இந்து சமயத்தில், வெள்ளிக்கிழமைகள் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகின்றன. இந்த நாளில் லட்சுமி தேவியை முறையாக வழிபடுவதன் மூலம் நிதி சிக்கல்கள் நீங்கி, செல்வமும் செழிப்பும் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த கட்டுரையில், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு வழங்க வேண்டிய 5 முக்கியமான பிரசாதங்கள் மற்றும் அதன் பலன்கள் குறித்து விரிவாகக் காண்போம்.
வெள்ளிக்கிழமை வழிபாடு ஏன் முக்கியம்?
செல்வத்திற்கும் செழிப்பிற்கும் அதிபதியான லட்சுமி தேவிக்கு வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவை. ஜோதிட ரீதியாகவும் சுக்கிரன் (Venus) கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவியை வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தரும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பக்தர்கள் பலவிதமான பூஜைகள் செய்து, லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை பெறுகிறார்கள். இதன் மூலம் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்து மத நம்பிக்கைகளின்படி, லட்சுமி தேவி தனது பக்தர்களுக்கு செல்வத்தை வழங்குகிறாள். மக்கள் விரதம் இருந்து, பாடல்கள் பாடி லட்சுமி தேவியை தங்கள் வீட்டிற்கு அழைக்கிறார்கள். வெள்ளிக்கிழமைகள் புனிதமானதாக கருதப்படுவதால், அன்று நல்ல சக்திகள் நிறைந்திருக்கும். நிதி பிரச்சனைகள் நீங்கவும், லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை பெறவும் சில பொருட்களை வெள்ளிக்கிழமை அன்று வழங்கலாம்.
மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமையில் வழங்க வேண்டிய 5 சிறப்பு பிரசாதங்கள்
- 1. தாமரை விதைகள் (தாமரை மணி மாலை)தாமரை விதைகள், லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமானது. தாமரை விதை மாலையை ஜெபம் செய்ய பயன்படுத்தலாம். தாமரை தண்டு திரியில் விளக்கேற்றலாம். பூஜை அறையில் வைப்பதன் மூலம் நல்ல எண்ணங்கள் மற்றும் செல்வம் பெருகும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நிதி நிலைமை மேம்படும். மேலும் வாழ்க்கையில் சமநிலையும், வளமும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
- 2. ரோஜா அத்தர் (வாசனை திரவியம்)ரோஜா வாசனை லட்சுமி தேவிக்கு மிகவும் பிடிக்கும். ரோஜா வாசனை திரவியம் பயன்படுத்தலாம். அல்லது ஊதுபத்தி ஏற்றி பூஜை அறையில் வைக்கலாம். இது அமைதியான சூழலை உருவாக்கும். இது தேவியை மகிழ்விக்கும். ரோஜா வாசனை அமைதியை தருவதோடு, அன்பு, அழகு மற்றும் செல்வத்தை அதிகரிக்கும்.
- 3. பாயசம்பால் மற்றும் சர்க்கரை சேர்த்து ஏலக்காய், குங்குமப்பூ அல்லது உலர் பழங்கள் சேர்த்து செய்யப்படும் பாயசம் லட்சுமி தேவிக்கு பிடித்தமான பிரசாதம். அன்போடு செய்யப்பட்ட பாயசத்தை லட்சுமி தேவிக்கு வழங்குவதன் மூலம், அவரது ஆசீர்வாதமும், செழிப்பும் கிடைக்கும்.
- 4. தாமரை மலர்லட்சுமி தேவிக்கு புதிய தாமரை மலர்களை வழங்குவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. இது தேவியை சந்தோஷப்படுத்தும். சுத்தமான இடத்தில் தாமரை மலர்களை வைப்பதன் மூலம், மனம் தெளிவடையும். நல்ல எண்ணங்கள் அதிகரிக்கும். மேலும் செல்வம் பெருகும்.
- 5. நெய் விளக்குநெய், மகாலட்சுமி விரும்பி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் வெள்ளிக்கிழமைகளில் சுத்தமான நெய் விளக்கேற்றி வைத்து மகாலட்சுமியை வழிபடலாம். வெள்ளி அல்லது மண் அகலில் இந்த விளக்கை ஏற்றவது மிக மிக விசேஷம்.
இந்த ஐந்து பிரசாதங்களை அன்புடனும் பக்தியுடனும் லட்சுமி தேவிக்கு வழங்குவதன் மூலம், உங்கள் வாழ்வில் செல்வமும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும் என்பது உறுதி. ஜோதிடம் மற்றும் ஆன்மீக பரிகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் இதனை கடைப்பிடித்து வாழ்வில் ஏற்றம் பெறலாம்.