Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

காமதேனு சிலையை வீட்டில், அலுவலகத்தில் எங்கு, எந்த திசையில் வைக்க வேண்டும்?

இந்து மதத்தில் பசு கடவுளாக வணங்கப்படுவதற்குக் காரணம், அதில் மும்மூர்த்திகள், அனைத்து தெய்வங்களும், தேவர்களும் அடங்கியதாக குறிப்பிடப்படுகிறது. இதன் அம்சம் தான் நாம் காமதேனு என அழைக்கின்றோம். அப்படிப்பட்ட காமதேனு பசுவின் சிலையை வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மரணமில்லா வாழ்க்கையையும், குறையாத மகிழ்ச்சி, செல்வத்தை தரக்கூடிய காமதேனுவை வீட்டில் வைப்பதால் மகிழ்ச்சியும், செல்வமும், மன நிம்மதியும், நல்ல அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். காமதேனு பசுவை வீட்டில் வைப்பதற்கான வாஸ்து குறிப்புகள் மற்றும் பலன்களை இந்த ஜோதிடம்360.in கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

காமதேனு சிலை வைப்பதற்கான வாஸ்து குறிப்புகள்

வாஸ்து சாஸ்திரத்தின்படி, காமதேனு பசுவின் சிலையை சரியான திசையில் வைப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, செல்வம் செழிக்கும். இங்கு சில முக்கிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:

  • திசை: உங்களின் வீடு அல்லது அலுவலகத்தில் ஈஷான்யா மூலை என அழைக்கப்படும் வடகிழக்கு திசையில் காமதேனு சிலையை வைப்பது மிகவும் சிறப்பானது.
  • உலோகம்: காமதேனு சிலையானது வெள்ளி, பித்தளை அல்லது செம்பு உலோகத்தால் செய்யப்பட்டதாக இருந்தால் அது மிகவும் மங்களகரமானதாகும். இது வீட்டில் செல்வ வளத்தை பெருக்கும்.
  • நுழைவாயில்: வீட்டின் நுழைவாயிலில் வைக்க நினைப்பவர்கள் பளிங்கு காமதேனு சிலையை வைப்பது நல்லது. இது வீட்டிற்குள் நல்ல அதிர்ஷ்டத்தை வரவேற்கும்.
  • வைக்கும் இடம்: வீட்டின் பூஜை அறையில், வீட்டின் பிரதான வாயில் முன் காமதேனு பசு சிலையை வைப்பது நன்மை தரும்.
  • வாங்க உகந்த நாள்: கோவர்த்தன பூஜை, கிருஷ்ண ஜெயந்தி, கோபத்ம விரதம், கோவத்ச துவாதசி விரதம் உள்ளிட்ட மங்களகரமான நாட்களில் காமதேனு பசு விக்ரகத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது நன்மை தரும்.
  • ஆலோசனை: பண்டிதர் அல்லது ஜோதிடரிடம் கலந்தாலோசித்து பின்னர் காமதேனு பசுவின் சிலையை வீட்டிற்கு வாங்கி வருவது நல்லது.

கன்றுடன் கூடிய காமதேனு பசுவின் சிலையை (நந்தினி) வீட்டில் வைப்பதால், வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் படிப்படியாக விலகி மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

வாஸ்து சாஸ்திரப்படி உங்களின் வீடு அல்லது அலுவலகத்தில் ஈஷான்யா மூலை எனப்படும் வடகிழக்கு திசையில், பூஜை அறையில், அல்லது வீட்டின் பிரதான வாயில் முன் காமதேனு பசுவின் சிலையை வைக்கலாம்.

காமதேனு சிலையானது வெள்ளி, பித்தளை அல்லது செம்பு உலோகத்தால் செய்யப்பட்டதாக இருந்தால் மங்களகரமானது. வீட்டின் நுழைவாயிலில் பளிங்கு காமதேனு சிலையை வைப்பது நல்லது.

காமதேனு பசுவின் சிலையை வீட்டில் வைப்பதால் மகிழ்ச்சியும், செல்வமும், மன நிம்மதியும், நல்ல அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். மேலும், வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் படிப்படியாக விலகி அமைதி நிறைந்திருக்கும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.

Our Other Services