ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பண்புகள் காணப்படுகிறது. குறித்த அந்த ராசியை ஆளும் கிரகங்களே இதற்கு காரணம். ராசிகளின் குணாதிசயங்கள் காதல் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், அதற்கான எளிய பரிகாரங்களையும் இங்கு காணலாம். உங்கள் ராசிக்கான ஜோதிட பரிகாரங்களை அறிந்து, காதல் உறவை மேம்படுத்துங்கள்!
ராசி வாரியான காதல் பரிகாரங்கள்
மேஷம்
செவ்வாய் கிரகத்தை ஆளும் கிரகமாக கொண்ட மேஷ ராசியினர் ஆற்றல் மிக்கவர்கள், துருதுருவென இருப்பவர்கள். இந்த குணம் காதல் உறவில் பிரச்சனைகளை உண்டாக்கும். இதைத் தவிர்க்க, செவ்வாய் கிழமை தோறும் முருகன் கோவில் சென்று முருகனை வழிபட காதல் உறவில் உண்டாகும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். இதேப்போன்று, சிவனுக்கு செந்தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்வதாலும் காதல் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
ரிஷபம்
தன்னடக்கத்திற்கு பெயர் பெற்ற ரிஷப ராசியினர் தங்கள் காதல் உறவில் உண்டாகும் பிரச்சனைகளை தவிர்க்க, வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள அம்மன் கோவிலில் சக்கரை பொங்கலை பிரசாதமாக அளித்து வரலாம். இதேப்போன்று, சுப நிகழ்ச்சிகளின் போது வெள்ளை நிற ஆடைகளை அணிவது உங்கள் காதல் வாழ்க்கையில் உண்டாகும் கருத்து வேறுபாடுகளை தடுக்கும்.
மிதுனம்
புத்தி கூர்மைக்கு பெயர் பெற்ற புதன் கிரகத்தை ஆளும் கிரகமாக கொண்ட மிதுன ராசியினர் தங்கள் பேச்சாற்றலுக்கு பெயர் பெற்றவர்கள். ஆனால், சில சமயங்களில் அவர்களின் இந்த தனித்துவமான திறனே காதலுக்கு பிரச்சனையாகிறது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க, புதன் கிழமைகளில் பெருமாள் கோவில் சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தி வரலாம்.
கடகம்
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் கடக ராசி, சில சமயங்களில் இவர்களின் வழக்கம் காதல் துணைக்கு கட்டுப்பாடு போல் தெரிவதால் காதல் முறிவு உண்டாகிறது. இதனை தடுக்க, வெள்ளி - செவ்வாய் கிழமைகளில் காகத்திற்கு உணவு அளித்து வரலாம்.
சிம்மம்
சூரியனை ஆளும் கிரகமாக கொண்ட சிம்ம ராசியினர் ஆளுமை பண்புகளுக்கு பெயர் பெற்றவர்கள். ஆதிக்கம் செலுத்த விரும்பும் நபர்கள், இவர்களின் இந்த குணம் காதலுக்கு பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க ஞாயிற்றுக்கிழமைகளில் கருப்பு நிற ஆடை அணிந்து, புறாக்களுக்கு கோதுமை உள்ளிட்ட தானியங்களை தானம் செய்து வரலாம்.
கன்னி
படைப்பாற்றல் மிக்க கன்னி ராசியினர் தங்கள் காதல் துணைக்கு போதுமான நேரத்தை ஒதுக்குவது இல்லை. பெரும்பாலும் தனிப்பட்ட லட்சியங்களில் கவனம் செலுத்துகின்றனர். இது காதல் உறவில் பிரச்சனைகளை உண்டாக்கலாம். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, புதன் கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து விஷ்ணு கோவிலுக்கு சென்று வரலாம்.
துலாம்
வெளிப்படையான பேச்சுக்களுக்கு சொந்தக்காரர்களான துலாம் ராசியினர் சில சமயங்களில் ஒளிவு மறைவு இன்றி அனைத்தையும் பேசிவிடும் காரணங்களால் காதல் உறவில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, வெள்ளி கிழமைகளில் லட்சுமி தேவியை வழிபடலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினரின் காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவதற்கு காரணம் பெரும்பாலும் துரோகம், சந்தேகமாக உள்ளது. காதல் உறவில் காணப்படும் நம்பிக்கை பிரச்சனைகள் காதல் முறிவுக்கு வழிவகுக்கிறது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க, செவ்வாய் கிழமைகளில் ஒருவேளை விரதம் இருப்பது நல்லது.
தனுசு
தனிநபர் சுதந்திரத்தை மதிக்கும் தனுசு ராசியினர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் உறவில் பிரச்சனைகள் உண்டாகலாம். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, வியாழன் கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை உடுத்தி, தட்சிணாமூர்த்தியை வணங்கி வரலாம்.
மகரம்
குரு பகவானை ஆளும் கிரகமாக கொண்ட மகர ராசியினர் தங்கள் லட்சியத்தை நோக்கி கடுமையாக உழைப்பவர்கள். காதல் வாழ்க்கையில் பிரச்சனை உண்டாவதற்கு காரணம் தங்கள் பணிகளில் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு தான். காதல் பிரச்சனைகளை தவிர்க்க வாரம் தோறும் சனியன்று ஆஞ்சநேயரை வணங்கி வரலாம்.
கும்பம்
தனி நபரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கும்ப ராசியினரிடம், இவர்களின் காதல் உறவில் பிரச்சனைகள் உண்டாக கருத்து வேறுபாடு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க, கும்ப ராசியினர் பறவைகளுக்கு தானியங்களை உணவாக அளித்து வரலாம்.
மீனம்
இரக்க குணத்திற்கு பெயர் பெற்ற மீன ராசியினர் தங்கள் காதல் உறவின் விருப்பங்களை பூர்த்தி செய்வதில் பேரார்வம் கொண்டவர்கள். காதல் துணைக்காக விஷயங்களை பார்த்து பார்த்து செய்யும் இவர்களின் காதல், சில சமயங்களில் சலிப்பாக இருக்கலாம். இதன் விளைவாக காதல் முறிவு உண்டாகலாம். இதனை தவிர்க்க, சிவன் மற்றும் பார்வதி உருவத்திற்கு வழிபாடு செய்து வரலாம்.
முக்கிய ஜோதிடப் பரிகாரங்கள் சுருக்கம்
- குறிப்பிட்ட தெய்வங்களுக்கு உகந்த நாட்களில் கோவில் வழிபாடு செய்தல். (எ.கா: முருகன் வழிபாடு, பெருமாள் கோவில் வழிபாடு, அம்மன் வழிபாடு, லட்சுமி தேவி வழிபாடு)
- கிரகங்களுக்கு உகந்த நிற ஆடைகளை அணிதல்.
- பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தானம் செய்தல்.
- விரதங்கள் அனுஷ்டித்தல் மற்றும் சிறப்பு அர்ச்சனைகள் செய்தல்.
- ஜோதிட நிபுணரின் ஆலோசனை பெற்று குறிப்பிட்ட பரிகாரங்களை மேற்கொள்ளுதல்.