ஜோதிடம் நமக்கு வாழ்க்கையின் பல அம்சங்களை உணர்த்துகிறது. தலைமைப் பண்புகள் ஒருவரின் பிறப்பிலேயே அமைந்திருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 12 ராசிகளில், சில ராசியினர் இயல்பாகவே சிறந்த தலைவர்களாகும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் துறையில் மட்டுமல்லாமல், சமூகத்திலும் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வரும் வல்லமை படைத்தவர்கள். முருகப்பெருமானின் அருளால், இந்த சிறப்புமிக்க தலைமைப் பண்புகளைக் கொண்ட 8 ராசிகளைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம். தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் தனித்துவமான திறமைகளை வளர்த்து சிறந்த தலைமைக்கு வர வேண்டும் என்பது எங்கள் ஜோதிடம்360-இன் நோக்கம்.
தலைமைப் பண்புகள் கொண்ட 8 ராசிகள்
மேஷ ராசி
மேஷ ராசியை சேர்ந்தவர்கள் தைரியம், வீரம் அதிகமாக கொண்டவர்கள். இவர்கள் போர்த்தளபதியைப் போல மிக உறுதியான உடல் மற்றும் மனநிலையை கொண்டவர்கள். தங்களின் இலக்குகளின் மீது தீவிரமான செயல்பாடும், கவனமும் இருக்கும். இவர்களிடம் சிறப்பான முடிவு எடுக்கும் திறன் உள்ளது. இது வாழ்க்கையில் அனைத்து விதமான நேரத்திலும் நன்மை தருவதாக அமையும். உங்களின் மன உறுதியும், மற்றவர்களை நம்ப வைக்க கூடிய வல்லமையின் மூலம், சிறப்பான முன்னேற்றத்தை வாழ்க்கையில் பெற்றிடுவீர்கள். முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, ராம் மனோகர் லோகியா போன்றவர்கள் தங்கள் துறையில் சிறந்தவர்களாக விளங்குகின்றனர்.
மிதுன ராசி
மிதுன ராசி சேர்ந்தவர்களின் அதிபதியான புதன் பகவான் ஞானம், புத்திக் கூர்மை, திறமைகளை பெறக்கூடிய அறிவுக்கான கடவுள். இந்த ராசிகள் மீது புதன் பகவானின் செல்வாக்கு அதிகமாக இருப்பதால், பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வத்துடன் இருப்பார்கள். ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்யக்கூடிய திறனும், தங்கள் வேலையில் புதிய வழிகளில் செய்து முடிக்க கூடிய திறமையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாக தாங்கள் இணைத்த இலக்குகளை அடைவதிலும், வாழ்க்கையில் வேகமாக முன்னேறவும் செய்வார்கள். இதனால் பிறருக்கு சிறப்பான தலைவராகவும் செயல்படுவார்கள். ராகுல் காந்தி, யோகி ஆதித்யநாத், லாலு பிரசாத் யாதவ், நிதின் கட்காரி, லட்சுமி மிட்டல் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த ராசியை சேர்ந்த சிறப்பான தலைவர்களே.
கடக ராசி
கடக ராசியை சேர்ந்தவர்கள் சந்திர பகவானின் அம்சம் கொண்டவர்கள். மனோகாரகன் மற்றும் தாய்க்கு உரிய கிரகமாக அறியப்படுகிறது. இந்த ராசியை சேர்ந்தவர்கள் தங்களின் அனைத்து இலக்குகளையும் சிறப்பாக நிறைவேற்றுவார்கள். இயற்கையாகவே இவர்கள் தெளிவான மனமும், மன வலிமை மிக்கவர்கள். மேலும் பிறரை அனுசரித்த செல்வதிலும், பிறருக்கு தலைமை தாங்குவதிலும் மிகச் சிறப்பாக செயல்படுவார். அகிலேஷ் யாதவ், கௌதம் அதானி, ராஜ்நாத் சிங், மகேந்திர சிங் தோனி, ஹர்பஜன் சிங், நடிகர் விஜய் போன்ற பலர் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள்.
கன்னி ராசி
ஞானத்தை தரக்கூடிய புதன் பாகவானின் ராசியான கன்னி ராசியை சேர்ந்தவர்கள், எந்த ஒரு வேலையும் சரியாக திட்டமிட்டு செய்வார்கள். இவர்கள் வேலையில் நிபுணத்துவத்தைக் காட்டுவார்கள். சிறு வயது முதல் தனக்கு நான் ஒரு தனி பாணியை வைத்து செயல்படுவார்கள். இதுநாள் ஒவ்வொரு துறையிலும் வெற்றி அடைய முடிகிறது. இவர்களின் சிறப்பான பேச்சாளர் பிறர் மனதை எளிதாக பாதிக்க வைக்கிறார்கள். இவர்கள் இலக்கை அடைவதில் ஆபத்துகள் மற்றும் தோல்விகளை கண்டு பயப்படுவதில்லை. இதன் காரணமாக நல்ல வெற்றியை பெறுவார்கள். பிறருக்கு தலைவனாக செயல்படுவார்கள். நரேந்திர மோடி, சுப்பிரமணிய சுவாமி, பவன் கல்யாண் உள்ளிட்டோர் கன்னி லக்னத்தை சேர்ந்தவர்கள்.
துலாம் ராசி
சுக்கிர பகவான் ஆளக்கூடிய துலாம் ராசி சேர்ந்தவர்கள், தன் ராசி அடையாளத்தை போன்று எப்போதும் தன் மனதை சம நிலையில் வைத்துக் கொள்வார்கள். இவர்கள் தலைவர்களாக பிறந்து எப்போதும் அரசர்களைப் போல வாழக்கூடியவர்கள். எந்த துறையில் இருந்தாலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுவார்கள். மேலும் தங்களை சுற்றி உள்ளவர்களை முன்னேற்றி விடும் தலைவராக செயல்படுவார்கள். மகாத்மா காந்தி, ஏபிஜே அப்துல் கலாம், அமிதாப்பச்சன், வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் துலாம் லக்னத்தை சேர்ந்தவர்கள்.
விருச்சிக ராசி
செவ்வாய் பகவான் ஆளக்கூடிய ராசி விருச்சிகம். செவ்வாய் கிரகத்தை போலவே இவர்கள் ஆற்றல் மிக்கவர்களாகவும், சக்தி வாய்ந்தவர்கள் ஆகவும் இருப்பார்கள். இவர்கள் இலக்கை அடையாமல் அல்லது உச்சத்தை தொடங்கும் வரை ஓய்வெடுக்க மாட்டார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். இயற்கையாகவே தலைவர் கூறிய குணநலன்கள் உடன் இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் சிறப்பான, தரத்துடன் செய்வார்கள். ஜவஹர்லால் நேரு, ஷாருக்கான், சர்தார் வல்லபாய் படேல், விராட் கோலி போன்றவர்கள் விருச்சிகத்தை சேர்ந்தவர்கள்.
மகர ராசி
மகர ராசி அதிபதி சனி பகவான். கர்ம காரகன், நீதியின் கடவுளாக விளங்கும் சனி பகவான் இவர்களுக்கு செல்வாக்கை தரக்கூடியவர். எப்போதும் புத்துணர்ச்சியுடன் ஏதேனும் ஒரு செயலை செய்து கொண்டே இருப்பார்கள். சிறிது நேரம் சும்மா அமர மாட்டார்கள். கூர்மையான சிந்தனையும், கடின உழைப்பும் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான உயரங்களை அடைவார்கள். மேலும் பிறருக்கு நல்ல தலைவனாகவும் செயல்படுவார்கள். அடல் பிகாரி வாஜ்பாய், கபில்தேவ், ரத்தன் டாட்டா உள்ளிட்டோர் மகர ராசி சேர்ந்தவர்கள்
மீன ராசி
தேவ குரு வியாழன் ஆளக்கூடியது மீன ராசி சேர்ந்தவர்கள். இவர்கள் சிறப்பான நிர்வாகத் திறமை கொண்டவர்கள் மற்றும் ஒரு அணியை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். ஒருவரின் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை எளிதாக கணிக்க கூடியவர்கள் என்பதால் ஒரு தலைவனாக ஒரு அணியை சிறப்பாக நடத்த கூடிய நபராக இருப்பார்கள். நித்திஷ் குமார், அமீர்கான், சிவராஜ் சிங் சவுகான் போன்ற வீரர்கள் மீனராசியை சேர்ந்தவர்கள்.
முக்கிய அம்சங்கள்
- ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் தனிப்பட்ட தலைமைப் பண்புகள் உண்டு.
- மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய எட்டு ராசியினர் சிறந்த தலைவர்களாக உருவாக வாய்ப்புள்ளது.
- தைரியம், புத்தி கூர்மை, திட்டமிடுதல், தலைமை தாங்கும் திறன் போன்ற பண்புகள் இந்த ராசியினரிடம் அதிகம் காணப்படும்.
- தலைசிறந்த தலைவர்களைப் பற்றியும், அவர்களின் ராசிகளைப் பற்றியும் தமிழ் மொழியில் அறிய இது ஒரு சிறந்த வழிகாட்டி.
- ஜோதிடம் வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் நுண்ணறிவுகளை வழங்குகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மற்றும் மீனம் ஆகிய ராசியினர் இயல்பாகவே சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டவர்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.
ஜோதிடம் ஒவ்வொருவரின் ராசி பலத்தின் மூலம் அவர்களின் தனிப்பட்ட பலம் மற்றும் பலவீனங்களை அறிய உதவுகிறது. இதன் மூலம் ஒரு நபர் தனது பலங்களை மேம்படுத்தி, தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
நேரடியான தொடர்பு இல்லை என்றாலும், முருகன் ஆலயங்கள் ஆன்மீக அமைதியையும், தைரியத்தையும் அளிக்கும். ஆன்மீக பலம் ஜோதிட ரீதியாக ஒருவரின் தலைமைப் பண்புகளை மேலும் வலுப்படுத்த உதவும்.