உங்கள் தினசரி ராசிபலனை அறிந்து, உங்கள் நாளை திட்டமிடுங்கள். ஜோதிடக் குறிப்புகள் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துங்கள். தெய்வீக அருளால் நன்மை பெற முருகன் துணையாக இருப்பார்.
அனைத்து ராசிகளுக்கான இன்றைய பலன்கள்
மேஷம் (Aries)
இன்று நீங்கள் நினைத்த வேலை சற்று தாமதமாக நடக்கலாம். பயணங்கள் வழியே சந்தோஷங்கள் அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சில அவதூறுகள் உங்களைப் பற்றி வரலாம்.
ரிஷபம் (Taurus)
இன்று நீங்கள் பக்குவமாக பேசுவீர்கள். சகோதரி உறவுகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். மனதில் தன்னம்பிக்கை பிறக்கக் கூடிய நாள். வெளிநபரால் ஆதாயம் உண்டாகும்.
மிதுனம் (Gemini)
குடும்பத்தினர் உங்களுக்கு துணையாக இருப்பார். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உருவாகும். வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும்.
கடகம் (Cancer)
வேலை செய்யும் இடங்களில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். கலை துறையினருக்கு மிகவும் பொன்னான நாள். சிலருக்கு போட்டி மனப்பான்மையால் சங்கடம் உண்டாகும்.
சிம்மம் (Leo)
முடிந்தவரை பிறரிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள். சகோதரி வழியே உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். மனதில் தேவையில்லாத கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
கன்னி (Virgo)
மனதளவில் இன்று புத்துணர்ச்சி பெறக்கூடிய அற்புதமான நாள். வண்டி வாகனம் மாற்றும் யோகம் உண்டாகும். சுப காரிய பேச்சுக்கள் நல்ல முறையில் முடிவடையும்.
துலாம் (Libra)
பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இன்று உங்கள் வீடுகளில் தவறிய முக்கியமான பொருட்களை கண்டுபிடிப்பீர்கள். அரசு துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான காலமாகும்.
விருச்சிகம் (Scorpio)
கணவன் மனைவியிடையே புரிதல் அதிகரிக்கும். இருவரும் புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும் நாள்.
தனுசு (Sagittarius)
உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். புதிய நட்புக்களின் அறிமுகத்தால் சில ஆதாயம் பெறுவீர்கள். வாழ்க்கையில் முக்கியமான திருப்பத்தை சந்திக்க கூடிய அற்புதமான நாள்.
மகரம் (Capricorn)
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கும்பம் (Aquarius)
இன்று வரவிற்கு ஏற்ற செலவுகளும் இருக்கும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பணி தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.
மீனம் (Pisces)
குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்களுடைய தேவையை பூர்த்தி செய்வீர்கள். அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார். மனதில் புதுவிதமான கனவுகள் தோன்றி மறையும்.
ஜோதிட சிறப்பு குறிப்புகள்
- ✨ ஆடம்பர ராசிகள்: தங்களை எப்பொழுதும் அழகாகவும் ஆடம்பரமாகவும் காட்டி கொள்ளும் 3 ராசிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
- 🌟 இன்றைய நாள்: மனதில் புத்துணர்ச்சி பெறக்கூடிய அற்புதமான நாள்.
- 🙏 ஆன்மீக வழிகாட்டுதல்: உங்கள் வாழ்வில் முருகன் அருள் பெற இந்த ஜோதிட வழிகாட்டி உதவும். ஆறுபடை வீடுகள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வது ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
- 📍 தமிழ் ஜோதிடம்: பாரம்பரிய தமிழ் ஜோதிடத்தின் சிறப்பு அம்சங்களை இங்கே காணலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
ராசிபலன் என்பது உங்கள் ராசியின் அடிப்படையில், கிரக நிலைகளைக் கொண்டு உங்கள் தினசரி எதிர்காலம் குறித்து கணிக்கப்படும் ஒரு ஜோதிடக் கணிப்பாகும். இது உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் சவால்களை அறிய உதவுகிறது.
முருகன் அருளைப் பெற, நீங்கள் முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுதல், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தல் மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நற்செயல்களை செய்யலாம். ஆறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பானது.
ஜோதிடம் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது, சவால்களை எதிர்கொள்ளவும், வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் உதவுகிறது. இது தனிப்பட்ட வளர்ச்சிக்கும், ஆன்மீக புரிதலுக்கும் வழிகாட்டுகிறது. தமிழ் ஜோதிடத்தின் தனித்துவமான அணுகுமுறை பலருக்கு துணை நிற்கிறது.
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் குறித்த மேலும் பல தகவல்களைப் பெற, எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்!
இப்போதே இணையுங்கள்