சிவபெருமானின் திருவருள் பெற்று, மன அமைதியையும், ஆன்மீக மேன்மையையும் பெற விரும்புபவர்களுக்கு ருத்ராட்சம் ஒரு உன்னதமான வழியாகும். இந்த தமிழ் ஆன்மீக பாரம்பரியத்தின் சிறப்பம்சமாக திகழும் ருத்ராட்சத்தின் தோற்றம், அதன் அளவற்ற மகிமைகள் மற்றும் பல்வேறு இடங்களில் அணிவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாக காண்போம்.
ருத்ராட்சம் என்றால் என்ன?
ருத்ராட்சம் என்பது சிவபெருமானின் கண்ணில் இருந்து வெளிப்பட்ட கண்ணீர் துளிகளில் இருந்து தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. இது சிவ சின்னங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ருத்ராட்சம் வெறும் மணிகள் மட்டுமல்ல, அவை சிவனின் அம்சமாகவே போற்றப்படுபவை. எவர் ஒருவருக்கு சிவபெருமானின் அருள் இருக்கிறதோ அவர்களால் மட்டுமே ருத்ராட்சத்தை தொடர்ந்து அணிய முடியும். சிவனின் அருள் இல்லாதவர்களால் ருத்ராட்சம் அணியவே முடியாது.
ருத்ராட்சத்தின் அளவற்ற மகிமை
நீங்கள் இதுவரை ருத்ராட்சம் அணிய வேண்டும் என நினைத்தது கூட இல்லை என்றாலும், சிவனின் அருள் உங்களுக்கு கிடைத்து, நீங்கள் ருத்ராட்சம் அணிய வேண்டும் என சிவன் நினைத்துவிட்டால், ஏதாவது ஒரு வழியில் ருத்ராட்சம் உங்களை வந்தடையும். ருத்ராட்சம் அணிந்தவர்கள் சிவனுக்கு சமமானவர்களாக கருதப்படுகிறார்கள். ருத்ராட்சம் அணிந்தவர்களை தேவர்களும் கூட சிவனின் அம்சமாக கருதி வணங்குவதாக சொல்லப்படுகிறது. ருத்ராட்சம் அணிபவர் பிறவி பிணியில் இருந்து விடுபட்டு, மோட்சம் அடைவார்கள். ருத்ராட்சம் அணிந்தவர்களை நெருங்குவதற்கு எம தர்மராஜனே அச்சப்படுவார் என்பார்கள்.
ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்
- மனம் அமைதி அடையும், மன அழுத்தம் குறையும்.
- எதிர்மறை சக்திகள் மற்றும் தீய ஆற்றல்கள் நீங்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் மேம்படும்.
- ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு இறைவனின் அருளைப் பெறலாம்.
- அனைத்து விதமான பாவங்களில் இருந்தும் விடுபட்டு மோட்சம் அடைய வழிவகுக்கும்.
- ருத்ராட்சம் அணிந்து மந்திர ஜபம் செய்வது, விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, யாகம் போன்ற ஆன்மிக சடங்குகளில் கலந்து கொள்ளும்போது அதன் பலன்கள் இரண்டு மடங்காக பெருகும்.
ருத்ராட்சம் அணியும் இடமும், அதன் பலன்களும்
ருத்ராட்சத்தை அணிவதே புண்ணியம் தான் என்றாலும், உடலில் எந்த பகுதியில் அணிந்தால் அளவில்லாத புண்ணிய பலனை பெற முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்திற்கும் எப்படி ஒவ்வொரு விதமான பலன் கிடைக்குமோ, அதே போல் ருத்ராட்சத்தை அணியும் இடத்தை பொருத்தும் அதன் பலன்கள் மாறுபடும்.
- தலை: தலையில் அணிந்தால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
- காது: ருத்ராட்ச மணியை காதுகளில் அணிந்தால் பத்து கோடி புண்ணியம்.
- கழுத்து: ருத்ராட்ச மாலை அல்லது மணிகளை கழுத்தில் அணிந்தால் நூறு கோடி புண்ணியம்.
- கை: ருத்ராட்ச மாலையை கைகளில் அணிந்தால் லட்சம் கோடி புண்ணியம்.
- இடுப்பு: ருத்ராட்ச மணிகளை இடுப்பில் அணிந்தால் நேரடி மோட்சம்.