2025 மனையடி சாஸ்திரம் – வீட்டு உள் அளவுகள் & பாக்கிய விளக்கம்
புதிய வீடு கட்டுவதற்கோ அல்லது ஏற்கனவே இருக்கும் வீட்டை மாற்றியமைக்கவோ வீட்டு உள் அறைகளின் அளவு முக்கியமானது. மனையடி சாஸ்திரம் படி சில அளவுகள் பாக்கியத்தை, செல்வத்தை மற்றும் தெய்வ அனுகிரகத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
முக்கிய உள் அறை அளவுகள் மற்றும் பலன்கள்
| உள் கூடு அளவு (அடி) | பலன் |
|---|---|
| 8 | மிகுந்த பாக்கியமுண்டு |
| 10 | ஆடு, மாடு குறைவிலா வாழ்வுண்டு |
| 16 | மிகுந்த செல்வமுண்டு |
| 17 | அரசனை போல் பாக்கியசேரும் |
| 21 | பசுக்களுடன் பாக்கியசேரும் |
| 27 | மிக்க செல்வத்துடன் மதிக்க வாழ்வர் |
| 28 | செல்வமும், தெய்வ கடாஷமுண்டு |
| 30 | லக்ஷ்மி கடாஷம் பெற்று வாழ்வர் |
| 32 | முகந்தனருள் பெற்று வையகம் வாழ்வர் |
| 35 | லக்ஷ்மி கடாஷமுண்டு |
| 36 | அரசனையும் அரசாள்வான் |
| 41 | இன்பமும், செல்வமும் உண்டு |
| 42 | லக்ஷ்மி குடி இருப்பாள் |
| 45 | சற்புத்திரர் உண்டு |
| 46 | குடும்ப விழ்ச்சி உண்டாகும் |
| 47 | அகலாத வறுமை |
| 48 | அக்கினி பாக்கியம் |
| 49 | துயரம் மிகும் |
| 50 | கால்நடை விருத்தி உண்டாகும் |
| 52 | தானிய விருத்தி உண்டாகும் |
| 54 | லாபம் |
| 56 | புத்திர பாக்கியம் உண்டு |
முக்கிய குறிப்பு: சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி மாதங்களில் புதிதாக வீடு குடி புகுவது மிகவும் நன்மை பயக்கும்.