Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

ஜோதிடத்தின் படி சில ராசியில் பிறந்தவர்கள் தன்னுடைய பிறப்பிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.

ஜோதிடத்தின் ஆழமான அறிவுடன், எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே அதிர்ஷ்டசாலிகள் என்பதைப் பற்றி இங்கே காண்போம். இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் முன்னேற்றமும், அதிர்ஷ்டமும் எப்போதுமே துணையாக இருக்கும்.

அதிர்ஷ்டசாலி ராசிகள்:

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சிறப்பு அம்சம் உண்டு. அதிலும் குறிப்பாக சில ராசியில் பிறந்தவர்கள் பிறக்கும்போதே அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். அவர்களின் தனிப்பட்ட குணம், உழைப்பு, மற்றும் சரியான திட்டமிடல் அவர்களுக்குச் சாதகமாக அமையும். மேலும் அவர்களுக்கு அமையக்கூடிய ராசி, லக்னம், நட்சத்திரத்தின் படி அவர்களுக்கு வரக்கூடிய தசா புத்திகளும் சாதகமாக அமையும். இதனால் முன்னேற்றமான வாழ்க்கையும், அதிர்ஷ்டமான சூழலும் இருக்கும்.

ரிஷப ராசி

ஆடம்பரம், சுகத்தையும், செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய சுக்கிர பகவான் ஆளக்கூடிய ராசி ரிஷபம். இவர்கள் மிகவும் கடினமாக உழைத்தல், தைரியத்திற்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் தங்களின் இலக்கை சரியாக நிர்ணயிக்கக் கூடியவர்கள். இதன் காரணமாக செல்வம் இவர்களிடம் இப்போதும் சேர்ந்து கொண்டிருக்கும். இவர்களிடம் அழகு, அன்பு, பணம் என எல்லாம் நிறைந்திருப்பதால் பிறரால் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இவர்களை பார்ப்பார்கள். மேலும் இவர்கள் முன்னெடுக்கக்கூடிய எந்த ஒரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் எதிலும் மிகவும் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். சிறப்பான ஆளுமை கொண்ட இவர்கள், பிறரை ஊக்குவிப்பதிலும், பிறருக்கு உதவி செய்வதிலும் ஆர்வம் காட்டுவார்கள். சூர்ய பகவானின் அருள் பெற்ற இவர்கள் பிறரிடம் மரியாதை பெறுவார்கள். இவர்கள் நினைக்கிற விஷயத்தை செய்து முடிப்பது, இவர்களின் கனவும் சாத்தியப்படும். தங்களின் வாழ்க்கையை எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் தைரியமாக எதிர்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு வேலையும் சரியான திட்டமிடலுடன் செய்வார்கள். இதனால் செல்வம் சேரும், அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசியை சேர்ந்தவர்கள் இப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் செயல்படுவார்கள். நம்பிக்கையுடன் உழைத்து தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள். குரு பகவானின் அருள் பெற்ற இவர்கள் அறிவு, கல்வி, செல்வ செழிப்பு, மரியாதை, புகழ் என அனைத்தையும் சிறப்பாக பெறுவார்கள். தனக்காக உழைப்பதைக் காட்டிலும், பிறர் தனக்காக உழைக்க வைத்து முன்னேறுவார்கள். அதிர்ஷ்டம் இவர்களுக்கு மிகவும் சிறப்பாக ஆதரவு அளிக்கும்.

மகர ராசி

மகர ராசி பிறந்தவர்கள் சரியான நிதி திட்டமிடல் மற்றும் அடிப்படையான முன்னேற்றத்தில் கவனமாக இருப்பார்கள். சனிபகவானால் ஆளப்படக்கூடிய இவர்கள் எந்த ஒரு வேலையும் பொறுப்பாக செய்து முடிப்பீர்கள். இலக்குகளை சார்ந்த மனநிலையும், அதன் மூலம் நிதி நன்மைகளை பெறவும் ஆரம்பமாக செயல்படுவார்கள். இவர்களிடம் பொறுமை மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் இருக்கும் என்பதால், நிதி சார்ந்த விஷயத்தில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் அடைவார்கள்.

கும்ப ராசி

கும்ப ராசி சேர்ந்தவர்கள் பிறப்பிலேயே நல்ல வசதியுடன் இருப்பார்கள். இவர்கள் பொதுவாக புதுமை மற்றும் தனித்தன்மையான விஷயங்களை செய்ய ஆசைப்படுவார்கள். மேலும் ஒவ்வொரு விஷயத்திற்கும் செலவு செய்வதற்கு முன் அதன் தேவை என்ன, அதன் மூலம் லாபம் கிடைக்குமா என ஆராய்ந்து செயல்படுவார்கள். அவர்களிடம் உள்ள நேர்மறையான சிந்தனைகளும், நற்பண்புகளும் இவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும்.

முக்கிய அம்சங்கள்

  • ரிஷப ராசி: சுக்கிரனின் ஆளுகை, கடின உழைப்பு, செல்வச் சேர்க்கை.
  • சிம்ம ராசி: சூர்யனின் அருள், தலைமைப் பண்பு, தைரியமான மனநிலை.
  • தனுசு ராசி: குருவின் ஆசி, அறிவு, செல்வம், நேர்மறை எண்ணங்கள்.
  • மகர ராசி: சனியின் ஆளுகை, நிதி திட்டமிடல், பொறுமை, நீண்ட கால லாபம்.
  • கும்ப ராசி: புதுமை, தனித்தன்மை, நிதி சார்ந்த பகுப்பாய்வு, நேர்மறை சிந்தனை.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஜோதிடத்தின் படி, ரிஷபம், சிம்மம், தனுசு, மகரம், மற்றும் கும்பம் ஆகிய ராசிகள் பிறப்பிலேயே அதிர்ஷ்டம் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

இந்த ராசிகள் ஆளக்கூடிய கிரகங்களின் நிலை, தசா புத்திகள், மற்றும் அவர்களின் இயல்பான குணாதிசயங்களான கடின உழைப்பு, திட்டமிடல், நேர்மறை சிந்தனை போன்றவை அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடித் தருகின்றன.

ஜோதிட ஆலோசனைகள் பெறுவது, குறிப்பிட்ட கிரகங்களுக்கு உரிய பரிகாரங்களைச் செய்வது, நேர்மறையான அணுகுமுறையுடன் கடினமாக உழைப்பது ஆகியவை அதிர்ஷ்டத்தை மேம்படுத்த உதவும்.

Our Other Services