ஒவ்வொரு மனிதரும் சவால்களையும் பிரச்சனைகளையும் வெவ்வேறு வழிகளில் எதிர்கொள்கிறார்கள். இந்த ஜோதிடக் கட்டுரை, தமிழ் ராசிக்காரர்கள் எப்படிப்பட்ட சவால்களைச் சந்திப்பார்கள், அவற்றை எப்படி அணுகுவார்கள் என்பதைப் பற்றி விளக்குகிறது. உங்கள் ராசி சவால்களைக் கையாளும் திறனை அறிந்து கொள்ளலாம்.
சவால்களை விடாபிடியாக சந்திக்கும் ராசிக்காரர்கள்
சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை ஒரு வாய்ப்பாகக் கருதி, விடாமுயற்சியுடன் வெற்றி பெற போராடுவார்கள். அவர்களைப் பற்றி விரிவாகக் காண்போம்.
மேஷம் (Aries)
ராசி மண்டலத்திலேயே மட்டுமல்ல, எடுத்த காரியத்தை விடாபிடியாக முடிப்பதிலும் மேஷ ராசிக்காரர்கள் முதலிடத்தில் உள்ளனர். இவர்கள் எதற்கும் பயப்படாத துணிச்சல் மிக்கவர்கள். இலக்குகளை எட்டிப்பிடிக்கவும், சவாலான சூழ்நிலையை எதிர்கொள்வதிலும் ஆர்வம் கொண்டவர்கள். போட்டியில் இருந்து பாதியில் பின் வாங்க மாட்டார்கள்.
சிம்மம் (Leo)
மன உறுதிக்கு பெயர் போனவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். ஒரு காரியத்தை முடிக்க மனதில் நினைத்து விட்டால், அதை முடிக்காமல் விட மாட்டார்கள். அதிக ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் எடுத்த காரியத்தை முடிப்பார்கள். எத்தனை சவால்கள் வந்தாலும், அதைத் தாண்டி வெற்றி பெறுவார்கள். இவர்கள் இதை வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாகவே பார்ப்பார்கள்.
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்கள் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். ஒரு இலக்கை அடைய வேண்டும் என எண்ணத்துடனேயே இருப்பார்கள். அதை அடைவதற்காக எதையும் செய்ய துணிந்தவர்கள். தங்கள் காரியங்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பதால் இலக்குகளை அடைய முடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு உண்டு.
விருச்சிகம் (Scorpio)
மன உறுதி, தீவிரமாகவும் உறுதியாகவும் இருப்பதில் பெயர் பெற்றவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். இவர்கள் சுதந்திரமாக செயல்பட விரும்புபவர்கள் என்பதால் எந்த சவாலை எதிர்கொள்ளும்போதும் பின்வாங்க மாட்டார்கள். சவால்களை வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான வாய்ப்புகளாக பார்ப்பார்கள்.
மகரம் (Capricorn)
எடுத்த காரியத்தில் விடாபிடியாக இருக்கக் கூடியவர்களில் அடுத்தது மகர ராசிக்காரர்கள். இவர்கள் உறுதியான பொறுப்பு, லட்சிய உணர்வுடன் இருப்பார்கள். எந்த தடைகளையும் சந்திக்க தயங்காதவர்கள்.
மீனம் (Pisces)
மீன ராசியின் அடையாளமான மீன்கள் எப்படி தண்ணீரில் மூழ்கி விடாமல் போராடி முன்னேறி சென்று கொண்டே இருக்குமோ, அது போல் இவர்கள் காரியம் எத்தனை கடினமானதாக இருந்தாலும் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். உணர்வுப்பூர்வமானவர்கள் என்றாலும், சவால்களைக் கடக்க முயற்சிப்பார்கள்.
சவால்களை வித்தியாசமாக அணுகும் ராசிக்காரர்கள்
சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளைக் கையாளும் விதத்தில் தனித்துவமான அணுகுமுறைகளைக் கொண்டவர்கள்.
கடகம் (Cancer)
கடக ராசிக்காரர்கள் குடும்பத்துடன் ஆழமான பிணைப்பை கொண்டவர்கள். எதையும் உணர்ச்சி பூர்வமாக பார்க்கக் கூடியவர்கள் என்பதால் சில சமயங்களில் சவால்களை எதிர்த்து சமாளிப்பதற்கு பதிலாக விட்டுக் கொடுத்து வந்து விடுவார்கள். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விட்டுக்கொடுத்து செல்வது பல சமயங்களில் இவர்களுக்கு பிரச்சனையாக அமைந்து விடும்.
துலாம் (Libra)
ஒற்றுமை, சமநிலை தவறாமல் இருப்பதற்கு பெயர் போனவர்கள் துலாம் ராசிக்காரர்கள். இதனால் பிரச்சனை, சவால் என வந்து விட்டால் அதை முடிவுக்கு கொண்டு வர நினைப்பார்கள். ஆனால், என்ன முடிவை தேர்வு செய்வது என முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்திலேயே இருப்பார்கள். இது தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை கூட சிக்கலானதாக மாற்றி விடக்கூடும்.
தனுசு (Sagittarius)
தனுசு ராசிக்காரர்கள் சாகசங்களை விரும்பக் கூடியவர்கள். அதே போல் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். இருந்தாலும் விரைவில் ஆர்வத்தை இழக்கக் கூடியவர்கள். இலக்கை அடைய போராடக் கூடியவர்கள். அதிலிருந்து புதிய அனுபவங்களை கற்றுக் கொள்ளக் கூடியவர்கள். அதே சமயம், தாங்கள் செய்யும் காரியங்களில் சலிப்பை உணர்ந்து விட்டார்கள் என்றால், அதை அப்படியே விட்டு விடுவார்கள்.