Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

தலைச்சுற்றல்: உடனடி நிவாரணத்திற்கான ஆயுர்வேத வீட்டு வைத்தியங்கள்

தலைச்சுற்றல் என்பது பல்வேறு உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு பொதுவான நிலை. மயக்கம், சுழல்வது, பலவீனம் அல்லது நிலையற்ற உணர்வு போன்ற பல விதங்களில் இது வெளிப்படும். அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய இந்த நிலைக்கு ஆயுர்வேதத்தில் பல எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் உள்ளன. உள் காது சமநிலையின்மை, வாத மற்றும் பித்த தோஷங்களின் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படலாம். இந்த கட்டுரையில், தலைச்சுற்றலை உடனடியாக நிர்வகிக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பற்றி விரிவாகக் காணலாம்.

தலைச்சுற்றல் என்றால் என்ன?

தலைச்சுற்றல் என்பது அன்றாட வாழ்க்கையை பாதிக்க கூடிய ஒன்று. இதற்கு பல காரணங்கள் உண்டு. பெரும்பாலும் இது தானாகவே சரியாகிவிடும் என்றாலும் சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பொதுவாக, உடலின் சமநிலைத்தன்மையை பராமரிப்பதில் உள் காது முக்கிய பங்கு வகிக்கிறது. மெனியர்ஸ் நோய், வெஸ்டிபுலர் நியூரிடிஸ் போன்ற நிலைகளில், உள் காது திரவங்கள், தொற்றுகள் மற்றும் உயர் அழுத்தத்தால் அடைக்கப்பட்டு மயக்கம் மற்றும் பலவீனம் ஏற்படலாம். ஆயுர்வேதத்தில், வாத மற்றும் பித்த தோஷங்களின் அதிகரிப்பால் அடிக்கடி ஏற்படும் சீரற்ற சுழலும் நிலை அல்லது மயக்கங்கள் உணர்வு உண்டாகலாம். இதனால் குமட்டல், வாந்தி, கீழே விழுதல், தலைவலி, கட்டுப்பாடற்ற வியர்வை போன்ற சங்கடங்கள் அதிகரிக்கும்.

இந்த தோஷங்களை சமன்செய்து, தலைச்சுற்றல் உணர்வுகளைக் குறைக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான வழிகள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம். இந்த மூலிகைகள் பைட்டோ நியூட்ரியண்ட்களை கொண்டுள்ளன, இது திரிதோஷத்தை ஒழுங்குப்படுத்துகின்றன, இதனால் தலைச்சுற்றல் உணர்வுகள் குறைந்து அதை நிர்வகிக்க உதவும்.

தலைச்சுற்றலைக் கட்டுப்படுத்த உதவும் முக்கிய ஆயுர்வேத மூலிகைகள்

நெல்லிக்காய்

ஆயுர்வேதத்தில் இதற்கு தனி இடம் உண்டு. வைட்டமின் சி இதில் அதிகம் உள்ளது. ஆக்ஸிஜனேற்றியான இந்த மூலிகை மூளையில் இருக்கும் நச்சு ஃப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. நரம்பு மண்டல செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

எப்படி எடுக்கலாம்? நெல்லிக்காய் கொட்டை நீக்கி அரைத்து சாறெடுத்து அதனுடன் தேன் 2 டீஸ்பூன் சேர்த்து குடிக்கவும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடிக்கலாம்.

சங்கபுஷ்பி

சங்கு பூ தான் சங்கபுஷ்பி என்று ஆயுர்வேதத்தில் அழைக்கப்படுகிறது. இது மூளையின் சக்தியை அதிகரிக்கும் ஆல்கலாய்டுகள் நிறைந்தது. இது நிலையற்ற உடல் சுழற்சி செயல்பாடுகளை குறைக்கும். உள் காது சமநிலையை பராமரிக்கும் மூலிகைகளில் இதுவும் ஒன்று.

எப்படி எடுக்கலாம்? இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் முன்பு 2 கிராம் சங்கபுஷ்பி பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இதனால் தலைச்சுற்றலினால் உண்டாகும் நடுங்கும் உணர்வுகள் அமைதிப்படுத்தப்படுகிறது.

ஜாதிக்காய்

இந்த மூலிகையில் மைரிஸ்டின் என்னும் உயிரியல் சேர்மம் உள்ளது. இது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் தன்மை கொண்டது. இது தலைச்சுற்றல் போது நிலையற்ற அசைவுகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

எப்படி எடுக்கலாம்? நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய் பொடியுடன் 1 டீஸ்பூன் சீரகப்பொடி கலந்து தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு முறை இதை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல் கட்டுப்படும்.

பூனைக்காலி விதைகள்

பூனைக்காலி விதைகள் நரம்புகளுக்கு பாதுகாப்பான மூலிகை. இதில் levodopa என்னும் அமினோ அமிலம் உள்ளது. மூளையின் செயல்பாடுகளை தூண்டும் இது உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் தோஷங்களை சமநிலைப்படுத்துகிறது.

எப்படி எடுக்கலாம்? பூனைக்காலி விதை பொடி கிடைக்கும். இதை வாங்கி தினமும் படுக்கைக்கு செல்லும் போது ஒரு டீஸ்பூன் பொடியை பாலில் கலந்து குடிக்கலாம். இது தலைவலியையும் தலைச்சுற்றலையும் நீக்க உதவும்.

சீந்தில் (குடுச்சி)

குடுச்சி என்னும் சீந்தில், நினைவாற்றல், சிந்தனை, செறிவு போன்றவற்றை மேம்படுத்தும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது. இது மனநிலையை மேம்படுத்தும். நரம்பு கடத்தி செயல்பாடுகளை அதிகரிக்கிறது. மேலும் உடலில் வாதம் மற்றும் பித்த தோஷத்தை சமன்செய்கின்றன.

எப்படி எடுக்கலாம்? சீந்தில் கொடியை வாங்கி வந்து இரண்டு துண்டுகள் நீரில் சேர்த்து காய்ச்சி, கொத்துமல்லி, வேப்பம் பூ சாறுடன் சேர்த்து கஷாயாமாக்கி குடிக்கவும். தினமும் காலையில் உணவுக்கு முன்பு 2-3 டீஸ்பூன் சாப்பிட வேண்டும். இது உடலில் உள்ள நிலையற்ற தன்மையை குறைத்து காதுகளில் கூச்ச உணர்வைத் தடுக்கிறது.

தலைச்சுற்றலுக்கு உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள்

  • நீரேற்றத்துடன் இருக்க வேண்டும்
  • மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்
  • மது மற்றும் புகைப்பழக்கம் இருந்தால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
  • போதுமான ஓய்வு அவசியம்
  • அக்குபிரஷர் முயற்சிக்கலாம்

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

தலைச்சுற்றலுடன் நீண்ட நேரம் இருந்தால், கடுமையான அல்லது தொடர்ச்சியான தலைச்சுற்றல் இருந்தால், அதனுடன் நெஞ்சு வலி, மூச்சு திணறல், கடுமையான தலைவலி, மங்கலான பார்வை, பேசுவதில் சிரமம், மயக்கம், பலவீனம், உணர்வின்மை போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் தலைச்சுற்றலைத் தடுக்கலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

தலைச்சுற்றல் என்பது மயக்கம், சுழல்வது, பலவீனம் அல்லது நிலையற்ற உணர்வு போன்ற பல விதமான உணர்வுகளை விவரிக்கும் ஒரு நிலையாகும். உள் காது சமநிலையின்மை, வாத மற்றும் பித்த தோஷங்களின் அதிகரிப்பு போன்ற பல காரணங்களால் இது ஏற்படலாம். இது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சினையாகும்.

நெல்லிக்காய், சங்கபுஷ்பி, ஜாதிக்காய், பூனைக்காலி விதைகள், மற்றும் சீந்தில் (குடுச்சி) ஆகியவை தலைச்சுற்றலைக் குறைக்க உதவும் சில முக்கிய ஆயுர்வேத மூலிகைகளாகும். இவை உடலின் தோஷங்களை சமன்செய்து, நரம்பு மண்டல செயல்பாடுகளை மேம்படுத்தி, தலைச்சுற்றல் உணர்வுகளைக் குறைக்க உதவுகின்றன.

தலைச்சுற்றலுடன் நெஞ்சு வலி, மூச்சு திணறல், கடுமையான தலைவலி, மங்கலான பார்வை, பேசுவதில் சிரமம், மயக்கம், பலவீனம், உணர்வின்மை போன்ற கடுமையான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தொடர்ச்சியான அல்லது நீண்டகால தலைச்சுற்றல் இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. உங்களுக்கு பாதுகாப்பான ஒன்றை தேர்வு செய்ய துறை சார்ந்த நிபுணரிடம் ஆலோசிக்கலாம். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு சமயம் தமிழ் பொறுப்பேற்காது.

Our Other Services