புவி வெப்பமயமாதலை குறைக்கவும், மின் உற்பத்தி செலவுகளை குறைக்கவும், மின் கட்டணங்களை குறைக்கவும் மற்றும் மக்களை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள சிறப்பு வாய்ந்த திட்டம் தான் சூரிய மின்சக்தி மேற்கூரை மானியத் திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக வீடுகளில் மானிய விலையில் சோலார் மேற்கூரைகளை அமைக்கலாம். தற்போது, தமிழ்நாடு அரசு சோலார் மேற்கூரை மானியத் திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது, யார் விண்ணப்பிக்கலாம், மானியம் எவ்வளவு உள்ளிட்ட பல தகவல்களை விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
முதலமைச்சரின் சோலார் மேற்கூரை மூலதன ஊக்கத்தொகைத் திட்டம் என்றால் என்ன?
முதலமைச்சரின் சோலார் மேற்கூரை மூலதன ஊக்கத்தொகைத் திட்டம் (Chief Minister's Solar Rooftop Capital Incentive Scheme) என்பது தமிழகத்தில் நிலையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலார் மேற்கூரை மானியத் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) பயனாளிகள் தங்கள் வீட்டில் மானிய விலையில் சோலார் மேற்கூரைகளை நிறுவலாம். இந்த திட்டமானது மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சரின் சூரிய சக்தி மேற்கூரை மானியத் திட்டத்தின் நன்மைகள்
- மானியம் - மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து 1 கிலோவாட்டுக்கு ரூ.50,000 மானியமாக வழங்குகின்றன (மத்திய அரசு ரூ.30,000, தமிழ்நாடு அரசு ரூ.20,000).
- நிகர அளவு திட்டம் - பயன்பாட்டிற்கு பின் மின்கட்டமைப்பில் செலுத்தும் மின்சாரத்திற்குரிய மின் வரவை பெற்றுக் கொள்ளலாம்.
- இலவச பராமரிப்பு - சோலார் மேற்கூரையை நிறுவிய பிறகு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு வசதி.
- மின்கட்டணக் குறைப்பு - பெருமளவு மின்கட்டணம் குறையும்.
- புவி வெப்பமயமாதலைத் தவிர்த்தல் - வெப்பமயமாதலையும் தவிர்க்க முடியும்.
- நிலையான எரிசக்தி - எதிர்காலத்தில் நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதற்கு உந்துதல்.
முதலமைச்சரின் சூரிய சக்தி மேற்கூரை மானியம் எவ்வளவு?
வீடுகளில் 1 கிலோவாட்டுக்கான (1kWp) சோலார் மேற்கூரையை அமைக்க கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் வரை செலவாகும். ஆனால், இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து சோலார் மேற்கூரை அமைப்பதால் ரூ.50 ஆயிரத்தை மானியமாக பெறலாம்.
மானியம் விவரம்:
- மத்திய அரசின் மானியம்: ரூ.30,000 (1 கிலோவாட்டுக்கு)
- மாநில அரசின் மானியம்: ரூ.20,000 (1 கிலோவாட்டுக்கு)
- மொத்த மானியம்: ரூ.50,000
மீதமுள்ள ரூ.50,000 ஐ பயனாளி தான் செலுத்த வேண்டும்.
முதலமைச்சரின் சூரிய சக்தி மேற்கூரை மானியத்திற்கான தகுதி வரம்புகள்
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சேவை இணைப்பு உள்ள உள்நாட்டு நுகர்வோர்களுக்கு மட்டுமே தகுதியுண்டு.
- 1 முதல் 10kWp சூரிய மின்சக்தி திறன்களில் ஏதேனும் ஒன்றை தேர்வுசெய்யலாம். இருப்பினும், தமிழக அரசின் மானியம் 1kWp திறன் கொண்ட சோலார் பேனல்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
- கிரிப்-இணைக்கப்பட்ட சூரிய மின்சக்தி மேற்கூரை அமைப்புகளுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும்.
- TEDA மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தால் (TANGEDCO) சான்றளிக்கப்பட்ட எம்பேனல் செய்யப்பட்ட விற்பனையாளர்களால் மட்டுமே சோலார் மேற்கூரை நிறுவப்பட வேண்டும்.
நிபந்தனைகள்:
- சோலார் சூரிய சக்தி அலைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட செலவு தட்டையான கூரைகளுக்கு மட்டுமே. கூரை தட்டையாக இல்லாவிட்டால் மற்றும் கூடுதல் பெருகிவரும் கட்டமைப்புகள் தேவைப்பட்டால், கூடுதல் செலவுகள் விண்ணப்பதாரரால் ஏற்கப்பட வேண்டும்.
- இந்தத் திட்டத்தின் கீழ், தமிழக அரசால் தலைமுறை அடிப்படையிலான ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படாது.
முதலமைச்சரின் சூரிய சக்தி மேற்கூரை மானியத்திற்கு தேவையான ஆவணங்கள்
- சமீபத்திய மின்சார கட்டணத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
- சூரிய கூரை பேனலுக்கான கட்டணச் சான்று
- விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
- ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பான் கார்டு
- இன்வெர்ட்டர்கள் மற்றும் சோலார் பேனல்களின் தொழில்நுட்ப விவரக்குறிப்பு விவரங்கள்
- DISCOM ஆல் வழங்கப்பட்ட கிரிட் கிளியரன்ஸ்/நெட் மீட்டர் அமைவு சான்றிதழின் நகல்
- கட்டமைப்பு பொறியாளரிடம் இருந்து கட்டமைப்பு நிலைத்தன்மை சான்றிதழ்
- சூரிய கூரை பேனலின் இருப்பிடத்தை குறிக்கும் கட்டிட அமைப்பு விவரம்
- வங்கி கணக்கு புத்தக நகல்
- தளத்தின் புகைப்படங்கள் (சோலார் மேற்கூரை நிறுவலுக்கு முன் & பின்)
முதலமைச்சரின் சூரிய சக்தி மேற்கூரை மானியத் திட்டத்தின் அம்சங்கள்
இந்த ஒரு திட்டத்தின் கீழ் மின்சாரம் இறக்குமதி மற்றும் எரிசக்தி ஏற்றுமதி ஆகிய இரண்டு செயல்முறை நடைபெறுகிறது. இதற்காக பயனாளியகளின் வீடுகளில் புதிய மீட்டர்கள் நிறுவப்படும்:
- மின்சார பரிமாற்றம் (Import): தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விநியோக நெட்வொர்க்கிலிருந்து நுகர்வோருக்கு மின்சார பரிமாற்றம் செய்யப்படும்.
- மின்சார ஏற்றுமதி (Export): நுகர்வோரிடமிருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விநியோக நெட்வொர்க்கிற்கு மின்சார பரிமாற்றம் செய்யப்படும்.
முதலமைச்சரின் சூரிய சக்தி மேற்கூரை மானியத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
- தேசிய சோலார் போர்ட்டலில் (https://pmsuryaghar.gov.in/) பதிவு செய்யவும். பதிவு எண் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.
- அந்த பதிவு எண்ணைப் பயன்படுத்தி அடிப்படை தகவல்களுடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் https://www.tnebltd.gov.in/usrp/applynatapp.xhtml என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்ப கட்டணத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணைய வழி கட்டண முறையில் https://www.tnebnet.org/awp/login செலுத்த வேண்டும்.
- விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உங்களுடைய விண்ணப்பத்தை சரிபார்க்கும்.
- அனைத்தும் சரியாகும் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பதாரருக்கு சூரிய மின்சக்தி மேற்கூரை நிறுவுவதற்கான அங்கீகாரம் கிடைக்கும்.
குறிப்பு: சூரிய மின்சக்தி மேற்கூரை நிறுவிய பிறகே மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். விண்ணப்பதாரர் பதிவு செய்த பிறகு புதிய முகவரிக்கு மாறினால், புதிய முகவரிக்கு புதிய விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த செயலில் பழைய விண்ணப்பம் ரத்து செய்யப்படும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தமிழகத்தில் நிலையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலார் மேற்கூரை மானியத் திட்டமே முதலமைச்சரின் சோலார் மேற்கூரை மூலதன ஊக்கத்தொகைத் திட்டம்.
இந்த திட்டத்தின் கீழ் 1 கிலோவாட் மின்சக்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி மேற்கூரை அமைக்க மத்திய அரசின் மானியத்துடன் ரூ.20 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படுகிறது.
சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி பசுமையான, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவது, புவி வெப்பமயமாதலை குறைப்பது, மின் கட்டணத்தை குறைப்பது மற்றும் அரசாங்கத்திற்கு மின்சார உற்பத்தி திறனை குறைப்பது போன்றவை முதலமைச்சரின் சூரிய சக்தி மேற்கூரை மானியத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.