விநாயகர் சதுர்த்தி அன்று, நாம் வீட்டிற்கு அழைத்து வந்து வழிபடும் பிள்ளையார் சிலையானது, நம் குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றலையும், செல்வ வளத்தையும் ஈர்க்கும் சக்தி வாய்ந்தது. ஆனால், சரியான விநாயகர் சிலையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். விநாயகரின் ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு விதமான பலனைத் தரக்கூடியது. வீட்டில் விநாயகர் சிலை வாங்கும் போது கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விநாயகர் வழிபாடு உங்கள் வீட்டில் மகிழ்ச்சியைப் பெருகச் செய்யும்.
விநாயகர் சிலைகளை வாங்கும் போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
1. விநாயகரின் துதிக்கை
வீட்டில் வைத்து வழிபட நீங்கள் வாங்கும் பிள்ளையார் சிலையில், விநாயகரின் துதிக்கை இடது பக்கமாக திரும்பி உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். இடது பக்கம் துதிக்கையை திருப்பி இருக்கும் விநாயகருக்கு வக்ரதுண்ட விநாயகர் என்று பெயர். இந்த விநாயகரின் வடிவம் மிகவும் மங்களகரமானது என்றும், வழிபடுவதற்கு ஏற்ற மிக சரியான வடிவம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. வக்ர துண்ட விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடுவதால், நிறைவான செல்வ வளம், அமைதி, குடும்ப ஒற்றுமை, வெற்றி ஆகியவற்றை வீட்டில் ஈர்க்க முடியும். வலது பக்கம் துதிக்கை திருப்பி இருக்கும் விநாயகர் வடிவம் மிக மிக சிறப்பு வாய்ந்தது தான், ஆனால் அவற்றை பொது இடங்களிலும், கோவில்களிலும் மட்டுமே வைத்து வழிபட வேண்டும். இது மிகவும் சக்தி கொண்ட, வலிமையான வடிவமாக சொல்லப்படுகிறது.
2. சரியான நிறம்
பிள்ளையார் சிலையின் நிறத்தை தேர்வு செய்வதும் மிக முக்கியம். சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஆகிய நிறத்தில் இருக்கும் விநாயகர் சிலைகளை வீட்டிற்கு வாங்கி வந்து வைத்து வழிபடுவது மிக மிக மங்களகரமானதாகும். இது போன்ற மங்களகரமான, நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தும் விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபடுவது நல்லது. இந்த நிறங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டம், செல்வ வளம், ஞானம், நிறைவான செல்வம் ஆகியவற்றை வீட்டிற்கு அழைத்து வரும் தன்மை கொண்டதாக நம்பப்படுகிறது. இந்த விநாயகர் வழிபாடு உங்கள் ஜோதிட பலன்களை மேம்படுத்தும்.
3. வாகனம்
இந்து புராணங்களின் படி, விநாயகரின் வாகனமாக மூஷிகம் அல்லது சுண்டெலி கருதப்படுகிறது. ஒருவருக்கு ஏற்படும் ஆணவம் மற்றும் ஆசைகளை அடக்கி கட்டுக்குள் வைப்பதன் அடையாளமாக மூஷிகம் கருதப்படுகிறது. அதாவது ஆணவம், ஆசைகளை அடக்கி, நம்மை சரியான பாதையில் அழைத்துச் செல்பவராக விநாயகர் விளங்குவதாக குறிப்பதே இந்த வாகனம். அதனால் விநாயகரின் வாகனத்தை வீட்டிற்கு எழுந்தருளச் செய்து வழிபடுவது அவசியம். எனவே மூஷிக வாகனத்துடன் இருக்கும் விநாயகர் உருவ சிலையை வாங்கி வந்து வைத்து வழிபடுவது அளவில்லாத நன்மைகளை தரும். இந்த விநாயகர் உருவங்கள் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
4. விநாயகரின் கை
வாழ்க்கைக்கு தேவையான செல்வ வளங்கள், வெற்றி, பலம் ஆகியவற்றை ஈர்க்கவும், விநாயகரின் அருளை பெறவும், விநாயகர் தன்னுடைய கைகளில் பிரசாதத்தை வைத்திருப்பது போன்ற உருவ சிலையை வீட்டில் வாங்கி வந்து வைத்து வழிபட வேண்டும். இது வெற்றியை மட்டுமின்றி, வாழ்விற்கும், குடும்பத்திற்கும் தேவையான அனைத்து நலன்களையும் நிறைவாக கொடுத்து அருள்வார்கள் என்பது நம்பிக்கை. மோதகம், லட்டு போன்றவை விநாயகருக்கு விருப்பமானவை. இவற்றை கைகளில் வைத்திருக்கும் விநாயகர் உருவம், நம்முடைய வாழ்க்கையிலும் இனிமை சேர்க்கும் என நம்பப்படுகிறது. இந்த விநாயகர் வழிபாடு சிறப்பு வாய்ந்தது.
5. விநாயகரின் அமைப்பு
பல வகையான உருவங்களில் இருக்கும் விநாயகர் சிலைகள் கடைகளில் விற்கப்படுகிறது. மொபைல் பேசுவது போல், கம்ப்யூட்டர் இயக்குவது போல், கிரிக்கெட் விளையாடுவது போல், நடனம் ஆடுவது போல் என பல விநாயகர் உருவங்களை உருவாக்குகிறார்கள். ஆனால் சரியான விநாயகர் வடிவத்தை தேர்வு செய்து வழிபட்டால் மட்டுமே நம்முடைய விருப்பங்கள் நிறைவேறும். பொதுவாக அமர்ந்த நிலையில் இருக்கும் விநாயகர் சிலையை மட்டுமே வாங்கி வழிபட வேண்டும். விநாயகர் அமர்ந்த நிலையில் இருக்கும் வடிவத்திற்கு சுகாசனம் என்று பெயர். இது அமைதி, தூய்மை, மகிழ்ச்சி ஆகியவற்றை குறிக்கும் அமைப்பாகும். இது உருவத்தை வழிபடுவது மிகவும் சிறப்பானது. அதே போல் நடன கோலத்தில் இருக்கும் வர்த்தன விநாயகர் வடிவத்தையும் வாங்கி வைத்து வழிபடலாம். இவர் மகிழ்ச்சி, வலிமையின் வடிவமாக கருதப்படுகிறார். தமிழ் மரபில் இந்த விநாயகர் வடிவங்கள் போற்றப்படுகின்றன.