பெண் தெய்வ வழிபாடு, குறிப்பாக அம்பாள் வழிபாடு, மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் செய்யப்படும் அம்பாள் வழிபாடு அதிசக்தி வாய்ந்தது. சக்தி பீடங்களில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சிறப்பிடம் பெறுகிறது. காஞ்சி மகாபெரியவா அருளிய சக்தி வாய்ந்த காமாட்சி அம்மன் பூஜை முறைகளை இங்கே காண்போம். உங்கள் விருப்பங்கள் நிறைவேற காமாட்சி அம்மனை வீட்டிலிருந்தபடியே எவ்வாறு வழிபடுவது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
காஞ்சி காமாட்சி அம்மனின் மகிமை
பெண் தெய்வ வழிபாடு என்பது சிறப்புக்குரிய, சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது. அதிலும் அம்பாள் வழிபாடும், ஆடி மாதத்தில் செய்யப்படும் அம்பாள் வழிபடும் அதிசக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட அம்பாளக்குரிய சக்தி வாய்ந்த பீடங்களில் ஒன்றாக திகழ்வது தான் காஞ்சிபுரம்.
காஞ்சி காமாட்சி அம்மனை முழு மனதோடு சரணாகதி அடைந்து வழிபாடு செய்து விட்டால் அம்மனின் அருளால் நாம் நினைத்தது நடக்கும் என காஞ்சி மகான் என அழைக்கப்படும் காஞ்சி மகாபெரியவா கூறி உள்ளார். சக்தி பீடங்களில் அம்பிகையின் நாபிக்கமலம் விழுந்த இடமாக கருதப்படுவது காஞ்சிபுரம். இங்கு அம்பிகை முப்பெரும் தேவியரின் வடிவமாக காட்சி தருகிறாள்.
காமாட்சி அம்மனின் ஒரு கண்ணில் மகாலட்சுமியும், மற்றொரு கண்ணில் சரஸ்வதியும் இருந்து அருள் செய்வதாக ஐதீகம். இங்கு அம்பிகையே மகாசக்தியாக விளங்குவதால் காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவில் தவிர மற்ற எந்த சிவன் கோவிலிலும் அம்பாளுக்கு என தனி சன்னதி இருக்காது. இப்படி பல சிறப்புக்களையும், பேராற்றலையும் உடைய காமாட்சி அம்மனை வீட்டில் இருந்த படியே எப்படி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மகாபெரியவா அருளிய காமாட்சி அம்மன் பூஜை முறை
சொடுக்கு போடும் நேரத்தில் பலரது பிரச்சனைகளை தீர்த்து வைத்து, பலரது வாழ்க்கையையும் மாற்றி அமைத்தவர் காஞ்சி மகாபெரியவா. இன்றும் பலரது இல்லங்களில் அவரை மானசீக குருவாக கருதி பலரும் வழிபட்டு வருகிறார்கள். அவரும் பலருக்கும் வழிகாட்டி வருகிறார்.
அவர் சொன்ன மிகவும் சக்தி வாய்ந்த காஞ்சி காமாட்சி வழிபாட்டை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக 16 வாரங்கள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இதற்கு மொத்தம் 16 அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று காலையிலோ அல்லது மாலையிலோ இந்த வழிபாட்டினை செய்யலாம். இந்த பூஜை முறையால் உங்கள் ஜோதிட ரீதியான தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
பூஜை செய்யும் படிகள்:
- வீட்டின் பூஜை அறையில் ஒரு இடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தை பன்னீர் தெளித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- அந்த இடத்தில் பச்சரிசி மாவினால் கோலம் போட்டு காமாட்சி அம்மனின் படத்தை வைத்துக் கொள்ள வேண்டும். சந்தனம், குங்குமம் வைத்து, வாசனையான மலர்கள் சாற்றி, காமாட்சி அம்மனுக்கு ஏதாவது ஒரு நைவேத்தியம் படைக்க வேண்டும்.
- வெற்றிலை பாக்கு கண்டிப்பாக வைத்து, ஒரு வாழைப்பழம் படைத்து கூட வழிபடலாம்.
- பிறகு ஒரு அகல் விளக்கை எடுத்து, நெய் ஊற்றி, பஞ்சுத்திரி போட்டு தீபமேற்ற வேண்டும்.
- தீபம் ஏற்றிய பிறகு காமாட்சி அம்மனின் அஷ்டோத்திரம் பாராயணம் செய்ய வேண்டும்.
- பிறகு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாட்டினை நிறைவு செய்ய வேண்டும். மறுநாள் அந்த அகல் விளக்கை எடுத்து சுத்தம் செய்து பத்திரமாக வைக்க வேண்டும்.
இரண்டாவத வாரம், முதல் வாரம் ஏற்றிய அகல் விளக்கையும் ஏற்றி, அதோடு புதிதாக மற்றொரு விளக்கை எடுத்து இரண்டு தீபமாக ஏற்றி, இதே போல் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். இது போல் 16 வெள்ளிக்கிழமைகள் ஒவ்வொரு விளக்காக கூட்டிக் கொண்டே செல்ல வேண்டும். கடைசியாக 16வது வாரத்தில் 16 அகல் விளக்குகளை ஏற்றி வைத்து காமாட்சி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.
கடைசி வாரம் தங்களால் முடிந்த அளவு பிறருக்கு தானம், பிரசாதம் அதிகமாக செய்தோ தானமாகவோ வழங்க வேண்டும். இப்படி வழிபடுவதன் மூலம் என்ன நினைத்து நீங்கள் இந்த வழிபாட்டினை செய்தீர்களோ, அந்த வழிபாடு காமாட்சி அம்மனின் அருளால் விரைவில் நிறைவேறும். முருக பக்தர்களும் இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் மேற்கொள்ளலாம்.