Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

தான தர்ம பலன்கள்: எந்தப் பொருளை தானம் செய்தால் என்ன கிடைக்கும்?

காலம் காலமாக நாம் சொல்லும் போது, தான தர்மம் என்று சேர்த்து தான் குறிப்பிடுவோம். ஆனால், சாஸ்திர முறைகளின் படி தானம் என்பது வேறு, தர்மம் என்பது வேறு. அதே போல் இரண்டிற்குமான பலன்களும் வேறுபடக் கூடியவை. ஒருவர் கேட்டு நாம் கொடுப்பது தானம். ஒருவர் கேட்காமல் அவர்கள் நிலை அறிந்து நாமாக கொடுப்பது தர்மம். தானமாக கொடுத்தாலும் சரி, தர்மம் செய்தாலும் சரி, சில குறிப்பிட்ட பொருட்களை நாம் பிறருக்கு கொடுக்கும் போது அதனால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு கொடுப்பது இன்னும் சிறப்புக்குரியதாகும். பாவங்களைப் போக்க கூடியது தானம். அதே சமயம் புண்ணியங்களை சேர்ப்பது தர்மம். நாம் செய்த பாவங்கள் நீங்கினால், பல விதமான துன்பங்களில் இருந்து விடுபட முடியும். அதே போல் புண்ணியம் அதிகரித்தால் அளவில்லாத நன்மைகள் நடைபெறும். ஜோதிட ரீதியாகவும் இந்த தானங்கள் சிறப்பு பெறுகின்றன.

என்னென்ன பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்?

நாம் கொடுக்கும் பொருளுக்கு ஏற்றது போல் மட்டுமல்லாமல், கிழமை மற்றும் திதி ஆகியவற்றின் அடிப்படையிலும் அவற்றின் பலன்கள் மாறுபடும். இங்கு பொதுவான தானப் பொருட்களும் அவற்றின் பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன:

  • அரிசி: முன் ஜென்ம பாவங்கள் விலகும்.
  • அன்னதானம்: கடன் தொல்லைகள் தீரும்.
  • மாங்கல்ய சரடு: தீர்க்க மாங்கல்ய பலன் தரும்.
  • குடை: குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாகும்.
  • பாய்: அமைதியான மரணம் உண்டாகும்.
  • காய்கறிகள்: குழந்தைகள் ஆரோக்கியம் மேம்படும்.
  • பூக்கள்: விரும்பிய இல்வாழ்க்கை அமையும்.
  • மாங்கல்யம்: திருமண தடைகள் நீங்கும்.
  • எள்: பாப விமோசனம் உண்டாகும்.
  • வெல்லம்: வம்ச விருத்தி உண்டாகும்.
  • பால்: துன்பங்கள் விலகும்.
  • நெய்: நோய்கள் நீங்கும்.
  • தேங்காய்: எடுத்த காரியம் வெற்றியாகும்.
  • தீபம்: முன்னோர்கள் சாபம் தீரும்.
  • தேன்: புத்திர பாக்கியம் உண்டாகும்.
  • பூமி: பிறவா நிலையும் சிவன் அருளும் கிட்டும்.
  • பழங்கள்: புத்தியும் சித்தியும் உண்டாகும்.
  • ஆடைகள்: சுகபோக வாழ்வு உண்டாகும்.
  • நெல்லிக்கனி: அறிவு மேம்படும்.
  • வஸ்திரம்: ஆயுள் விருத்தி உண்டாகும்.
  • தயிர்: இந்திரய விருத்தி உண்டாகும்.
  • கோதானம் (பசு): பிதுர் கடன் நீங்கும்.
  • புத்தகம்: கல்வி அறிவு சிறக்கும்.
  • தங்கம்: குடும்ப தோஷம் நீங்கும்.
  • வெள்ளி: மன கவலை நீங்கும்.
  • மஞ்சள்: சுபிக்ஷம் உண்டாகும்.
  • சந்தனம்: கீர்த்தி உண்டாகும்.
  • போர்வை: கெட்ட கனவுகள் பயம் நீங்கும்.
  • கோதுமை: ரிஷிகள் தேவர்கள் கடன் நீங்கும்.
  • எண்ணெய்: ஆரோக்கியம் மேம்படும்.
  • தண்ணீர்: மன அமைதி மகிழ்ச்சி உண்டாகும்.
  • காலணி: பெரியோர்களை அவமதித்த பாவம் நீங்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

ஒருவர் கேட்டு நாம் கொடுப்பது தானம். ஒருவர் கேட்காமல் அவர்கள் நிலை அறிந்து நாமாக கொடுப்பது தர்மம். இவை இரண்டும் வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கக்கூடியவை.

தானம் செய்வதன் மூலம் முன் ஜென்ம பாவங்கள் விலகி, பல்வேறு துன்பங்களில் இருந்து விடுபட முடியும். ஜோதிட ரீதியாகவும் இது மிகவும் முக்கியமான ஒரு செயலாகக் கருதப்படுகிறது.

தர்மம் செய்வதால் புண்ணியங்கள் அதிகரித்து, அளவில்லாத நன்மைகள் நடைபெறும். இது ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் வளத்தையும் சேர்க்கும்.

Our Other Services