Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

முடி உதிர்தலை தடுக்கும் எள்ளில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஈ அதிக அளவில் இருக்கிறது

உங்கள் தலைமுடி ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு இயற்கையான தீர்வு தேடுகிறீர்களா? ஜோதிடம்360 வழங்கும் இந்த கட்டுரையில், கருப்பு எள் எப்படி முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சியை தூண்டி, நரை முடியை மெதுவாக்கி, அடர்த்தியான கூந்தலை தரும் என்று காண்போம். தலைமுடி பராமரிப்பில் எள்ளின் முக்கியத்துவத்தையும், அதன் பலன்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

கருப்பு எள்ளை தினமும் எடுத்துக் கொண்டு வரும்போது முடி உதிர்தல் பிரச்சினை நிற்கும். கருப்பு எள்ளில் ஜிங்க் மற்றும் மக்னீசியம் நிறைந்து இருக்கிறது. இது முடியின் வேர்களை வலுப்படுத்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இந்த எள் எண்ணையை உச்சந்தலையில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து வர முடிக்கு வலிமை கிடைக்கும்.

தலைமுடிக்கு நல்ல பளபளப்பையும் பொலிவையும் இந்த எள் கொடுக்கும். எள்ளில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தலைமுடி வறட்சியைப் போக்கி மாய்ஸ்ச்சரைக் கொடுக்கும். கருப்பு எள்ளில் இயற்கையாகவே காப்பர் இருக்கிறது. இது மெலனின் உற்பத்தியை அதிகரிக்க்ச செய்யும். எள்ளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரும்போது அது முடி நரைப்பதை மெதுவாக்குகிறது. முடியின் நிறத்தை இயற்கையாகவே கருமையாக மாற்றுகிறது.

எள்ளில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கின்றன. இது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

முடி வளர்ச்சிக்கு கருப்பு எள்ளை பயன்படுத்தும் முறைகள்

  • எள்ளை அரைத்து தயிருடன் சேர்த்து ஹேர் பேக்காக பயன்படுத்தலாம்.
  • எள்ளில் இருந்து எடுக்கப்படும் எள் எண்ணெயை தலையில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து வர, முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
  • தினமும் இரவு ஊறவைத்த அல்லது வறுத்த எள்ளை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம். குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் இப்படி சாப்பிடுவது மிக நல்லது.
  • எள்ளை தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து இடித்து நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.

கருப்பு எள்ளின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்

எள் தானே என்று சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால் இந்த சிறிய விதையில் அத்தனை ஆரோக்கிய பயன்கள் இருக்கிறது. கருப்பு எள்ளில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கின்றன. மேலும் கால்சியம், மக்னீசியம், ஜிங்க், தாமிரம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இது தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுத்து முடியின் வேர்க்கால்களை வலுவாக்குகிறது. இதனால் முடிக்குத் தேவையான மெலனின் உற்பத்தி போன்றவை சரியான இருப்பதோடு நரைமுடி வருவதைத் தள்ளிப் போடவும் முடி கருகருவென்று வைத்திருக்கவும் உதவி செய்கிறது.

இறுதியாக, எள் நம் எல்லோருடைய வீடுகளிலுமே இருக்கும் ஒரு பொருள் தான். இதை பயன்படுத்தியே உங்கள் முடி உதிர்வை நிறுத்தி முடி வளர்ச்சியைத் தூண்ட முடியும். இந்த தமிழ் கட்டுரை உங்கள் முடி பராமரிப்புக்கு உதவும் என நம்புகிறோம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

ஆம், கருப்பு எள்ளில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்வை கணிசமாக குறைத்து, முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது.

கருப்பு எள்ளில் இயற்கையாகவே காப்பர் சத்து உள்ளது, இது மெலனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, நரை முடியின் வளர்ச்சியை மெதுவாக்கும்.

தினமும் ஒரு ஸ்பூன் ஊறவைத்த அல்லது வறுத்த எள்ளை சாப்பிடலாம். எள்ளெண்ணெயை உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம் அல்லது எள்ளை தயிருடன் சேர்த்து ஹேர் பேக்காக பயன்படுத்தலாம்.

Our Other Services