முருகப்பெருமானின் அருளைப் பெற்று, வாழ்வில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்திவாய்ந்த திருப்புகழ் பாடல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. குழந்தை வரம் முதல் சகல துன்பங்கள் நீங்க வரை, ஒவ்வொரு பிரச்சனைக்கும் உரிய திருப்புகழ் பாடல்களை அறிந்து பயன்பெறுங்கள். முருகன் அருளால் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றிக் கொள்ளுங்கள்!
1. குழந்தை வரம் கிடைக்க
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப ...... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த ...... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி ...... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த ...... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் ...... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
2. திருமண வரன் கிடைக்க
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.
3. கல்வியில் தேர்ச்சி பெற
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.
4. சொந்த வீடு அமைய
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
5. தீராத நோய் தீர
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே.
6. நினைத்தது எல்லாம் நடக்க
நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்
கனத்த தத்துவமுற் ...... றழியாமற்
கதித்த நித்தியசித் ...... தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே
மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே
செனித்த புத்திரரிற் ...... சிறியோனே
திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.
7. வருமானம் பெருக
பெருக்கச்சஞ் சலித்துக்கந் தலுற்றுப்புந் தியற்றுப்பின் பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர்
ப்ரியப்பட்டங் கழைத்துத்தங் கலைக்குட்டங் கிடப்பட்சம் பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே
புரக்கைக்குன் பதத்தைத்தந் தெனக்குத்தொண் டுறப்பற்றும் புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும்
புலப்பட்டங் கொடுத்தற்கும் கருத்திற்கண் படக்கிட்டும் புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே
தருக்கிக்கண் களிக்கத்தெண் டனிட்டுத்தண் புனத்திற்செங் குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே
சலிப்புற்றங் குரத்திற்சம் ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன் சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன்
சிரத்தைச்சென் றறுத்துப்பந் தடித்துத்திண் குவட்டைக்கண் டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே
சிறக்கற்கஞ் செழுத்தத்தந் திருச்சிற்றம் பலத்தத்தன் செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே.
8. அரசு வேலை கிடைக்க
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று ...... கிடையோடே
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன்
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் ...... தருவாயே
வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த வேந்திழையி னின்ப ...... மணவாளா
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் ...... புரிவோனே
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த ...... வளநாடா
மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே.
9. வழக்கு பிரச்சனை தீர
கண்க யற்பிணை மானோடுற வுண்டெ னக்கழை தோளானது நன்க மைக்கின மாமாமென ...... முகையான
கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச ரத்திரு கோடோடுற விஞ்சு மைப்பொரு கார்கோதைகொ ...... டுயர்காலன்
பெண்ட னக்குள கோலாகல மின்றெ டுத்திளை யோராவிகள் மன்பி டிப்பது போல்நீள்வடி ...... வுடைமாதர்
பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழி யாதேயுறு கிஞ்சி லத்தனை தாள்பேணிட ...... அருள்தாராய்
விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன் வேதாவொடு விண்டு வித்தகன் வீழ்தாளினர் ...... விடையேறி
வெந்த னத்துமை யாள்மேவிய சந்த னப்புய மாதீசுரர் வெங்க யத்துரி யார்போர்வையர் ...... மிகுவாழ்வே
தண்பு டைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் தாராதல முங்கி ளைத்திட வானீள்திசை ...... யொடுதாவித்
தண்ட ரக்கர்கள் கோகோவென விண்டி டத்தட மாமீமிசை சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே.
10. கருத்து வேறுபாடு நீங்க
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி
மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்
எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை யுண்க வருக மலர்சூ டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
சிந்தை மகிழு மருகா குறவரிள வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
திங்க ளரவு நதிசூ டியபரமர் தந்த குமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.
11. எதிரிகள் தொல்லை நீங்க
தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர தவிக்குங்கொடி ...... மதனேவிற்
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு தமிழ்த்தென்றலி ...... னுடனேநின்
றெரிக்கும்பிறை யெனப்புண்படு மெனப்புன்கவி ...... சிலபாடி
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை யுரைத்துய்ந்திட ...... அறியாரே
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர மனுக்குந்தெரி ...... வரிதான
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு மரற்கும்புரி ...... தவபாரக்
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை வரிக்குங்குரு ...... பரவாழ்வே
கிளைக்குந்திற லரக்கன்கிளை கெடக்கன்றிய ...... பெருமாளே.
12. சகல துன்பமும் விலக
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
தொடர்புடைய பிற முருகன் பாடல்கள்
- கந்த சஷ்டி கவசம்
- கந்த குரு கவசம்
- கந்தர் அனுபூதி
- முருகன் ஆலயங்கள்
- ஆறுபடை வீடுகள்