தேர்வு பயம் என்பது மாணவர்களுக்கு இயல்பானது. ஆனால், ஜோதிடத்தின் உதவியுடன் இந்த அச்சத்தைப் போக்கி, சிறந்த முறையில் தேர்வுகளை எதிர்கொள்ளலாம். ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்களை பின்பற்றுவதன் மூலம் மாணவர்கள் தேர்வு பயத்திலிருந்து விடுபட்டு, நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதி, நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் ராசிக்கான பரிகாரத்தை இங்கே விரிவாகக் காணலாம்.
தேர்வு வெற்றிக்கான ராசிவாரியான ஜோதிட பரிகாரங்கள்
மேஷம் ராசி மாணவர்களுக்கான பரிகாரம்
செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட மேஷ ராசி மாணவர்கள், வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று, செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வர, தங்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றும் அதே நேரம், காய்ந்த மிளகாயை படைப்பதும் நல்லது, படிக்கையில் உண்டாகும் சோர்வை இது தடுக்கும், செயல்திறனை மேம்படுத்தும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!
ரிஷபம் ராசி மாணவர்களுக்கான பரிகாரம்
பூமி ராசியான ரிஷப ராசி கொண்ட மாணவர்கள், அடிப்படையில் தன்மையானவர்கள்; கனிவான குணம் கொண்டவர்கள். ரிஷப ராசி கொண்ட மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க லட்சுமி தேவி மற்றும் விஷ்ணு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம். குறிப்பாக, வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட்டு வர மன அமைதி, மன உறுதி உண்டாவதாக ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!
மிதுனம் ராசி மாணவர்களுக்கான பரிகாரம்
புதன் ஆளும் ராசியான மிதுன ராசி மாணவர்கள் அடிப்படையில் புத்தி கூர்மைக்கு பெயர் பெற்றவர்கள். இருப்பினும், அவர்களின் பதற்றம் தேர்வுகளின் போது எதிர்மறை விளைவுகளை கொண்டு வரலாம். இந்த பதற்றத்தை குறைத்து, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற, காலை நேர பூஜையின் போது கையில் 3 ஏலக்காய் வைத்து, சரஸ்வதி நாமத்தை 21 முறை உச்சரித்து வாருங்கள்!
கடகம் ராசி மாணவர்களுக்கான பரிகாரம்
சிவ பெருமானுக்கு பிடித்த ராசிகளில் ஒன்றான கடக ராசியினர், இயல்பாகவே தங்கள் பதற்றங்களை எதிர்த்து போராடும் நபர்கள். கடின உழைப்பாளிகள் என பெயர் எடுக்கும் இந்த கடக ராசி மாணவர்கள், தேர்வில் அச்சத்தை தவிர்த்து - தேர்வில் நல்ல மதிப்பெண் பெற, சிவனுக்கு உகந்த திங்கட்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்து வர நல்ல பலன் காணலாம்!
சிம்மம் ராசி மாணவர்களுக்கான பரிகாரம்
ஆளுமை, ஆதிக்கம் நிறைந்த ராசியாக சிம்ம ராசி கருதப்படுகிறது. சூரிய பகவானின் அருள் பெற்ற இந்த சிம்ம ராசியினர், இயல்பாகவே சவால்களை எதிர்த்து போராட கூடியவர்கள். இவர்களுக்கு, தேர்வின் அச்சம் ஒரு சிறு விஷயமாக இருப்பினும், சூழ்நிலை காரணமாக உண்டாகும் தேர்வு தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க துர்கா தேவியை தவறாது வணங்கி வருவது நல்லது.
கன்னி ராசி மாணவர்களுக்கான பரிகாரம்
கன்னி ராசியினர் சிறந்த கணக்காளர்கள், எதிர்காலம் தொடர்பான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கு பெயர் பெற்றவர்கள். அறிவாற்றல், படைப்பாற்றல் மிக்கவர்கள். இயல்பாகவே கல்வியில் சிறந்து விளங்கும் பண்பு கொண்ட இந்த கன்னி ராசியினர், தேர்வில் நல்ல மதிப்பெண்ணை பெற வீட்டில் உள்ள துளசி மாடத்தை பூஜித்து வருவது நல்லது. குறிப்பாக, வெள்ளி - செவ்வாய் தினங்களில் தவறாது பூஜை செய்து வாருங்கள்.
துலாம் ராசி மாணவர்களுக்கான பரிகாரம்
ராசிகளின் பட்டியலில் ஆற்றல் மிக்க ராசிகளில் ஒன்றாக துலாம் ராசி பார்க்கப்படுகிறது. துலாம் ராசியினர் கல்வியில் சிறந்து விளங்கும் நபர்களாக இருப்பினும், கல்விக்கு இணையாக மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த, தேர்வில் சுமாரான மதிப்பெண்ணை பெறலாம். இந்த நிலையை தவிர்த்திட, அரச மர அடி பிள்ளையாரை வாரம் இரண்டு முறை வணங்கி வாருங்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துவதும் நல்ல பலன் அளிக்கும்!
விருச்சிகம் ராசி மாணவர்களுக்கான பரிகாரம்
தனித்துவமான படைப்பாற்றலுக்கு பெயர் பெற்ற ஒரு ராசியாக விருச்சிக ராசி பார்க்கப்படும் நிலையில், இந்த விருச்சிக ராசி கொண்ட மாணவர்கள் தங்கள் தேர்வு அச்சத்தை போக்கி, நல்ல மதிப்பெண் பெற பசு மற்றும் கன்றுக்கு பசும்புல்லை உணவாக அளித்து வரலாம். தேவியின் அடையாளமாக பார்க்கப்படும் பசு, விருச்சிக ராசியினரின் கல்வி ஆர்வத்தை அதிகரிப்பார் என நம்பப்படுகிறது.
தனுசு ராசி மாணவர்களுக்கான பரிகாரம்
சாகச பிரியர்களான தனுசு ராசியினர் , கல்வியில் கவனம் செலுத்துவதை காட்டிலும் விளையாட்டு உள்ளிட்ட பிற செயல்பாடுகளில் ஆர்வம் அதிகம் செலுத்தக் கூடியவர்கள். தனுசு ராசியினரின் இந்த ஆர்வம், அவர்களின் தேர்வில் மோசமான மதிப்பெண்களை குவிக்க காரணமாக அமைகிறது. தனுசு ராசியினரின் கல்வி ஆர்வத்தை அதிகரிக்கவும், தேர்வில் நல்ல மதிப்பெண்ணை பெறவும் அவர்கள், பறவைகளுக்கு தானியங்களை உணவாக அளித்து வரலாம்.
மகரம் ராசி மாணவர்களுக்கான பரிகாரம்
சனி பகவானை ஆளும் கிரகமாக கொண்ட மகர ராசியினர் அடிப்படையில் தந்திரவாதிகள். தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தெளிவான செயல் திட்டங்களை வகுக்கும் புத்திசாலிகள். கல்வியிலும் தேர்ந்தவர்களாக இருக்கும் இந்த மகர ராசியினர், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற சனிக்கிழமைகளில் சனி பகவானை, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, எள் சாதம் படைத்து வணங்கி வரலாம்.
கும்பம் ராசி மாணவர்களுக்கான பரிகாரம்
காற்று ராசியான கும்ப ராசியினர், தங்கள் இலக்கில் குறியாக இருக்கும் நபர்கள். கல்வி விஷயத்திலும் கெட்டிக்காரர்களாக இருக்கும் இவர்கள், அலட்சியத்தின் பேரில் சில சமயங்களில் மோசமான மதிப்பெண்களை குவிக்கலாம். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, கும்ப ராசியினர் வீட்டை சுற்றி இருக்கும் செடிகளுக்கு தவறாது தண்ணீர் ஊற்றி, பராமரித்து வருவது நல்லது.
மீனம் ராசி மாணவர்களுக்கான பரிகாரம்
ஓய்வின்றி கடுமையாக உழைக்கும் ஒரு ராசியாக மீன ராசி பார்க்கப்படுகிறது. மீன ராசியினர் அடிப்படையில் படிப்பில் சுட்டி, இயல்பாகவே தேர்வில் நல்ல மதிப்பெண் பெற கூடியவர்கள். எதிர்பாராத சூழ்நிலை மற்றும் சாதகமற்ற கிரக நிலைகள் காரணமாக சில சமயங்களில் மோசமான மதிப்பெண்களை குவிக்க காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, வீட்டில் ராசி மீன் வளர்த்து வரலாம்!
ஜோதிட பரிகாரங்களின் முக்கிய பலன்கள்
- பயம் நீங்கும்: தேர்வு தொடர்பான மன அழுத்தம் மற்றும் அச்சம் கணிசமாகக் குறையும்.
- கவனத்திறன் மேம்படும்: படிப்பில் அதிக கவனம் செலுத்தி, பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும்.
- மதிப்பெண்கள் உயரும்: தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு, நல்ல மதிப்பெண்களைப் பெற வழிவகுக்கும்.
- நம்பிக்கை அதிகரிக்கும்: சுய நம்பிக்கையுடன் தேர்வுகளை அணுகி, சாதகமான மனநிலையுடன் செயல்பட உதவும்.
- ஜோதிட ஆலோசனை: ராசிக்கு ஏற்ற தனிப்பட்ட பரிகாரங்கள் சிறந்த பலன்களைத் தரும்.