Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

புரட்டாசி மாத சிறப்புக்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்

புண்ணியம் தரும் புரட்டாசி மாதம், 2025 ஆம் ஆண்டிற்கான ஆன்மீக சிறப்புகளுடன் செப்டம்பர் 17 ஆம் தேதி துவங்க உள்ளது. பெருமாளின் அருளைப் பெறுவதற்கும், புண்ணியங்களைச் சேர்க்கவும் ஏற்ற இந்த மாதத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகளையும், பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகளையும் இக்கட்டுரையில் ஜோதிடம் 360 வழங்கும் சிறப்பு தகவல்களாக காணலாம்.

புரட்டாசி மாதத்தின் ஆன்மீக முக்கியத்துவம்

வழக்கமாக புரட்டாசி மாதமே ஆன்மீக சிறப்பும், பெருமாளின் அருளை பெறுவதற்கும் ஏற்ற மாதம் தான். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் நாளே பல மடங்கு அதிக பலன்களை தரும் மிக முக்கியமான நாளாக அமைந்துள்ளது. பெருமாளுக்கு மிகவும் விருப்பமான ஏகாதசி விரத நாள் மற்றும் புரட்டாசி மாதத்திற்குரிய கிரகமான புதன் பகவானுக்குரிய புதன்கிழமையில் பிறப்பது மிக அதிகமான சிறப்புக்குரியதாகும்.

புரட்டாசி மாதம் சூரிய பகவான், கன்னி ராசிக்குள் பயணிக்கும் மாதமாகும். இது புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த மாதமாகும். அதனால் தான் புதன் கிரகத்திற்குரிய அதிபதியான பெருமாள் வழிபாடு புரட்டாசியில் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. பெருமாளின் எந்த வடிவத்தை வேண்டுமானாலும் புரட்டாசி மாதத்தில் வழிபடலாம். அதிலும் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதும், இந்த மாதத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதும், நாராயண நாமத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்லுவதால் பெருமாளின் அருளும் புண்ணியமும் கிடைக்கும்.

புரட்டாசி முதல் நாளில் மகாலட்சுமி அருள் பெற

புரட்டாசி மாதத்தின் முதல் நாளில் குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுவதால் பெருமாளின் அருள் மட்டுமின்றி, மகாலட்சுமியின் அருளும் இந்த மாதம் முழுவதுமே நம்முடைய வீட்டில் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாதத்தின் முதல் நாளில் நாம் வாங்க வேண்டிய முக்கியமான மூன்று பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • 1. கல் உப்பு: இது மகாலட்சுமியின் அம்சமாகும். லட்சுமி தேவி விரும்பி வாசம் செய்யும் 108 பொருட்களில் கல் உப்பும் ஒன்று. இதை வாங்கி வீட்டில் வைப்பது மிகவும் மங்கலகரமானதாகும். வீட்டில் மகாலட்சுமியின் அருள் எப்போதும் நிலைத்திருக்க, குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொருட்களில் கல் உப்பு மிக முக்கியமானதாகும்.
  • 2. பச்சை கற்பூரம்: சிறிதளது பச்சை கற்பூரத்தை வாங்கி வந்து வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். இது பெருமாளுக்கு மட்டுமின்றி, மகாலட்சுமிக்கும், குபேரருக்கும் மிகவும் பிடித்தமான பொருளாகும். பச்சை கற்பூரத்தின் வாசம் வீட்டில் எப்போதும் பரவி இருந்தால் தீய சக்திகள் நெருங்காமல் இருப்பதுடன், தெய்வீக சக்தியும், நேர்மறை ஆற்றல்களும் நிறைந்திருக்கும்.
  • 3. துளசி இலைகள்: பெருமாளுக்கு மிகவும் விருப்பமான துளசி இலைகள் ஆகும். துளசி இலைகளை வீட்டில் வாங்கி வைப்பதும், துளசி மாலையால் பெருமாளை அலங்கரிப்பதும், துளசி இலைகளைக் கொண்டு பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் மிகவும் சிறப்புக்குரியதாகும். புரட்டாசி முதல் நாளில் இந்திர ஏகாதசி எனப்படும் மிக உயர்வான ஏகாதசி விரத திருநாளும் வருவதால், இந்த நாளில் பெருமாளுக்கு துளசி இலைகள், துளசி தீர்த்தம் படைத்து வழிபடுவது நல்லது.

இந்த மூன்று பொருட்களையும் பூஜை அறையில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட்ட பிறகு, கல் உப்பை தினசரி சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பச்சை கற்பூரத்தை வீட்டில், குபேரருக்குரிய வடக்கு திசையிலோ அல்லது பூஜை அறையிலோ வைத்து வழிபடலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு, புரட்டாசி முதல் நாளே ஏகாதசி விரத நாள் மற்றும் புதன் பகவானுக்குரிய புதன்கிழமையில் அமைவதால், பல மடங்கு அதிகமான புண்ணிய பலன்களைத் தரக்கூடியதாக உள்ளது. சூரியன் கன்னி ராசியில் பயணிப்பதால் புதனின் ஆதிக்கம் நிறைந்த மாதமாகவும் இது அமைகிறது.

மகாலட்சுமியின் அருளைப் பெற, புரட்டாசி மாத முதல் நாளில் கல் உப்பு, பச்சை கற்பூரம் மற்றும் துளசி இலைகள் ஆகியவற்றை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபடுவது மரபு. இவை வீட்டில் செல்வ செழிப்பையும் நேர்மறை ஆற்றல்களையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதும், விஷ்ணு சகஸ்ரநாமம், நாராயண நாமத்தை பாராயணம் செய்வதும் சிறந்ததாகும். குறிப்பாக இந்திர ஏகாதசி அன்று துளசி இலைகள் மற்றும் துளசி தீர்த்தம் படைத்து பெருமாளை வழிபடுவது அதிக புண்ணியம் தரும்.

Our Other Services