Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

மலச்சிக்கல் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கான டாக்டர் மன்ப்ரீத்தின் அற்புத மூலிகை பொடி

குடல் ஆரோக்கியம் என்பது நம் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மிக முக்கியம். மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கலாம். இந்த பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் மன்ப்ரீத் ஒரு எளிய மூலிகை பொடி தயாரிக்கும் முறையை வழங்கியுள்ளார். இதனைப் பின்பற்றி ஆரோக்கியமான குடலைப் பெறலாம்.

மலக்கட்டு பிரச்சினை ஏன் உண்டாகிறது?

மலம் கட்டுதல் என்பது காலையில் எழுந்ததும் மலம் கழிக்க முடியாத நிலையை குறிக்கிறது. இதற்கு அடிப்படையான காரணம் மலச்சிக்கல் தான். நாம் உண்ணும் உணவில் போதிய அளவுக்கு நார்ச்சத்து இல்லாமல் போகும்போது மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. அப்படி மலச்சிக்கல் ஏற்படும் போது உணவு கழிவுகள் (மலம்) வெளியேற முடியாமல் குடலுக்குள் தேங்கி இருக்கும். இதனால் மலம் கழிப்பதில் சிரமம், அல்லது அடிக்கடி மலம் கழித்தல் போன்ற இரண்டு பிரச்சினைகள் உருவாகலாம்.

மலச்சிக்கல் தீர டாக்டர் மன்ப்ரீத் தரும் அற்புத பானம்

ஊட்டச்சத்து நிபுணரும் ஹார்மோன் சமநிலை நிபுணருமான டாக்டர் மன்ப்ரீத், நம் ஒவ்வொருவருடைய வீட்டு சமையலறையிலும் இருக்கும் சில எளிமையான பொருட்களை வைத்து ஒரு பொடியை செய்து காட்டியிருக்கிறார். இதை தினந்தோறும் சாப்பிட்டு வரும்போது நாளடைவில் மலம் கழிப்பதில் இருக்கும் சிரமத்தை குறைப்பதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும் என்கிறார். இந்த பொடி செய்வதற்கு அதிக செலவோ, கிடைப்பதற்கு அரிய பொருள்களோ தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருள்களே போதுமானது.

மலச்சிக்கல் தீர்க்கும் மூலிகை பொடி செய்ய தேவையான பொருட்கள்:

  • சோம்பு - ஒரு ஸ்பூன்
  • சீரகம் - ஒரு ஸ்பூன்
  • கருப்பு உப்பு (அ) இந்துப்பு - ஒரு ஸ்பூன்
  • சுக்குப்பொடி - அரை ஸ்பூன்
  • கொத்தமல்லி விதை - ஒரு ஸ்பூன்
  • ஓமம் - ஒரு ஸ்பூன்
  • இசபகோல் - 5 ஸ்பூன்

செய்முறை:

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் எதுவும் ஊற்றாமல் சீரகம், சோம்பு, ஓமம் மற்றும் கொத்தமல்லி விதை ஆகிய நான்கையும் வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. இவை ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
  3. இந்த பொடியோடு இசபகோல் மற்றும் சுக்குப்பொடி, கருப்பு உப்பு அல்லது இந்துப்பு ஆகியவற்றை நன்கு கலந்து ஒரு காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இந்த மலச்சிக்கல் தீர்க்கும் மூலிகை பொடியைத் தினமும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொண்டு அதோடு ஒரு ஸ்பூன் உருக்கிய நெய்யும் சேர்த்து கலந்து கொடுத்து விட வேண்டும்.

இந்த மூலிகை பொடி பானத்தை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • வயிற்றில் அதிகப்படியாக தேங்கி இருக்கும் வாயுவை வெளியேற்றும், வயிறு உப்புசத்தை குறைக்கும்.
  • மலத்தை முழுமையாக வெளியேற்ற உதவி செய்யும்.
  • இரவு நேரத்தில் ஏற்படும் வயிறு அசௌகரியத்தைக் குறைக்கும்.
  • ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
  • உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சீராக வைத்திருக்கவும் நாள் முழுக்க நீர்ச்சத்துடன் இருக்கவும் உதவி செய்யும்.
  • குடலை இலகுவாகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் வைத்திருக்க செய்யும் இதனால் மலம் கட்டாமல் இலகுவாக வெளியேறும்.
  • இந்த மூலிகை பொடியில் சேர்க்கப்படும் பொருள்கள் அனைத்தும் 100% இயற்கையானவை என்பதால் வீட்டில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்வது மிக எளிது.

இந்த பொடியில் எந்தெந்த பொருள்கள் எதற்காக சேர்க்கப்படுகின்றன?

  • சோம்பு: ஜீரணத்தையும் குடல் இயக்கத்தையும் சீராக வைத்திருக்கும்.
  • சீரகம்: வயிறு உபசத்தைக் குறைத்து குடலின் இயங்குதலை ஊக்கப்படுத்தும்.
  • சுக்கு பொடி: ஜீரணத்தை மேம்படுத்தி இன்ஃப்ளமேஷன்களை குறைக்கும்.
  • கருப்பு உப்பு: உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சீராக வைத்திருக்கும். மலத்தை இலக்கும்.
  • கொத்தமல்லி விதை: ஜீரணத்தை எளிதாக்கும்.
  • ஓமம்: மலச்சிக்கல், அசிடிட்டி, வாய்வுத் தொல்லை ஆகியவற்றைச் சரிசெய்யும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்ற குடல் சார்ந்த பிரச்சனைகள் உள்ள அனைவரும் டாக்டர் மன்ப்ரீத்தின் இந்த மூலிகை பொடியைப் பயன்படுத்தலாம்.

ஆம், தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் மற்றும் ஒரு ஸ்பூன் நெய்யுடன் கலந்து பருக வேண்டும்.

இது மலச்சிக்கலை நீக்கும், வாயுவை வெளியேற்றும், வயிறு உப்புசத்தைக் குறைக்கும், ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் உடலில் நீர்ச்சத்தை சீராக வைத்திருக்க உதவும்.

இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் 100% இயற்கையானவை மற்றும் சமையலறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பதால் பொதுவாக பக்க விளைவுகள் இல்லை. இருப்பினும், ஏதேனும் மருத்துவ நிலைமைகள் இருந்தால் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது நேரடியாக எந்த மருந்து மற்றும் மருத்துவரின் சிகிச்சைக்கு இணையானது அல்ல. இதன் உண்மை தன்மை, துல்லியம் மற்றும் செயல்படும் திறன் ஆகியவற்றுக்கு Jothidam360 பொறுப்பேற்காது.

Our Other Services