Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

ரஜ்ஜு பொருத்தம் - திருமண பொருத்தத்தின் முக்கியத்துவம்

ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன?

தினப் பொருத்தம் போல இதுவும் ஒரு அடிப்படை தேவையான பொருத்தம். தினப் பொருத்தமானது நாளது வாழ்வில் ஆணும் பெண்ணும் எப்படி ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பதை கணிப்பதாக இடுக்கிறது என்றால், இந்த ரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் அவர்கள் உயிருடன் வாழ்வார்களா என்பதை கணிப்பதாகும்.

ரஜ்ஜு பொருத்தத்தை தாலி சரடு பொருத்தம் என்று கூறுவார்கள். அதாவது பெண் கழுத்தில் எவ்வளவு நாட்களுக்கு தாலி சரடு இருக்கும் என்பது இந்த பொருத்தத்தின் அடிப்படை. இந்த ரச்சு பொருத்தமானது ஐந்து வகைகளாக பிரிக்கப்படுகிறது.

1. தலை ரஜ்ஜு

ஆண் குருதியும் பெண் குருதியும் ஒரே தன்மையில் இருக்கிறதா என்பதை சோதிட அடிப்படையில் பார்ப்பது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் இல்லை என்றால் குருதியின் தன்மை வேறுபட்டு ஆண் அல்லது பெண்ணிற்கு மூளை தடுமாற்றம் ஏற்படும்.

நட்சத்திரங்கள்: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகியவை. இவற்றில் ஏற்றம் இறக்கம் என்றில்லை.

2. வயிறு ரஜ்ஜு

பொருத்தம் இல்லை என்றால் வயிற்றில் காற்று அடைப்பு, காற்று வெளியேராமல் தினரல், உடல் இளைத்து போகுதல், செரிமான கோளாறால் அவதி, வயிற்றில் நோய் தொற்று.

நட்சத்திரங்கள்:

  • கார்த்திகை, உத்தரம், உத்ராடம் ஆகியவை ஏற்றம் கொண்டவை.
  • புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை இறக்கம் கொண்டவை.

3. கழுத்து ரஜ்ஜு

பொருத்தம் இல்லை எனில் கழுத்து பகுதியில் பாதிப்பு, உணவு குழாயில் பாதிப்பு, மூச்சு விடுவதில் பாதிப்பு, காது கேளாமை, வலி, கண் பார்வை இளம் வயதிலேயே மங்கிப் போகுதல்.

நட்சத்திரங்கள்:

  • ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை ஏற்றம் கொண்டவை.
  • திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை இறக்கம் கொண்டவை.

4. தொடை ரஜ்ஜு

பொருந்தவில்லை எனில் தொடை பகுதியில் நோய் தொற்று. இதனால் மூலம், பிறப்புறுப்பு பாதிப்பு என பல தொல்லைகள் ஏற்படும்.

நட்சத்திரங்கள்:

  • பரணி, பூரம், பூராடம் ஆகியவை ஏற்றம் கொண்டவை.
  • பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை இறக்கம் கொண்டவை.

5. பாதம் ரஜ்ஜு

பொருந்தவில்லை எனில் யானைக்கால் நோய், பாதம் முழுவதும் வெடிப்பு, குருதி கசிவு, நகங்களில் பாதிப்பு, குதிங்கால் வலி, கால் விரல்கள் மரத்துப்போதல்.

நட்சத்திரங்கள்:

  • அசுவினி, மகம், மூலம் ஆகியவை ஏற்றம் கொண்டவை.
  • ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை இறக்கம் கொண்டவை.

ரஜ்ஜு பொருந்தவில்லை என்றால்?

இந்த பொருத்தம் பார்ப்பதற்கு எளிய வழி என்னவென்றால், ஆணும் பெண்ணும் ஒரே ரச்சு நட்சத்திர குழுவில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தாலும் ஒரே தன்மை கொண்டவையாக இருக்கக் கூடவே கூடாது.

இதில், தலை ரஜ்ஜு மற்றும் கழுத்து ரஜ்ஜு ஆகியவற்றில் உள்ள நட்சத்திரங்களை கொண்ட ஆண் பெண் இருவரும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் சேர்வது நல்லதல்ல. தாலி கயிறு நிலைக்காது என கொள்ளலாம்.

  • தலை ரஜ்ஜு: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஒருவருக்கொருவர் திருமணம் செய்ய கூடாது. பொருந்தவில்லை என்றால் தாலி இறங்கும். ஆண் அல்லது பெண் உயிர் பலியாகும்.
  • கழுத்து ரஜ்ஜு: பொருந்தவில்லை என்றால் பெண் உடல் நிலை கடுமையாக பாதிப்படையும்.
  • வயிறு ரஜ்ஜு: பொருந்தவில்லை என்றால் குழந்தை வரம் இருக்காது.
  • தொடை ரஜ்ஜு: பொருந்தவில்லை என்றால் ஏழ்மை நிலை வாழ்க்கை அமையும். பதிவி செல்வம் இழப்பார்கள்.
  • பாத ரஜ்ஜு: பொருந்தவில்லை என்றால் ஒன்றாக கூடி வாழ மாட்டார்கள்.

ரஜ்ஜு பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?

திருமணத்திற்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்களை மிக முக்கியமாக பார்க்கப்படும் கருத்துக்கள் ஒன்று தான் ரஜ்ஜு பொருத்தம். இந்த ரஜ்ஜு பொருத்தம் 10 பொருத்தங்களை ஒன்பதாவது பொருத்தமாக பார்க்கப்படுகிறது.

மணமகன் மற்றும் மணமகள் ஜாதகத்தில் ரஜ்ஜு பொருத்தம் பொருந்தவில்லை எனில் கண்டிப்பாக ஜாதக ரீதியாக திருமணம் செய்து வைக்கக் கூடாது.

Our Other Services