Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

அன்னாசிப்பூ: தலைமுடி வளர்ச்சி மற்றும் பொடுகு நீக்கத்திற்கான இயற்கை தீர்வு

நம் வீடுகளில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களில், பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு சிறப்புப் பொருள் அன்னாசிப்பூ. இதில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்துள்ளன. இதனை டீயாக எடுத்துக்கொண்டால் உடலில் பல நல்ல மாற்றங்களை காணலாம். அதேபோல, உங்கள் தலைமுடி வளர்ச்சி மற்றும் பொடுகு பிரச்சனைகளில் அன்னாசிப்பூ ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அன்னாசிப்பூவின் பலன்களை இங்கே காணலாம்.

அன்னாசிப்பூவால் தலைமுடிக்கு கிடைக்கும் நன்மைகள்

  • ஸ்கால்ப் ஆரோக்கியம் அதிகரிக்கும்: முடி உதிர்தல், பொடுகு என எந்த வகையான தலைமுடி பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு உச்சந்தலை ஆரோக்கியமாக இல்லாததும் முக்கியப் பிரச்சினை ஆகும். அன்னாசிப்பூ உச்சந்தலையின் பிஎச் சீராக இருக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
  • இளநரையை தடுக்கும்: அன்னாசிப் பூவில் உள்ள என்சைம்கள் மற்றும் மூலக்கூறுகள் மெலனின் உற்பத்தியை அதிகரித்து, தலைமுடிக்கு நல்ல கருப்பு நிறத்தைக் கொடுக்கும். இதை கஷாயமாகப் பயன்படுத்தி வந்தால் இளநரை வராமல் தடுக்க முடியும்.
  • முடி பளபளப்பாகும்: வறண்ட கூந்தல் உள்ளவர்கள் அன்னாசிப்பூவை பொடி செய்து தண்ணீரில் கலந்து கொதிக்க விட்டு வடிகட்டி, கண்டிஷனராகப் பயன்படுத்தி அலசினால், முடி இயற்கையாகவே பளபளப்பாக மாறும்.
  • பொடுகு பிரச்சினை தீர்க்கும்: பொடுகு உண்டாவதற்கு முக்கியக் காரணமான பாக்டீரியா தொற்றுக்களை அன்னாசிப்பூ எதிர்க்கும். இது உச்சந்தலையில் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகளையும் குறைத்து, பொடுகுத் தொல்லையை நீக்கும்.
  • முடி வளர்ச்சியை அதிகரிக்கும்: அன்னாசிப் பூவுக்கு உச்சந்தலை ஆரோக்கியத்தையும் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும் தன்மை உண்டு. இது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

அன்னாசிப்பூவை தலைமுடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்துவது?

1. ஹேர் ஆயில்களில்

அன்னாசிப்பூவை பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விட்டு வடிகட்டி எடுத்து வைத்துக் கொண்டு அந்த எண்ணையை தினமும் பயன்படுத்தலாம்.

2. ஸ்கால்ப் மசாஜ்

அன்னாசிப்பூ எண்ணெயை உச்சந்தலையில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிக்கலாம். இது உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வேர்களை பலப்படுத்தும்.

3. ஹேர்பேக்குகளில்

நீங்கள் வழக்கமாக தலைமுடிக்குப் பயன்படுத்தும் ஹேர் பேக்குகளில் சில துளிகள் இந்த அன்னாசிப் பூ ஆயிலைக் கலந்து அப்ளை செய்தால் முடி வறட்சி குறைந்து பளபளப்பாகும்.

4. கண்டிஷனராக

அரை லிட்டர் தண்ணீரில் 1 ஸ்பூன் அளவு அன்னாசிப்பூ பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். அது 250 மில்லியாக சுண்டவிட்டு எடுத்து ஆறவையுங்கள். இதை நீங்கள் ஷாம்பு தேய்த்து குளித்ததும் கண்டிஷனர் போல அப்ளை செய்து (உச்சந்தலைக்கும் அப்ளை செய்யலாம்) 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்பு தண்ணீரில் அலசுங்கள்.

மேற்கண்ட வழிமுறைகளின்படி தலைமுடிக்கு வெவ்வேறு விதங்களில் அன்னாசிப் பூவை பயன்படுத்த முடியும். இதன்மூலம் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமின்றி பொடுகு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

ஆம், அன்னாசிப்பூ உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

நிச்சயமாக. அன்னாசிப்பூவில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பொடுகு தொற்றுகளை எதிர்த்துப் போராடி, உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்க உதவும்.

இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத்தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறனுக்கு Jothidam360 பொறுப்பாகாது.

Our Other Services