நாம் அன்றாடம் சந்திக்கும் மன அழுத்தம் மற்றும் பணப் பிரச்சனைகளுக்கு ஜோதிட ரீதியான எளிமையான பரிகாரங்கள் நம் முன்னோர்களால் அருளப்பட்டுள்ளன. ஜாதக ரீதியான பிரச்சனைகள், எதிர்மறை ஆற்றல்கள், கண் திருஷ்டி போன்ற பல காரணங்களால் ஏற்படும் இந்த சிக்கல்களுக்கு, நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே தீர்வு காணலாம். சக்திவாய்ந்த இந்த வழிமுறைகள் மூலம் மன நிம்மதியையும் செல்வச் செழிப்பையும் பெறலாம். ஜோதிடம் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல்கள் மூலம் இந்த சிரமங்களை வெற்றி கொள்வோம்.
மன நிம்மதி, செல்வ வளம் பெற எளிய ஜோதிட பரிகாரங்கள்
நாம் சந்தித்து வரும் பல பிரச்சனைகளுக்கு எளிமையான பரிகாரங்கள், சுலபமான வழிமுறைகளை நம்முடைய முன்னோர்கள் தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களிலேயே தீர்வு வைத்துள்ளனர். நம்முடைய வீட்டிலேயே இருந்தாலும் பல பொருட்களை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற முறை தெரியாமல் பயன்படுத்துவதால் அதனால் பலவிதமான சிக்கல்களை நாம் சந்தித்து வருகிறோம். மன அழுத்தம், பணப் பிரச்சனைகள் ஆகியவற்றை போக்கும் எளிய ஜோதிட பரிகாரத்தை தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
மன நிம்மதியின்மை மற்றும் பணப் பிரச்சனைகளின் காரணங்கள்
சிலரது வீட்டில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அதற்கு மீறிய செலவுகள் வந்து கொண்டே இருக்கும். கொஞ்சம் கூட சேமிக்க முடியாமல், பணம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்பார்கள். வீண் விரயங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதே போல் வீட்டிற்குள் சென்றாலே நிம்மதி இல்லாத நிலை இருக்கும். வீட்டிற்குள் சென்றாலே மன அழுத்தம், எங்கோ அடைத்து வைத்திருப்பது போல் இறுக்கமான மனநிலை ஏற்படும். அதுவே வீட்டை விட்டு வெளியில் சென்றால் சந்தோஷமாக இருப்பது போல் தோன்றும். இத்தகைய இறுக்கமான சூழலில் இருந்து வெளியே வர என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என வழி காட்டுகிறார் டாக்டர். மாயன் செந்தில்குமார் (spiritual art scientist). வீட்டில் பணம் தங்காததற்கு இது தான் காரணம்: பண விரயம், பணம் தங்காத நிலை, நிம்மதியின்மை, கணவன்-மனைவிக்குள் அல்லது பிள்ளைகளுடன் அல்லது பெற்றவர்களுடன் அடிக்கடி சண்டை இருந்து கொண்டே இருப்பது போன்றவைகள் ஏற்படுவதற்கு வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களும் ஒரு காரணம். வீட்டில் நிலவோட்டம் சரியாக இல்லை என்றாலும், மின்காந்த அலைகளில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், ஒன்றிற்கு ஒரு ஒத்துப் போகாத அதிர்வலைகளாலும் இது போன்ற நிலை ஏற்படும். கண் திருஷ்டி, பில்லி, சூனிய கோளாறுகள் போன்ற தீயசக்திகள் நமக்கே தெரியாமல் நம்முடைய வீட்டிலும், உடலில் இருந்தும் மனிதனை உருத் தெரியாமல் அழித்துக் கொண்டிருக்கும்.
சக்திவாய்ந்த மூலிகைகள் மூலம் எதிர்மறை ஆற்றல்களில் இருந்து விடுபட
இத்தகைய சூழல்களில் இருந்து விடுபட நம்முடைய முன்னோர்கள் 3 வித மூலிகைகளை வீட்டில் அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளனர். இதில் முக்கியமானது வசம்பு. இதை 'பேர் சொல்லாதது' என கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. வசம்பு என்ற சொல்லுக்கு 'விஷத்தை முறிக்கும் அம்பு' என்பது தான் பொருள். விஷம் போல் நமக்குள்ளும், நம்மை சுற்றியும் இருக்கும் தீயவற்றை அம்பு போல் இருந்து தாக்கி அழிக்கக் கூடிய தன்மை கொண்டது வசம்பு. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பினை வாங்கி வந்து, தீயில் சுட்டு, அதன் கரியை உச்சந்தலையில் வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அந்த கரியை பசு நெய்யில் நனைத்து, நெற்றியில் வைத்துக் கொள்ளலாம்.
மனநிம்மதிக்கான எளிமையான பரிகாரம்
மற்றொரு முறையாக கர்சிஃப் அளவிற்கு வெள்ளை துணி எடுத்துக் கொண்டு அதில் வசம்பு இரண்டு துண்டு, ஏலக்காய் இரண்டு, கருப்பு ஏலக்காய் 2, பச்சை கற்பூரம் சிறிது ஆகியவற்றை ஒன்றாக வைத்து ஒரு முடிச்சாக கட்டி வீட்டின் முன்வாசல் அல்லது பின்வாசலில் கட்டி வைக்கலாம். வீட்டில் பணம் தங்காமல் இருப்பவர்கள் பணம் வைக்கும் பெட்டி அல்லது இடத்தில் இந்த முடிச்சை வைக்கலாம். பொதுவாக வசம்பு, பச்சை கற்பூரம், ஏலக்காய் ஆகியவற்றிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்பார்கள். அதனால் இவற்றை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் வந்து கொண்டே இருக்கும்.
விபத்துக்களை தடுக்கவும், நல்ல அதிர்வலைகளைப் பெறவும்
விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது என்கிறவர்கள் காரின் டேஷ் போர்டு அல்லது இரு சக்கரவாகனத்தின் முன்புறம் இந்த முடிச்சினை வைக்கலாம். இதனால் விபத்துக்கள் இல்லாமல், நல்ல அதிர்வலைகளை உங்களைச் சுற்றி ஏற்படும். எப்படிப்பட்ட தடையாக இருந்தாலும் இது எளிதில் உடைக்கக் கூடியதாகும். இது தவிர எங்கெல்லாம் நல்ல அதிர்வலைகள் இருக்க வேண்டும், பெருக்கம் ஏற்பட வேண்டும் என நினைக்கிறீர்களோ அங்கெல்லாம் இதை வைக்கலாம். கெட்ட கனவுகளால் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இந்த முடிச்சினை தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் கெட்ட கனவுகள் இல்லாத, நிம்மதியான தூக்கம் ஏற்படும். எதிரிகளால் ஏற்படும் கெட்ட எண்ண அலைகள் நம்மை தாக்காது. இவை அனைத்தும் நம்முடைய முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஜோதிட பரிகார முறைகளாகும்.
தொடர்புக்கு:
டாக்டர். மாயன் செந்தில்குமார் (spiritual art scientist)
மொபைல் எண்: 9092045441, 9442274981
இமெயில்: thendral47@yahoo.com
முக்கிய ஜோதிட பரிகார சிறப்பம்சங்கள்
- மன அழுத்தம் நீக்கும்: வீட்டிற்குள் நிலவும் இறுக்கமான சூழலை நீக்கி மன நிம்மதியை அளிக்கிறது.
- பணப் பிரச்சனைகளுக்கு தீர்வு: பண விரயங்களைத் தடுத்து, செல்வப் பெருக்கத்திற்கு உதவுகிறது.
- எதிர்மறை ஆற்றல் பாதுகாப்பு: கண் திருஷ்டி, பில்லி சூனியம் போன்ற தீய சக்திகளில் இருந்து காக்கிறது.
- வசம்பு மகிமை: விஷத்தை முறிக்கும் சக்தி கொண்ட வசம்பு, எதிர்மறை எண்ணங்களை அழிக்கிறது.
- செல்வ ஈர்ப்பு: வசம்பு, பச்சை கற்பூரம், ஏலக்காய் கொண்ட முடிச்சு பணத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது.
- விபத்து தடுப்பு: வாகனங்களில் வைப்பதன் மூலம் விபத்துகளைத் தடுத்து நல்ல அதிர்வலைகளை உருவாக்குகிறது.
- நிம்மதியான உறக்கம்: தலையணை அடியில் வைப்பதன் மூலம் கெட்ட கனவுகள் நீங்கி ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
இந்த ஜோதிட பரிகாரங்கள் முன்னோர்களால் பரிந்துரைக்கப்பட்ட சக்திவாய்ந்த வழிமுறைகள் ஆகும். Jothidam360 மூலம் மேலும் பல ஜோதிட தகவல்களைப் பெறுங்கள்.