சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானை வழிபடுவது மிகவும் விசேஷமானது. சனி பகவானின் அருளைப் பெற்று, சனி தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் நன்மை பெறவும் சக்திவாய்ந்த சனி மந்திரங்களை இங்கே காண்போம். உங்கள் ஜோதிட பலன்களை மேம்படுத்த இந்த சனி மந்திரங்கள் உதவும்.
சனீஸ்வர மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள்
1. சனி மகா மந்திரம் : "நீலாஞ்ஜந ஸமபாஸம் ரவிபுத்ரம் யமக்ரஜம் சாயா மார்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஷைஸ்சரம்"
2. சனி மூல மந்திரம் : "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ"
3. சனி தமிழ் மந்திரம் : "சங்கடம் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்! சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தா தா!!"
4. சனி காயத்ரி மந்திரம் : ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்! ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்! ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனைச்சர ப்ரசோதயாத்! ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்! ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!
5. சனி ஸ்தோத்திரம்: ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய: தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:
6. சனீஸ்வர ஸ்தோத்திரம் : "ஸன்னோதேவீசரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே ஸம்யோ ரபிஸ்வர வந்துந:
7. அதிதேவதா மந்திரம் : "இமயம்யமப்ரஸ்தரமாஹி ஸீதாங்கிரோபி: பித்ருபி: ஸம்விதான: ஆத்னா மந்த்ரா கவிஸஸ்தா வஹன்த்வே நா ராஜன்ஹ விஷாமாதயஸ்வ:
8. ப்ரத்யதி தேவதா மந்திரம் : "ப்ரஜாபதே நத்வதேதான்யன்யோ விஸ்வா ஜாதானி பரிதாபபூவ யத்காமாஸ்தே ஜூஹூமஸ் தன்னோ அஸ்து வயங்ஸ்யாம பதயோ ரயீணாம் அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸமேத பகவதே சனைஸ்ச்சராய நம:
9. சந்தோஷம் தரும் சனைச்சர ஸ்தோத்திரம்: "கோணேந்தகோ ரெளத்ரயமோத பப்ரு: க்ருஷ்ண:ஸநி: பிங்களமந்தஸெளரி: நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம் தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய
10. சனீஸ்வர தியான ஸ்லோகம் : நீலாஞ்ஜந ஸமபாஸம் ரவிபுத்ரம் யமக்ரஜம் சாயா மார்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஷைஸ்சரம். சதுர்புஜம் சனிம் தேவம் சாப தூணீக்ரு பாணகை சஹிதம் வரதம் பீமதம்ஷ்ட்ரம் நீலோத் பலாக்ருதிம் நீல மால்யாணுலேபம் ச நீலரத்னைரலங் கிருதம் ஜ்வாலோர்தவ முகுடாபாசம் நீலக்ருத்ர ரதாந்விதம் மேரும் ப்ரதக்ஷிணம் யாந்தம் சர்வ லோக பயாவம்கம் க்ருஷ்ணாம்பரதரம் தேவம் த்விபுஜம் க்ருத்ர சம்ஸ்திதம் சர்வ பீடாஹரம் ந்ரூணாம் த்யாயேத் க்ரஹ கணோத்தமம் - சாபாசனோ க்ருத்ர ரதோதி நீல: ப்ரத்யங்முக: காச்யப கோத்ர ஜாத: ஸசூலசா பேஷூகதாத ரோவ்யாத் செளராஷ்ட்ர தேச ப்ரபவச்ச ஸெளரி - ஸஜைச்சராய ஸாந்தாய சர்வாபீஷ்ட பிரதாயினே நம: சர்வாத்மனே துப்யம் நமோ நீலாம்பராயச -த்வாதசாஷ்ட மஜன் மர்ஷே த்வீதிய ஸ்தான் ஏவச த்வத் சஞ்சா ரோத்பவா தோஷா: ஸர்வே நச்யந்துமே ப்ரபோ .
தொடர்புடைய பிற மந்திரங்கள் :
- சனி சாலிசா
- சனி கவசம்
சனி பகவான் வழிபாட்டின் பலன்கள்
- சனி தோஷம் நீங்கும்: சனி பகவானின் மந்திரங்களை முறையாக உச்சரிப்பதன் மூலம் சனி தோஷத்தின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
- கஷ்டங்கள் குறையும்: வாழ்வில் ஏற்படும் தடைகள் மற்றும் கஷ்டங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- மன அமைதி: சனீஸ்வரரை வழிபடுவதன் மூலம் மன அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கிடைக்கும்.
- ஜோதிட நன்மை: ஜாதகத்தில் சனியின் சாதகமற்ற நிலைகளை மேம்படுத்த உதவும்.