பெண்கள் பலருக்கும் மாதவிடாய் காலத்தில் பிறப்புறுப்பு துர்நாற்றத்தால் அசௌகரியம் ஏற்படுவதுண்டு. சரியான பராமரிப்பு மற்றும் சில எளிய இயற்கை வீட்டு வைத்தியங்கள் மூலம் இந்த துர்நாற்றத்தைப் போக்கி, நம்பிக்கையுடன் இருக்கலாம். அதற்கான வழிகளை இங்கே விரிவாகக் காணலாம்.
பிறப்புறுப்பு துர்நாற்றத்தைப் போக்க உதவும் இயற்கை வழிகள்
1. பிறப்புறுப்பு சுகாதாரம்
மாதவிடாய் காலங்களில் பிறப்புறுப்பு சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். பிறப்புறுப்பை அடிக்கடி கழுவி சுத்தம் செய்வதன் மூலம் பாக்டீரியா தொற்றுக்கள் மற்றும் பிறப்புறுப்பு தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
2. ப்ரோபயாடிக் உணவுகள்
வழக்கத்தை விட மாதவிடாய் காலங்களில் அதிகமாக ப்ரோபயாடிக் (Probiotic) உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தியை அதிகரித்து, பிறப்புறுப்பின் பிஎச் (pH) அளவில் சமநிலையை ஏற்படுத்தி துர்நாற்றத்தைத் தவிர்க்க உதவும்.
3. போதுமான நீர் அருந்துதல்
உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வதுடன், பிறப்புறுப்பின் துர்நாற்றத்தைத் தடுக்கவும் குறைக்கவும் நீர்ச்சத்துடன் இருப்பது முக்கியம். மாதவிடாய் காலத்தில் கூடுதலாக தண்ணீர் குடிப்பது வயிற்றுப் பிடிப்புகளையும் குறைக்கும்.
4. ஃபிரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்கள்
மாதவிடாய் காலங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஃபிரஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலில் இயற்கையான நறுமணத்தை கூட்டி, துர்நாற்றம் உண்டாவதைத் தடுக்கும்.
5. தேங்காய் எண்ணெய் பயன்பாடு
பிறப்புறுப்பு துர்நாற்றத்தை விரட்ட தேங்காய் எண்ணெய் உதவி செய்யும். பிறப்புறுப்பை சுத்தம் செய்யும்போதெல்லாம் சிறிதளவு தேங்காய் எண்ணெயை மேற்பகுதியில் அப்ளை செய்யுங்கள். இது பாக்டீரியாக்கள் உருவாவதைத் தடுக்கும்.
6. ஆப்பிள் சிடார் வினிகர்
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்க ஆப்பிள் சிடார் வினிகர் மிகச்சிறந்த தீர்வாகும். பிறப்புறுப்பை கழுவி சுத்தம் செய்த பிறகு, ஆப்பிள் சிடார் வினிகருடன் சிறிது தண்ணீர் சேர்த்து அந்த நீரால் கழுவுங்கள். இது பிறப்புறுப்பு பகுதியின் PH அளவை சமன்படுத்தும்.
7. டீ ட்ரீ ஆயில் மற்றும் பேக்கிங் சோடா
ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தேங்காய் எண்ணெயைப் போலவே, டீ ட்ரீ ஆயில் (Tea Tree Oil) மற்றும் பேக்கிங் சோடா (Baking Soda) ஆகியவையும் பிறப்புறுப்பு தொற்று மற்றும் துர்நாற்றத்தைப் போக்கும். பேக்கிங் சோடாவை நீரில் கலந்து சுத்தம் செய்யலாம். தேங்காய் எண்ணெயுடன் சிறிது டீ ட்ரீ ஆயில் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
தவிர்க்க வேண்டியவை: வாசனையுள்ள பொருள்கள்
மாதவிடாய் சமயத்தில் பிறப்புறுப்பு பகுதியில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுப்பதற்கு வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட சோப், லிக்விட் அல்லது நாப்கின்கள் பயன்படுத்துவது தவறு. இது எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும்.
மாதவிடாய் காலங்களில் பிறப்புறுப்பு பகுதியில் மிதமான அளவில் துர்நாற்றம் ஏற்படுவது இயல்பு தான். மேலே குறிப்பிட்ட எளிய வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலம் அவற்றை விரட்டலாம் மற்றும் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கலாம். இருப்பினும், தாங்கிக் கொள்ள முடியாத கடுமையான துர்நாற்றம் வீசினால், தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது மிக முக்கியம்.