மாலை 6:00 மணிக்கு மேல் (வழிபாட்டினை துவங்கலாம்)
செப்டம்பர் 21ம் தேதி மகாளய அமாவாசை வருவதால் அதிகமான வேலை இருக்கும். கொலு பொம்மைகளை அடுக்க முடியாது என்பவர்களும், செப்டம்பர் 21ம் தேதி இரவு சூரிய கிரகணம் நிகழ உள்ளதாலும் அன்றைய தினம் பொம்மைகளை அடுக்க வேண்டாம் என நினைப்பவர்களும், பின்வரும் நாட்களில் அடுக்கலாம்.
செப்டம்பர் 22ம் தேதி நல்ல நேரம்:
- காலை 6:00 முதல் 07:20 வரை
- காலை 09:10 முதல் 10:20 வரை
இந்த நேரத்தில் வழிபாட்டினை துவக்க முடியவில்லை என்றால், நவராத்திரி முதல் நாள் வழிபாட்டுடன் சேர்த்து மாலை 6 மணிக்கு பிறகு வழிபாட்டினை துவக்கிக் கொள்ளலாம்.