ஜோதிடத்தின் படி, சில ராசிகளை சேர்ந்த பெண்களை எளிதில் புரிந்து கொள்வது கடினம். இவர்கள் எளிதில் கோபப்படக்கூடியவர்களாகவும், பொறுமை இழந்து எதிராக செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்ட ஆபத்தான குணங்கள் கொண்ட பெண் ராசிகளைப் பற்றி இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக அறிவோம்.
மேஷ ராசி பெண்கள்
மேஷ ராசியை சேர்ந்தவர்கள் பொதுவாகவே அவசரம் மற்றும் கோபம் அதிகமாக இருக்கும். இவர்கள் சூழலை புரிந்து கொள்ளாமல் இருப்பதும், பிறரிடம் கருத்து வேறுபாடுகளால் திடீரென கோபப்படுவதும் பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகிறது. இவர்கள் முடிந்தவரை சூழலையும், தன் மனநிலையையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் செய்து வர மனம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
ரிஷப ராசி பெண்கள்
ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் பிடிவாத குணம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். தான் எடுத்த முடிவில் பிறரை குறித்து யோசிக்காமல், தான் நினைத்ததை நடத்த வேண்டும் என்ற முனைப்பில் செயல்படுவார்கள். பிறர் நிதர்சன விஷயங்களைக் கூறினாலும் அதற்கு சமரசம் செய்து கொள்ளாமல் நடப்பதால், பிறர் இவர்களை எதிரியாக பார்ப்பார்கள். இதனால் பிறர் இவர்களுடன் ஒத்துச் செல்வது கடினமாக இருக்கும்.
கடக ராசி பெண்கள்
மனோகாரகன் என அழைக்கப்படும் சந்திர பாகவான் ஆளக்கூடிய ராசி கடகம். இவர்கள் பெரும்பாலான நேரங்களில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், பிறர் மீது அன்பு செலுத்தக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அதே சமயம் சிறிய மன வருத்தம் ஏற்பட்டால் கூட, அவர்களுடன் சண்டையிடத் தயங்குவதில்லை. இவர்களின் அதீத உணர்ச்சி மற்றும் கோபம் காரணமாக, அவர்கள் நிலைமை புரிந்து கொள்வதற்கு முன் பிறருக்கு எதிரியாக மாறி விடுவார்கள்.
சிம்ம ராசி பெண்கள்
சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் சிறுவயதிலிருந்தே தலைமைப் பண்பு மற்றும் ஆளுமை செய்ய வேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சரியான காரணம் இன்றி கோபப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எந்த ஒரு சூழ்நிலையையும் பொறுமையாகக் கையாண்டால் கோபத்தை குறைக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் ஆக்கப்பூர்வமான விஷயங்களில் ஈடுபட முடியும்.
கன்னி ராசி பெண்கள்
கன்னி ராசியை சேர்ந்தவர்கள் அன்பானவர்களாக இருந்தாலும், அவர்களை ஏதேனும் தொந்தரவு செய்யக்கூடிய விஷயங்கள் நடந்தால் உடனடியாக கோபப்படுவார்கள். அதே போல தங்களின் குறைபாடுகளை ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள். இவர்கள் மனதில் ஏதேனும் பிரச்சனை அல்லது குழப்பம் இருப்பின் அதை பிறர் மீது வெளிப்படுத்துவார்கள். இதனால் இவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். மனநிலையை சீராக்க யோகா மற்றும் தியானம் பயிற்சி செய்வது நல்லது.
விருச்சிக ராசி பெண்கள்
விருச்சிக ராசியை சேர்ந்த பெண்கள் சிறந்த நபர்களாக இருந்தாலும், பிறர் இவர்களை வருந்தும் வகையில் நடந்து கொண்டாலும் அல்லது ஏமாற்றினாலோ அதிகமாக கோபப்படுவார்கள். விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் பழைய மனக்கசப்புகளை மறந்து, வாழ்க்கையில் முன்னேறுவதற்காக செயல்படுவது நல்லது. புத்தகம் படிப்பது, தியானம் செய்வது மிகச்சிறந்த பலனை தரும்.
தனுசு ராசி பெண்கள்
தனுசு ராசியை சேர்ந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையைச் சுதந்திரமாக வாழ வேண்டுமென யோசிப்பார்கள். இந்த விஷயங்களில் ஏதேனும் தடை வரும் பட்சத்தில், அதற்கு காரணமானவர்கள் மீது உடனே கோபப்பட வாய்ப்புள்ளது. சூழ்நிலையைச் சம்பந்தப்படுத்துவது அவசியம். கோபத்தினால் சூழலை உணராமல் செயல்படுவார்கள். அதனால் இவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக வாய்ப்பு உள்ளது.
முக்கிய குணாதிசயங்கள்
- மேஷ ராசி: அவசரம், கோபம், சூழல் புரியாமல் செயல்படுதல். யோகா, தியானம் பரிந்துரைக்கப்படுகிறது.
- ரிஷப ராசி: பிடிவாதம், தான் எடுத்த முடிவில் உறுதியாக இருத்தல், சமரசம் செய்ய மறுத்தல்.
- கடக ராசி: உணர்ச்சிவசப்படுதல், அன்பு செலுத்துதல், சிறிய மனவருத்தத்திற்கும் சண்டையிட தயங்காமை.
- சிம்ம ராசி: தலைமைப் பண்பு, ஆளுமை குணம், பொறுமையின்றி கோபப்படுதல்.
- கன்னி ராசி: அன்பானவர்கள், ஆனால் தொந்தரவால் கோபம், குறைபாடுகளை ஒப்புக்கொள்ள தயக்கம்.
- விருச்சிக ராசி: சிறந்தவர்கள், ஆனால் ஏமாற்றப்பட்டால் கடுங்கோபம், பழையதை மறப்பது அவசியம்.
- தனுசு ராசி: சுதந்திரப் பிரியம், தடைகளுக்குக் கோபம், சூழ்நிலையை உணராமல் செயல்படுதல்.