வாழ்க்கையில் அனைவரும் பணத்தை சம்பாதித்து, தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறார்கள். இருப்பினும், சிலர் மட்டுமே பெரும் செல்வத்தை குவித்து, கோடீஸ்வர யோகத்துடன் வாழ்கிறார்கள். ஜோதிட ரீதியாக, சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே பணத்தை ஈட்டுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் யார், எப்படி பணம் சேர்கிறது என்பதை இந்த பதிவில் விரிவாகக் காண்போம்.
பணத்தை அதிகம் சம்பாதிக்கும் ராசிகள்:
கன்னி ராசி (Virgo)
நுண்ணறிவு, திறமை, நிதி மேலாண்மையைத் தரக்கூடிய புதன் பகவான் ஆளக்கூடிய கன்னி ராசிக்காரர்கள், ஜோதிடத்தில் பணக்காரர்கள் நிறைந்த ராசிகளில் ஒன்றாக உள்ளனர். இவர்கள் எதைச் செய்தாலும் சிந்தித்து, ஒழுங்காகச் செய்வார்கள். கடினமான சூழலில் சரியான மாற்றங்களைக் கொண்டு வர முயல்வார்கள். பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலிகளாகவும், கவனமாக கையாளக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். பல நேரங்களில் ஆபத்தான முடிவுகளை எடுத்து அதிக லாபம் ஈட்டுவார்கள், இதனால் மற்றவர்கள் நினைத்ததை விட வேகமாக முன்னேறுவார்கள்.
விருச்சிக ராசி (Scorpio)
விருச்சிக ராசிக்காரர்கள் பிறர் சொல்வதைக் கேட்டு செயல்படுபவர்கள் அல்ல. இவர்கள் தங்கள் உள்ளுணர்வுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள். எந்தத் துறை ஒத்து வரும் என உணர்ந்து செயல்படுவார்கள். சொந்த தொழில் அல்லது வியாபாரம் செய்தாலும், லாபத்தை ஈட்டுவதற்கான சூழலை முதலில் புரிந்து கொண்டு தொடங்குவார்கள். அதனால் அவர்கள் விரும்பிய லாபத்தை ஈட்டுகின்றனர். நிறுவனத்தை எப்படி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முழுமையான ஞானத்துடன் செயல்படுவார்கள். தங்களின் செயல்களில் மர்மமானவர்களாகவும், திட்டங்களை செயல்படுத்தவும் வாய்ப்புள்ளது. எதிரிகளின் பலத்தை அறிந்து செயல்பட்டு, போட்டிகளைத் தாண்டி முன்னேறக்கூடியவர்களாக இருப்பார்கள்.
சிம்ம ராசி (Leo)
நவகிரக தலைவன் சூரியன் ஆளக்கூடிய சிம்ம ராசிக்காரர்களுக்கு இருக்கக்கூடிய தன்னம்பிக்கையே அவர்களை வாழ்க்கையில் உச்சத்திற்குக் கொண்டு செல்ல உதவும் முக்கிய அம்சம். இவர்கள் எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முயல்பவர்கள். ஒரு விஷயத்தை எப்படி வெவ்வேறு வழிகளில் செய்து முடிக்க முடியும் என்ற வகையில் சிந்திப்பார்கள். தங்களின் செயல்களால் மட்டுமல்லாமல், தங்களின் வார்த்தைகளாலும் பிறரைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவர்கள். எதையும் சாதிக்கலாம் என்ற மனநிலை கொண்ட இவர்களில் உலகின் பணக்கார பட்டியலில் பெரும்பாலானோர் இடம் பெறுவார்கள். இவர்களுக்கு செல்வம் இயற்கையாகவே வந்து சேரும்.
ரிஷப ராசி (Taurus)
செல்வத்தை, சுகத்தை அள்ளித்தரும் சுக்கிரன் ஆளக்கூடிய ரிஷப ராசிக்காரர்கள் பொறுமை மற்றும் புதுமையை விரும்புவார்கள். இவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை எப்படி முழுமையாக, சிறப்பாக செய்து முடிக்கலாம் என்ற சிந்தனையும், நினைத்ததைச் சாதித்தே ஆக வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் உண்மைத்தன்மையும், ஆளுமைத் திறனும் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாக தொட்டதெல்லாம் பொன்னாகக்கூடியதாகவும், பணம் குவியக்கூடியதாகவும் இருக்கும்.
மகர ராசி (Capricorn)
மகர ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் நேரம் காலம் பார்க்காமல் தன்னுடைய வேலையை செய்து முடிக்க வேண்டும் என கடினமாக உழைப்பவர்கள். குறைந்த ஊதியமாக இருந்தாலும் தன் வேலையை நிறைவாக, சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என நினைப்பார்கள். அதனால் தங்களுடைய வாழ்க்கையில் பெரிய விஷயங்களை கூட எளிதாக செய்துவிடுவார்கள். தங்களின் துறையில் சாதிக்கும் எண்ணமும், சாதாரண யோசனைகளைத் தாண்டி, வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு ஒரு பிரச்சினை வருவதற்கு முன்னரே அதை தீர்ப்பதற்கான தீர்வை தயாராக வைத்திருப்பார்கள். தங்கள் வேலை, தொழிலில் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் யோசித்து செயல்படுவார்கள். அதனால் வேலையை வேகமாக முடிப்பதோடு, நினைத்ததை விட விரைவாக செல்வந்தர் ஆவார்கள்.
மேஷ ராசி (Aries)
நவகிரகங்களில் ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கக்கூடியவர் செவ்வாய் பகவான். அவரே ராசி நாதனாக அமைந்ததுள்ளதால் மேஷ ராசிக்காரர்கள் எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் திறை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பொறுமை குறைவாகவே இருக்கும். எதையும் விரைவாக முடிக்க வேண்டும் என்ற அவசரம் இருக்கும். எந்த செயலிலும் அதிக நாட்டம், ஆர்வம் இருக்கும். இவர்களின் வேகம், மன உறுதி, தன்னம்பிக்கை இவர்களின் இலக்கை வேகமாக அடைய உதவும். அதன் மூலம் பணத்தை வேகமாக சேர்ப்பார்கள். தங்களின் வாழ்க்கையில் பொறுமை மற்றும் கடின உழைப்பைக் கடைப்பிடித்தால் இவர்களிடம் செல்வம் எப்போதும் நிரந்தரமாகத் தங்கும்.
முக்கிய சிறப்பம்சங்கள் ஜோதிட பார்வை
- கன்னி: புதன் ஆதிக்கம், நிதி மேலாண்மை, சிந்தனைப்பூர்வமான செயல்பாடு, ரிஸ்க் எடுக்கும் திறன்.
- விருச்சிகம்: உள்ளுணர்வு, தொழில் தேர்வு, லாப நோக்கம், நிறுவனத்தை வளர்க்கும் திறன்.
- சிம்மம்: சூரிய ஆதிக்கம், அசைக்க முடியாத தன்னம்பிக்கை, தலைமைத்துவம், புதிய கற்றல் ஆர்வம்.
- ரிஷபம்: சுக்கிர ஆதிக்கம், பொறுமை, புதுமை, உறுதி, ஆளுமை, செல்வம் சேரும் யோகம்.
- மகரம்: கடின உழைப்பு, தொலைநோக்கு பார்வை, பிரச்சினை தீர்க்கும் திறன், உணர்ச்சிபூர்வமற்ற முடிவுகள்.
- மேஷம்: செவ்வாய் ஆதிக்கம், துடிப்பு, மன உறுதி, இலக்கை விரைவாக அடையும் திறன், பொறுமை தேவை.