வெற்றிலையில் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியாக்கும் பண்புகள் அதிகம். குடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியும் கொடுக்கும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதோடு உடலில் அழற்சிகள் உண்டாகாமல் தடுக்கிறது.
சுவையான வெற்றிலை ஜூஸ் தயார் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
- வெற்றிலை - 2 (நன்கு கழுவியது)
- தண்ணீர் - 1 கிளாஸ் அளவு
- தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்
- குல்கந்து - அரை ஸ்பூன்
- சோம்பு - கால் ஸ்பூன்
- தேன் (அ) கற்கண்டு - சுவைக்கு ஏற்ப
செய்முறை:
- ஒரு மிக்ஸி ஜாரில் வெற்றிலை, குல்கந்து, சோம்பு, தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள்.
- வடிகட்டிய ஜூஸில் சுவைக்கு ஏற்ப தேன் அல்லது கற்கண்டை பொடி செய்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான்! சூப்பரான, உடலை குளுகுளு மாற்றும் வெற்றிலை ஜூஸ் தயார். கோடைக்காலத்திற்கு ஏற்ற சிறந்த ஆரோக்கிய பானம் இது.
வெற்றிலை ஜூஸ் குடிப்பதன் நன்மைகள்
- உடல் குளிர்ச்சி: வெற்றிலை ஜூஸ் கோடை காலத்தின் அதிகப்படியான வெப்பத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக மாற்றும் தன்மை கொண்டது. இது உடலின் பித்தத்தைக் குறைத்து சமநிலைப்படுத்துகிறது.
- ஜீரண சக்தி மேம்பாடு: இதிலுள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை ஜீரண ஆற்றலை மேம்படுத்தும். மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும். நம் முன்னோர்கள் நன்றாக விருந்து சாப்பிட்ட பின் ஜீரணமாக வெற்றிலை போடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.
- அழற்சி எதிர்ப்பு: வெற்றிலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இவை உடலில் வலி மற்றும் வீக்கங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
- புத்துணர்ச்சி: இது உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வெற்றிலை ஜூஸ் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டுகிறது, ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது, மலச்சிக்கல் மற்றும் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது, மேலும் உடனடி புத்துணர்ச்சியை அளிக்கிறது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
வெற்றிலை, தண்ணீர், தேங்காய் துருவல், குல்கந்து, சோம்பு, மற்றும் சுவைக்கு ஏற்ப தேன் அல்லது கற்கண்டு ஆகியவை வெற்றிலை ஜூஸ் தயாரிக்க தேவைப்படும் முக்கிய பொருட்கள் ஆகும்.