சிறுநீர் பாதை தொற்றை நாம் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது தீவிரமான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், மேலும் அலட்சியம் செய்தால் சிறுநீரகங்களில் தொற்றுக்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்த பிரச்சனையால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். கழிப்பறை சுகாதாரம் மற்றும் சிறுநீரை அடக்கி வைத்தல் போன்ற காரணிகள் இதற்கு காரணமாக அமைகின்றன.
சிறுநீர் பாதை தொற்று (Urinary Tract Infection - UTI) ஆண், பெண் இருவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று என்றாலும், ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு தான் இது மிக அதிக அளவில் வருகிறது. ஆய்வுகளின்படி, பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தத் தொற்றை அனுபவிக்கிறார்கள். சிறுநீர்ப்பாதை தொற்று என்பது சிறுநீர் குழாய் பகுதியில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது. இந்த கட்டுரை சிறுநீர் பாதை தொற்றுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி விளக்குகிறது.
சிறுநீர்ப்பாதை தொற்றின் முக்கிய அறிகுறிகள்
- பிறப்புறுப்பு பகுதிகளில் கடுமையான அரிப்பும், எரிச்சலும்.
- கடுமையான அடிவயிற்று வலி.
- சிறுநீர் வெளியேறும் போது அதிக துர்நாற்றத்துடன் இருத்தல்.
- அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுதல்.
பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏன் அதிகமாக ஏற்படுகிறது?
பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று அதிகமாக ஏற்படுவதற்கு அவர்களின் உடல் அமைப்பு ஒரு முக்கிய காரணம். இதனுடன் வேறு பல காரணிகளும் உள்ளன:
- பாலியல் தொடர்பு.
- கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு.
- பிறப்புறுப்பு சுகாதாரமின்மை.
- மெனோபாஸ் (மாதவிடாய் நிறுத்தம்).
- நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்).
- பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம்.
- சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்தல்.
சிறுநீர் பாதை தொற்றைக் குறைக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்
சிறுநீர் பாதை தொற்றிலிருந்து நிவாரணம் பெற சில எளிய வீட்டு வைத்தியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
சீரக தண்ணீர்
தினமும் சீரகத் தண்ணீர் குடிக்கும்போது உடலில் ஏராளமான நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடல் எடை குறைவது, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது, ஜீரண ஆற்றலை மேம்படுத்துவது போன்றவற்றுக்கு இது உதவுகிறது. சீரகத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் பிறப்புறுப்பு பகுதிகளில் உண்டாகும் கிருமி தொற்றுகளை அளித்து சரிசெய்யும். சிறுநீர் பாதை தொற்று இருக்கும் சமயத்தில், தொடர்ந்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை சீரகத் தண்ணீரை காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் எடுத்துக்கொள்ள நல்ல மாற்றம் தெரியும்.
அதிக தண்ணீர் குடித்தல்
பொதுவாக பெண்கள் அதிகமாக தண்ணீர் குடிப்பதில்லை. இதுவும் பிறப்புறுப்பு பகுதியில் வறட்சியை ஏற்படுத்தும். தினசரி நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக சிறுநீர் பாதை தொற்று இருக்கும் சமயத்தில் வழக்கத்தை விட இரண்டு டம்ளர் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். அது சிறுநீர் பாதையில் ஏற்பட்டிருக்கும் தொற்றுகளையும் வெளியேற்றி, அதன் தீவிரத்தைக் குறைக்கும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீராவது குடிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
முறையான பிறப்புறுப்பு சுகாதாரம்
சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று பிறப்புறுப்பு சுகாதாரம். முடிந்தவரையில் பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. அதேசமயம், சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருக்கவும் கூடாது, அது மிகவும் ஆபத்தானது. சிறுநீர் கழித்து முடித்தவுடன் பிறப்புறுப்பு பகுதியைச் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். ஆனால் பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்வதற்கு சோப்பு போன்ற ரசாயனப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
இறுதியாக, பெண்களுக்கு ஏன் அதிகமாக சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதை நம்முடைய அன்றாட சில பழக்கவழக்கங்கள் மற்றும் எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எப்படி தடுக்க முடியும் என்பதை இந்த கட்டுரையில் பார்த்திருப்பீர்கள். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி சிறுநீர்ப்பாதை தொற்று வராமல் தடுத்து உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இது எந்தவித மருந்து மற்றும் மருத்துவரின் சிகிச்சைக்கு இணையான ஒன்று அல்ல. இதன் உண்மை தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறனுக்கு Jothidam360 பொறுப்பாகாது.