Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

துர்கா கவசம்: தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில்

துர்கா தேவியின் அருளைப் பெற்று, அனைத்துத் துன்பங்களிலிருந்தும் பாதுகாப்பு பெற உதவும் சக்திவாய்ந்த துர்கா கவசம் இங்கே தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கவசத்தை தினசரி பாராயணம் செய்வதன் மூலம் எதிர்மறை சக்திகள் அகன்று வாழ்வில் அமைதியும் வெற்றியும் கிட்டும்.

துர்கா கவசம்: சமஸ்கிருத மூலம்

துர்கா கவசம் சமஸ்கிருதம் :

  1. 1. ச்ருணு தேவி ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வஸித்திதம் படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்
  2. 2. அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத் ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜோத்
  3. 3. உமாதேவீ சிர:பாது லலாடே சூலதாரிணீ சக்ஷப்ஷீகேசரீ பாது கர்ணெள சத்வதர வாஸிநீ
  4. 4. ஸூகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா
  5. 5. அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்யதாரிணீ ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹாவாஹிநீ
  6. 6. கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ மஹா பலாச ஜங்க்வே த்தே பாதெள பூதவாஸிநீ
  7. 7. ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷூதுர்கே தேவீ நமோஸ்துதே.

துர்கா கவசம்: தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் விரிவாக்கம்

இந்த சக்திவாய்ந்த துர்கா கவசத்தின் தமிழ் வடிவத்தையும் அதன் விளக்கத்தையும் இங்கே காணலாம். இது அன்னை துர்கையின் கருணையையும் பாதுகாப்பையும் வேண்டிப் பாடப்படும் ஒரு புனித கவசம்.

  1. 1. கதிரவன் ஒளியே கண்மணியே வருக ஜககன ஜககன தேவியே வருக திமிதிமி திமிதி துர்கா வருக பறையொலி சாற்றி பண்மிமணி வருக ஜில்ஜில் ஜில் என சிலம்பொலி முழங்க கால்கள் எனவே கைவளை குலுங்க பிரம்பொலி சாற்றி ப்ராமானி வருக மாய மயி நீ சாமுண்டி வருக
  2. 2. வரமது அருளும் வனமாலி நீயே தண்டக மண்டல குண்டல தாரிணி சாமுண்டேஸ்வரி துர்கா தேவி ஸ்ரீ சக்ர ஸ்வரூபிணி பீதாம்பறியே என்னை ஆளும் அன்னை இருக்க என்னிடர் நீக்கி தன் மயமாகி சின்மயானந்த முத்துரைகாட்டி சிஷ்டரை காக்கும் கருணை விழியும்
  3. 3. தயயின் நோக்கும் கருனாம்ரூதமும் பாசாங்குசமும் கரும்பும் வில்லும் என் சித்தத்துளே சிவமாய் நின்று நான் என்ற அகந்தை கர்வமொழிந்து அம்புவில் கொண்டு துன்பம் துடைத்தாள் அன்புருவில் என்னை கலந்திட செய்தால் எத்தனை தொல்லை எத்தனை அல்லல் என்பிணி எல்லாம் எடுத்து விழுங்கி
  4. 4. தீமையக்ற்றும் தீமிதி வந்தாள் பில்லி சூன்யம் பெரும் பகை ஏவல் எல்லாம் எரித்து நீரது ஆகும் வல்லமை உள்ள வலிய பிடாரி இருளன் காட்டேரி இத்துன்ப சேனையும் துர்கா தேவியின் பெயரை கேட்டால் துன்பங்கல் யாவும் துரத்தில் ஓடும் போட்டி பொறாமை பொடி பொடி யாகும் பொற்கொடி துர்க்கா
  5. 5. லக்ஷ்மியை கண்டால் இழிவுகள் நீங்கி செல்வம் ஓங்கும் ஓம் என்று ஒலிக்கும் ப்ரனவஸ்வருபி ஒன்காரதொலி உமையவள் வந்தாள் தன்னை அடுத்தவர் துன்பம் அகற்றி என்னை எடுதாட் கொண்டவள் அன்னை தஞ்சம் என்றோரை காப்பவள் துர்கா அன்னை இருக்க்க எனகினி பயமேன் என்னிகரில்லை அன்னையே எல்லாம் புவனம்
  6. 6. முழுவதும் புவநேஸ்வரியாள் மலை போல் இடர்கள் பொடி பொடியாகி மங்கையர் மனமதை முடிப்பவள் துர்கா மணமலர் சூட்டி மகிழ்வாள் துர்கா துர்கா பகவதி என்று நினைத்தால் துட்டரை அடியுடன் வேற்றுதிடுவாள் மலை போல் துயர்கள் பனி போல் நீங்கும் விதியும் விலகும் நிதியும் அளிப்பாள் மதியும் அவளே
  7. 7. காஞ்சி காமாட்சி சூலினி மாலினி கபாலினி மாயே கேசவசோதரி துர்கா மாயே சும்ப நிசும்பினி துர்கா மாயே மகேஷசம்ஹாரிணி துர்கா மாயே வரப்ரசாதினி வைகுண்டேஸ்வரி மாதவசொதறி மங்களாம்பிகையே என்னை ஆட்கொண்டு என்னை ஆதரிபாயே உன்னையே நம்பி வாழ்வேன் அம்மா ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்.

இந்த துர்கா கவசத்தை தொடர்ந்து பாராயணம் செய்வதன் மூலம் அனைத்து வகையான எதிர்மறை சக்திகளிலிருந்தும் விடுபட்டு, அன்னை துர்கையின் முழுமையான அருளையும் பாதுகாப்பையும் பெறலாம்.

தொடர்புடைய பிற முக்கிய மந்திரங்கள்

துர்கா தேவியின் அருளைப் பெறவும், வாழ்க்கையில் நன்மைகளைப் பெறவும் உதவும் பிற மந்திரங்கள்:

  • துர்கா அஷ்டகம்: துர்கா தேவியின் எட்டு வடிவங்களை போற்றும் சக்திவாய்ந்த ஸ்தோத்திரம்.
  • கந்த சஷ்டி கவசம்: முருகப்பெருமானின் அருளைப் பெற்று, நோய் நொடிகளிலிருந்து காக்கும் சிறப்பு கவசம்.
  • கந்த குரு கவசம்: குருவின் அருளைப் பெற்று ஞானம் மற்றும் வெற்றியடைய உதவும் கவசம்.

இந்த மந்திரங்களை தினசரி பாராயணம் செய்து, தெய்வீக சக்தியைப் பெறலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

துர்கா கவசம் என்பது அன்னை துர்கையின் பாதுகாப்பு மந்திரமாகும். இது எதிர்மறை சக்திகள், தீமைகள், நோய்கள் மற்றும் தடைகளில் இருந்து நம்மைக் காக்கிறது. இதைத் தொடர்ந்து பாராயணம் செய்வதன் மூலம் மன அமைதி, தைரியம் மற்றும் வெற்றி பெறலாம்.

ஆம், துர்கா கவசத்தை தினமும் காலை அல்லது மாலை வேளையில் பாராயணம் செய்வது மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்கா தேவிக்கு உகந்த நாட்கள் என்பதால் அன்று பாராயணம் செய்வது சிறப்பு.

துர்கா கவசம் பாராயணம் செய்வதால் தடைகள் நீங்கும், நோய் தீரும், பயம் நீங்கும், எதிரிகள் மீது வெற்றி கிடைக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும். அன்னை துர்கையின் நேரடி பாதுகாப்பு கிடைக்கும்.

Our Other Services