தமிழ் பாரம்பரியத்தில், சரும பராமரிப்பிற்கான இயற்கை வழிமுறைகள், நவீன சிகிச்சைகளுக்கு இணையாக இன்றும் முக்கியத்துவம் பெறுகின்றன. நமது முன்னோர்களால் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் இந்த ஜோதிடம் சார்ந்த தமிழ் அழகு ரகசியங்கள், சருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதோடு, பக்கவிளைவுகள் இல்லாதவை. முருகன் அருள் போலவே, இந்த இயற்கை பொருட்கள் சருமத்திற்கு பாதுகாப்பளிக்கின்றன. குறிப்பாக, ஆறுபடை வீடுகளில் கிடைக்கும் மூலிகைகள் போன்ற சக்தி வாய்ந்த குணங்களை கொண்டுள்ள அந்த பொருள்கள் என்ன, அவற்றை எப்படி உங்கள் சருமத்துக்குப் பயன்படுத்துவது என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
மஞ்சள் - சருமத்தின் பொன்னொளி
உண்மையில் மஞ்சள் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. சரும நோய்களை தடுக்கும் மஞ்சள் சருமத்தை பிரகாசமாக வைக்கவும் உதவுகிறது. மஞ்சள் சருமத்தில் முகப்பரு, தழும்புகள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை தடுக்கும் வகையில் செயல்படக்கூடியவை. இது சருமத்தை சுத்தம் செய்யும் இயற்கை பொருள்களில் ஒன்று. முந்தைய காலங்களில் சருமத்திற்கு மஞ்சள் பூசி குளித்து வந்தார்கள். பெண்கள் முகம், கை, கால் போன்ற இடங்களில் மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள். தற்போது மஞ்சளை பால், தயிர், பன்னீர் போன்ற பொருள்களுடன் சேர்த்து ஃபேஸ் பேக் போடுகிறார்கள். அன்று முதல் இன்று வரை மஞ்சள் சரும பராமரிப்பில் முக்கியமானதாக பார்க்க படுகிறது.
ரோஜா - இயற்கை குளிர்ச்சி
இன்று பலவித ரோஜாக்களை பார்க்க முடிகிறது. சருமத்திற்கு ரோஜா என்றாலே அது பன்னீர் ரோஜாதான் வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும் ரோஜாக்கள் பார்க்க அழகானவை கவர்ச்சியானவை மட்டுமல்ல, சருமத்தையும் பளிச்சிடும் தன்மையாக மாற்றக்கூடியவை. ரோஜா இதழ்களை கொண்டு தயாரிக்கப்படும் பன்னீர் இரசாயனங்கள் இல்லாதவை. சருமத்திற்கு ஈரப்பதத்தையும், குளிர்ச்சியையும் அளிக்கிறது. புத்துணர்ச்சியான ஃப்ரெஷ்ஷான சருமத்தை கொடுக்கிறது. பன்னீரில் குளித்து அலங்கரித்து நறுமணத்துடன் இருந்த ராணிகளின் காலம் தொட்டு இன்று வரை பன்னீர் பிரசித்தம் தான். நீங்கள் பன்னீரை உங்கள் வழக்கமான சரும பராமரிப்பு அனைத்திலும் சேர்க்கலாம். எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க இயற்கையான இது ஒன்று போதும்.
வேப்பிலை - நோய் எதிர்ப்பு அரண்
சரும நோய்கள் வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அவை அண்டாமல் இருக்க வேப்பிலையை தண்ணீரில் சேர்த்து குளிக்கும் வழக்கம் பாரம்பரியமாகவே உண்டு. இது சருமம், கூந்தல் இரண்டின் ஆரோக்கியத்தை பாதுகாக்க கூடியவை. சரும நோய்கள் இருக்கும் போதும் பூஞ்சை தொற்று இருக்கும் போதும் வேப்பிலையை அரைத்து பூசுவது வழக்கம். இன்றும் அழகு பொருள்களில் வேப்பிலையை ஏதேனும் ஒரு வடிவில் சேர்ப்பதை பார்க்கலாம். குறிப்பாக முகப்பரு சார்ந்த சிகிச்சை க்ரீம்களிலும், பேன், பொடுகு போன்ற தொற்று இருக்கும் போது ஷாம்புவிலும் அதை சேர்ப்பது உண்டு. உங்களுக்கு முகப்பரு பாக்டீரியா தொற்றினால் வந்திருந்தால் நீங்கள் மஞ்சள் உடன் வேப்பிலை சேர்த்து சருமத்துக்கு பயன்படுத்தலாம். முகப்பரு மறையும். மேலும் சருமத்தில் கட்டிகள், கொப்புளங்கள், சீழ் கட்டிகள் போன்றவை பாதிப்பில்லாமல் குணமாகி சரும தொற்று இல்லாமல் வைக்க வேப்பிலை அன்று முதல் இன்று வரை உதவுகிறது.
பால் - கிளியோபாட்ராவின் ரகசியம்
எகிப்து மக்கள் அழகு பராமரிப்பில் கண்டிப்பாக இது இருக்கும். கிளியோபாட்ரா பாலில் தான் குளிப்பாராம். அவருடைய அழகுக்கு காரணம் அவர் கழுதை பாலில், ஆட்டு பாலில் குளித்ததால் தான் என்று மக்கள் இன்றும் நம்புகிறார்கள். உண்மையில் பால் சருமத்திற்கு அற்புதமான நன்மைகளை செய்யும். பால் உள்ளுக்கு எடுப்பது போன்று வெளிப்பூச்சுக்கும் நன்மை அளிக்க கூடியது. இதில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தின் இறந்த செல்களை அகற்றும். இது சரும சொறியை சரி செய்யும். நீங்களும் விரும்பினால் பால் குளியல் செய்யலாம். ஆனால் பாத்டப் முழுவதும் பால் போட வேண்டியதில்லை. ஒரு கப் அல்லது இரண்டு கப் பால் சேர்த்து குளித்தால் போதும். உங்கள் சரும பராமரிப்பில் முகத்தை சுத்தம் செய்ய பால் சேர்க்கலாம். இன்று வரை சரும பராமரிப்பில் பால் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கற்றாழை - இளமையின் ஆதாரம்
கற்றாழை இன்றைய காலத்தில் சருமத்துக்கு பயன்படுத்தப்படும் பொருள் அல்ல. இது காலங்காலமாகவே அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மூலிகை தாவரமான இது அழகு, ஆரோக்கியம் என இரண்டு துறைகளிலும் அதிகமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. கற்றாழை இளமையாக வைத்திருக்க உதவும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இன்றும் கூந்தல், சருமம் பராமரிப்பு பொருள்களில் கற்றாழைக்கு தனி மதிப்பு உண்டு. நீங்களும் உங்கள் சரும பராமரிப்பில் கற்றாழையை சேர்க்கலாம். எளிமையாக வீட்டில் வளர கூடிய கற்றாழையை சருமம், கூந்தல் அனைத்திலும் அப்படியே பயன்படுத்தலாம்.
நல்லெண்ணெய் - சருமத்தின் பலம்
சருமத்தை உள்ளிருந்து வலுப்படுத்தவும் ஆழமாக சென்று சுத்தம் செய்யவும் எண்ணெய் மசாஜ் என்பது காலங்காலமாகவே தொன்று தொட்டு வருகிறது. அதிலும் உடல் முழுவதும் எண்ணெய் மசாஜ் தொடங்கி படிப்படியாக குறைந்து உச்சந்தலை வரை மசாஜ் செய்து தற்போது மீண்டும் தலைக்கு ஆயில் மசாஜ் என்று காலங்காலமாக இருந்து வருகிறது. உங்கள் சரும பராமரிப்பில் எண்ணெய் குளியல் எடுப்பது சருமத்திற்கு ஊட்டம் அளிக்கிறது. உடலை பலப்படுத்துகிறது. சருமத்தில் வறட்சியையும் நீக்குகிறது. இனி உங்கள் சரும பராமரிப்பில் இதையும் சேருங்கள். இறுதியாக சருமத்தை பாதுகாக்க விலை உயர்ந்த பொருள்கள் தேவை என்று இல்லை. தோல் பராமரிப்பு நுணுக்கமாக இருக்க வேண்டியதில்லை. உண்மையில் சீரானதாக இயற்கையான பொருள்களாக இருந்தால் போதும். மேற்கண்ட இந்த ஆறு பொருள்களும் அடுத்து வரும் தலைமுறையினரது சருமத்தையும் பாதுகாக்கும் என்று சொல்லலாம். இனி நீங்களும் இதை பயன்படுத்துங்கள். உங்கள் சருமத்துக்கேற்றபடி சீரான முறையில்.
முக்கிய அம்சங்கள்
- மஞ்சள்: சரும நோய்களை தடுக்கும், பிரகாசமாக்கும்.
- ரோஜா: ஈரப்பதம், புத்துணர்ச்சி அளிக்கும்.
- வேப்பிலை: பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகளை நீக்கும்.
- பால்: இறந்த செல்களை அகற்றி, சருமத்தை சுத்தம் செய்யும்.
- கற்றாழை: இளமையையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
- நல்லெண்ணெய்: சருமத்தை உள்ளிருந்து வலுப்படுத்தி, வறட்சியை நீக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இயற்கையுடன் இணைந்து, என்றும் இளமையாய் மிளிருங்கள்!
இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே.