Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

குலதெய்வ வழிபாடு: முக்கியத்துவம், வழிபடும் முறைகள் மற்றும் ஏற்ற நாட்கள்

நம் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வந்த குலதெய்வம் நம் வாழ்வின் அடிப்படையாகும். குலதெய்வத்தின் அருளைப் பெற்றால் மட்டுமே நாம் மற்ற தெய்வங்களின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும். இந்த வழிகாட்டியில், குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம், அதை எப்படி தெரிந்து கொள்வது, மற்றும் எந்த நாட்களில் வழிபட சிறப்பானது என்பதை விரிவாகக் காண்போம்.

குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம்?

ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வம் என எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அவற்றை எவ்வளவு தீவிரமாக வழிபட்டாலும் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வந்த குலதெய்வத்தை வழிபட வேண்டியது மிக மிக அவசியம். குல தெய்வத்தை முறையாக வழிபட்டு, குலதெய்வத்தின் அருளை பெற்றால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அருளை பெற முடியும். வாழ்க்கையில் பல விதமான துன்பங்கள், தடைகள், பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் அந்த நிலை மாற வேண்டும் என்றால் முறையாக குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

குலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி?

குலதெய்வம் தெரிந்தவர்கள் அதை வழிபடலாம். ஆனால் சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குலதெய்வத்தை தெரிந்து கொள்ள நினைத்தால் தினமும் பூஜை அறையில் நெய் விளக்கேற்றி வைத்து மனதார வழிபடலாம். குலதெய்வம் எது என தெரிய வேண்டும் என வேண்டிக் கொண்டு 48 நாட்கள் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் யாராவது உறவினர்கள் மூலமாகவோ அல்லது கனவிலோ குலதெய்வம் யார் என தெரிய வரும். அப்படியும் தெரியவில்லை என்பவர்கள் நாடி ஜோதிடத்தில் குலதெய்வ காண்டத்தை பார்த்து தங்களின் குலதெய்வம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது ஜோதிடம் மூலம் ஒரு தீர்வாகும்.

குலதெய்வத்தின் அருளைப் பெற...

குலதெய்வம் கோவிலுக்கு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ சென்று கண்டிப்பாக வழிபட்டு விட்டு வர வேண்டும். குலதெய்வம் கோவில் வெகு தொலைவில் உள்ளது, அடிக்கடி செல்ல முடியாது என்பவர்கள் வீட்டில் குலதெய்வத்தின் படத்தை வைத்து மிக எளிமையாக அதற்கு பூப்போட்டு தினமும் வழிபட்டு வரலாம். அதுவும் முடியாதவர்கள் இன்னும் எளிமையாக தினமும் காலையில் எழுந்ததும் குலதெய்வத்தை மனதில் நினைத்து, "இன்றைய நாள் சிறப்பானதாக இருக்க வேண்டும். அனைத்தும் நல்லவையாக நடக்க அருள் செய்" என மனதார வேண்டிக் கொண்டு தினசரி பணிகளை செய்வதால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

குலதெய்வத்தை வழிபட ஏற்ற நாட்கள் மற்றும் கிழமைகள்

குலதெய்வத்தை வழிபடுவதற்கும், குல தெய்வம் கோவிலுக்கு செல்வதற்கும் அனைத்து நாட்களும் விசேஷமானவை தான். இருந்தாலும் அமாவாசை மற்றும் பெளர்ணமி ஆகிய இரண்டு நாட்களும் குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றவையாகும். இந்த இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாளில் குலதெய்வம் கோவிலுக்கு நேரில் சென்றோ அல்லது வீட்டிலேயோ குலதெய்வத்திற்கு ஏதாவது நைவேத்தியம் செய்து படைத்து, வழிபட்டு வரலாம். இதுனால் குலதெய்வத்தின் அருள் எப்போதும் வீட்டில் நிறைந்திருக்கும். அதே போல் இந்த இரண்டு நாட்களில் குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதுடன் சிறப்பானதாக இருக்கும்.

கிழமை என்று எடுத்துக் கொண்டால் குலதெய்வத்தை வழிபட்டு, குலதெய்வத்தின் பரிபூரண அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுவது ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகள். ஒருவேளை உங்களின் குலதெய்வம் சிவ பெருமானாகவோ அல்லது சிவனுடன் தொடர்புடைய முனீஸ்வரர் போன்ற தெய்வங்களாக இருந்தால் திங்கட்கிழமையில் சென்று வழிபடலாம். முருகனுடன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால் செவ்வாய்கிழமையில் சென்று வழிபடலாம். முருகன் ஆலயங்கள் மற்றும் ஆறுபடை வீடுகள் வழிபாட்டிற்கு செவ்வாய்க்கிழமை மிகவும் உகந்தது. பெருமாளுடன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால் புதன் மற்றும் சனிக்கிழமையில் சென்று வழிபடலாம். அம்பாள் அல்லது பெண் தெய்வமாக இருந்தால் வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடலாம்.

குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்

குலதெய்வ வழிபாடே இதுவரை குடும்பத்தில் செய்தது கிடையாது. குலதெய்வம் தெரியாது. கண்டுபிடிக்க வழியே இல்லை என்பவர்கள் ஏதாவது தெய்வத்தை குலதெய்வமாக ஏற்ற நினைப்பவர்கள் ஆண் தெய்வங்களில் முருகப் பெருமானை குலதெய்வமாக ஏற்கலாம். முருகப் பெருமான் வழிபாட்டில் அனைத்து தெய்வ வழிபாடுகளும் அடங்குவதால் அவரை குலதெய்வமாக ஏற்று வழிபடலாம். பெண் தெய்வத்தை குலதெய்வமாக ஏற்ற வேண்டும் என்றால் காமாட்சி அம்மனை குலதெய்வமாக ஏற்றலாம். காமாட்சிக்குள் முப்பெரும் தேவர்களும் அடக்கம். மூன்று தேவியரின் அம்சமாகவும் விளங்குபவள் அவள் தான். ஒருவேளை வைண தெய்வத்தை குலதெய்வமாக ஏற்ற விரும்பினால் திருப்பதி ஏழுமலையானை குலதெய்வமாக நினைத்து வணங்கலாம்.

முக்கிய அம்சங்கள்

  • குலதெய்வ வழிபாடு அவசியம்: முன்னோர்களின் அருளையும், பிற தெய்வங்களின் ஆசீர்வாதத்தையும் பெற குலதெய்வ வழிபாடு அடிப்படையானது.
  • குலதெய்வத்தை கண்டறியும் வழிகள்: நெய் விளக்கு ஏற்றி வழிபடுதல் அல்லது நாடி ஜோதிடம் மூலம் அறிதல்.
  • வழிபாட்டிற்கு உகந்த நாட்கள்: அமாவாசை, பௌர்ணமி, ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகள் சிறப்பு. முருகன் ஆலயங்கள் வழிபாட்டிற்கு செவ்வாய் உகந்தது.
  • தெய்வம் தெரியாதவர்களுக்கு: முருகப் பெருமான், காமாட்சி அம்மன், திருப்பதி ஏழுமலையான் ஆகியோரை குலதெய்வமாக ஏற்றுக் கொள்ளலாம். ஆறுபடை வீடுகள் முருகனின் முக்கிய தலங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

முன்னோர்களின் ஆசீர்வாதத்தையும், மற்ற தெய்வங்களின் அருளையும் பெற குலதெய்வ வழிபாடு மிக அவசியம். இது வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் மற்றும் தடைகளை நீக்கும் சக்தி கொண்டது.

குலதெய்வம் தெரியாதவர்கள் 48 நாட்கள் நெய் விளக்கேற்றி மனதார வழிபடலாம் அல்லது நாடி ஜோதிடம் மூலம் அறியலாம். ஆண் தெய்வங்களில் முருகப் பெருமானையும், பெண் தெய்வமாக காமாட்சி அம்மனையும், வைணவ தெய்வமாக திருப்பதி ஏழுமலையானையும் வழிபடலாம்.

அமாவாசை, பௌர்ணமி, ஞாயிறு மற்றும் வியாழக்கிழமை ஆகியவை குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்ற நாட்கள். முருகன் ஆலயங்கள் மற்றும் ஆறுபடை வீடுகள் வழிபாட்டிற்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு.

Our Other Services