Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

மகாளய பட்சம் 2025: முக்கியத்துவம், பலன்கள் மற்றும் வழிபாடுகள்

மகாளய பட்சம் என்பது முன்னோர்களை வழிபடுவதற்குரிய ஒரு புனிதமான காலமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் இந்த 15 நாட்கள், பித்ரு லோகத்தில் இருந்து நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நம் ஆசிகளை ஏற்று நமக்கு ஆசி வழங்கும் சிறப்பு மிக்க காலமாகும். ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் மகாளய பட்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2025 ஆம் ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 08ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 21ம் தேதி மகாளய அமாவாசையுடன் நிறைவடைகிறது.

மகாளய பட்சம் என்றால் என்ன?

ஒரு ஆண்டில் வரும் மிக முக்கியமான வழிகாட்டு காலங்களில் ஒன்று மகாளய பட்சம். ஆவணி மாத பௌர்ணமிக்கு பிறகு வரும் பதினைந்து நாட்கள் மகாளய பட்சம் காலமாகும். "மகாளயம்" என்றால் "பெரிய கூட்டம்" என்று பொருள். பட்சம் என்றால் 15 நாட்கள் கொண்ட ஒரு கால அளவாகும். நம்முடைய முன்னோர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டமாக பித்ரு லோகத்தில் இருந்து பூலோகம் வந்து, நாம் அளிக்கும் தர்ப்பணம், தானம், வழிபாடுகள் போன்றவற்றை ஏற்று, நமக்கு ஆசி வழங்கும் காலமாகும். புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு அல்லது ஆவணி பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.

மகாளய பட்ச சிறப்புகள் மற்றும் செய்ய வேண்டியவை

மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய பட்சம் காலம் ஆகும். வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில் சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்சகாலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். புனித நீர் நிலைகள், கடலுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும்.

பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் அளிக்கப்படும் தர்ப்பணம் எம தர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர், நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே. எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

மகாளய பட்சத்தில் தானம் அளிக்க வேண்டியவை

மகாளய பட்சம் காலத்தில் தானம் அளிப்பது மிகவும் புண்ணியமான செயலாகும். வயதில் பெரியவர்களுக்கும் கற்றறிந்த அறிஞர்களுக்கும் ஆடைகள், ஏழைகளுக்கு பசிக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் மனம் திருப்தி அடைந்து, மகிழ்ச்சியுடன் நம்மை நன்கு அசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்காளிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

மகாளய பட்சத்தின் திதி வாரியான பலன்கள்

  • செப் 07, 2025 - பௌர்ணமி: பித்ரு தோஷம் நீக்கும்.
  • செப் 08, 2025 - பிரதமை: குழந்தைகள் பாக்கியம் கிடைக்கும்.
  • செப் 09, 2025 - துவிதியை: மன அமைதி உண்டாகும்.
  • செப் 10, 2025 - சதுர்த்தி: தெய்வீக தன்மை மேலோங்கி நிற்கும்.
  • செப் 11, 2025 - பஞ்சமி: ஐஸ்வர்யம் சேரும்.
  • செப் 12, 2025 - சஷ்டி: புகழ் மேலோங்கி நிற்கும்.
  • செப் 13, 2025 - சப்தமி: சிறந்த பதவிகளை அடைதல், உத்தியோகத்தில் தலைமைப் பதவி, தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
  • செப் 14, 2025 - அஷ்டமி: முக்தி அடையாத ஆன்மாவுக்கு முக்தி கிடைக்கும், நற்பலன் உண்டாகும்.
  • செப் 15, 2025 - நவமி: திருமண தடை நீங்கும்.
  • செப் 16, 2025 - தசமி: எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
  • செப் 17, 2025 - ஏகாதசி: படிப்பு, கலையில் வளர்ச்சி உண்டாகும்.
  • செப் 18, 2025 - துவாதசி: பொருளாதாரம் உயரும்.
  • செப் 19, 2025 - திரயோதசி: தீர்க்க ஆயுள் கிடைக்கும்.
  • செப் 20, 2025 - சதுர்த்தசி: ஆரோக்கியம் பெருகும்.
  • செப் 21, 2025 - மகாளய அமாவாசை: முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

மகாளய பட்ச வழிபாட்டு பலன்கள்

மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம். இதுவரை நம்முடைய வாழ்க்கையில் நடைபெற்று வந்த சுபகாரியங்கள், முன்னேற்றம் ஆகியவை தடையின்றி நடைபெறும். முன்னோர்களின் ஆசியால் பித்ருசாபம், பித்ருதோஷம் ஆகியவை நீங்கும். மகாளய பட்சத்தின் இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினை செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத் தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு அகத்திகீரை, புல், பழம் கொடுக்கலாம். இந்த புனிதமான மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களை வழிபட்டு அனைத்து நன்மைகளையும் பெறுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஒரு ஆண்டில் வரும் மிக முக்கியமான வழிகாட்டு காலங்களில் ஒன்று மகாளய பட்சம். ஆவணி மாத பௌர்ணமிக்கு பிறகு வரும் பதினைந்து நாட்கள் மகாளய பட்சம் காலமாகும். இது முன்னோர்கள் பூமிக்கு வந்து ஆசி வழங்கும் காலம்.

இந்த ஆண்டு செப்டம்பர் 08ம் தேதி (2025) துவங்குகிறது. இது ஆவணி மாத பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் தொடங்கும்.

மகாளய அமாவாசை செப்டம்பர் 21ம் தேதி (2025) ஞாயிற்றுக்கிழமை அமைகிறது. இது புரட்டாசி மாத அமாவாசை ஆகும்.

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட மகாளய பட்ச காலம் திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது. இக்காலத்தில் தினமும் தர்ப்பணம் செய்து அனைத்து முன்னோரையும் நினைவு கூர வேண்டும்.

வயதில் பெரியவர்களுக்கும் கற்றறிந்த அறிஞர்களுக்கும் ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை போன்றவற்றை தானமளிக்க வேண்டும்.

முன்னோர்களின் ஆசியுடன் வாழ்க்கையிலும் குழந்தைகளின் வாழ்க்கையிலும் உயர்வு உண்டாகும். சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். பித்ருசாபம், பித்ருதோஷம் நீங்கும்.

Our Other Services