மனிதர்களில் பெரும்பாலானோருக்குத் தான் பணக்காரன் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அல்லது தன்னைவிட வாழ்க்கைத் தரத்தில் முன்னேறி இருக்கக்கூடிய நபர்களின் அளவிற்காவது முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒருவருக்கு பணக்காரன் ஆகவும், மரியாதை அதிகம் பெற்ற வாழ வேண்டும் என்ற மனநிலை அனைவரிடமும் இருக்கும். ஒருவரின் நிதிநிலை தொடர்பான முன்னேற்றமும், கோடீஸ்வரனாக கூடிய வாய்ப்பையும் தரக்கூடிய சில கனவுகள் குறித்து சொப்பன சாஸ்திரம் மற்றும் ஜோதிடம் என்ன சொல்கிறது என இங்கு தெரிந்து கொள்வோம்.
கனவில் பணம் பெறுவது: மங்களகரமான கனவு பலன்
பல நேரங்களில் நமக்கு வரக்கூடிய கனவில் ஒருவரிடம் இருந்து பணம் பெறுவது அல்லது எடுப்பது போன்று கனவு வரும். அத்தகைய கனவு வந்தால் அது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
இத்தகைய கனவு எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய வெற்றியை தருவதாக அமையும். உங்கள் நிஜ வாழ்க்கையில் விரைவில் பணக்காரனாகக் கூடிய வாய்ப்பை உருவாக்கும்.
லாட்டரி அல்லது பரிசு மூலம் பணம் வெல்லும் கனவு
சொப்பன சாஸ்திரத்தின் படி ஒருவரின் கனவில், லாட்டரி சீட்டில் பணம் வெல்வது போன்ற கனவு, சிலருக்கு பரிசு, ஊக்கத்தொகை போன்ற அவற்றின் மூலம் பணம் வெல்வது போன்ற கனவு கண்டால், அவரின் வாழ்க்கையில் நிதிநிலை சார்ந்த திருப்தியை அடைவார்கள்.
அவர்களின் கனவின் மூலம் பணம் தொடர்பாக நேர்மறையான முன்னேற்றம் உருவாகும். கூடிய விரைவில் பெரிய நிதி ஆதாயம் பெறுவார்கள்.
பயம் இன்றி பாம்பை கனவில் காண்பது
பொதுவாக பாம்பே என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் ஒருவரின் கனவில் பாம்பை பார்ப்பது எதிர்மறையாகக் கருதப்படுகிறது. அதே சமயம் ஒருவர் தன்னுடைய கனவில் எந்த ஒரு பயமும் இல்லாமல் அந்த பாம்பை பார்ப்பது போன்ற கனவு கண்டால், அது ஒரு நல்ல சகுனம்.
அவரின் வாழ்க்கையில் திடீர் பண ஆதாயமும், புதையல் போன்ற பொக்கிஷம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
கோவில் அல்லது புனித நதியை கனவில் காண்பது
ஒருவரின் கனவில் ஆன்மீகத்தின் அடையாளமாகப் பார்க்கப்படக்கூடிய கோவில், தேவாலயம், மசூதி போன்ற மத தலத்தைப் பார்ப்பதால், அவரின் வாழ்க்கையில் பொருளாதார நிலை, வாழ்க்கையின் செழிப்பு முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.
கங்கை போன்ற புனித நதியை அவரின் கனவில் கண்டால் பெரிய அளவில் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
இது போன்ற அதிர்ஷ்ட கனவுகள் மூலம் வாழ்க்கையில் கோடீஸ்வரன் ஆகக்கூடிய முன்னேற்றத்தை அடைவார்கள்.