ஜோதிடம் 360 வழங்கும் இந்த சிறப்புக் கட்டுரையில், விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை எளிமையாக வழிபட்டு அவரது அருளைப் பெறுவதற்கான ஐந்து முக்கிய நைவேத்தியப் பொருட்களைப் பற்றி விரிவாகக் காண்போம். பொதுவாக, இந்து சமய வழிபாட்டில் கடவுளர்களுக்குப் படைக்கப்படும் பொருட்கள், தெய்வீக ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். முருகன் ஆலயங்கள் மற்றும் பிற தெய்வங்களின் வழிபாடுகளிலும் இத்தகைய நைவேத்தியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த எளிய வழிபாட்டு முறை, உங்கள் வாழ்வின் தடைகளை நீக்கி, செழிப்பைக் கொண்டு வரும்.
விநாயகருக்குப் படைக்க வேண்டிய 5 முக்கியப் பொருட்கள்:
விநாயகப் பெருமானுக்கு மிகப் பிரியமானதாகக் கருதப்படும் இந்தப் பொருட்கள், அவரது அருளை எளிதில் பெற்றுத் தர வல்லவை.
- 1. அருகம்புல்: விநாயகர் வழிபாட்டில் மிக முக்கியமாக பங்கு வகிப்பது அருகம்புல். அனலாசுரன் என்ற அசுரனை வென்றபின் விநாயகரின் உடலில் ஏற்பட்ட உஷ்ணத்தை போக்கியது அருகம்புல். இதனால் இது விநாயகருக்கு மிகவும் விருப்பமானதாக சொல்லப்படுகிறது. விநாயகருக்கு அருகம்புல் படைத்து வழிபடுவதால் வாழ்க்கையில் இருக்கும் எதிர்மறை சக்திகள், மனதில் இருக்கும் கவலைகள் ஆகியவை நீங்கி வாழ்வில் நன்மைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது. முருகப்பெருமானின் வழிபாட்டிலும் சில சமயங்களில் இந்த அருகம்புல் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
- 2. எருக்கம் பூ: வெள்ளை எருக்கம் பூவை மாலையாக கட்டி விநாயகருக்கு அணிவித்து வழிபடுவது மிகவும் சிறப்பு. இது தீய சக்திகளை விரட்டி, எதிர்மறை ஆற்றல்களை தடுக்கும். பயத்தை போக்கி, தைரியத்தை தரும். விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மலராக எருக்கம் பூ கருதப்படுகிறது.
- 3. பொரி, கடலை: பொரி, கடலை ஆகியவை தூய்மையின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. இது இறைவனிடம் முழுவதுமாக சரணடைவதை குறிப்பதாகும். இது எளிமையான, அதே சமயம் சிறந்த நைவேத்தியமாக கருதப்படுகிறது.
- 4. வாழைப்பழம்: தெய்வீக வழிபாட்டில் மிக முக்கியமா பங்கு வகிப்பது வாழைப்பழம் ஆகும். சுலபமாக கிடைக்கக் கூடிய பழம். வாழைப்பழம் நேரமாக தொடப்படாத பழம் என்பதால் எச்சில் படாத பழமாக, தூய்மையின் அடையாளமாக, தெய்வீக தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.
- 5. வெற்றிலை பாக்கு: வெற்றிலை பாக்கு இணைந்ததை தாம்பூலம் என குறிப்பிடுவோம். இது இறைவனுக்கு தட்சிணை அல்லது காணிக்கை கொடுப்பதன் அடையாளமாக கருதப்படுகிறது. இது மகாலட்சுமியின் அம்சமாகவும் கருதப்படுகிறது. அதனால் இறைவனை நம் வீட்டிற்கு அழைத்து, அவரை வழிபடுவதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. இது மங்களத்தின் அடையாளமாகும்.
இந்த ஐந்து பொருட்களையும் மறக்காமல் பிள்ளையாருக்கு படைத்து வழிபட்டால் அவரது அருள் முழுமையாகக் கிடைக்கும். அதே போல் வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள், எடுக்கும் முயற்சிகள், காரியங்கள் என அனைத்திலும் தோல்விகள், தடைகள் ஆகியவற்றை சந்தித்து வருபவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகரை மனதார வேண்டி, அவருக்கு சிதறுக் காய் உடைத்தால் அந்த தேங்காய் உடைந்த சிதறுவதை போல் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களும், தடைகளும் பொடி பொடி சிதறி ஓடி விடும் என்பது நம்பிக்கை. ஜோதிட ரீதியாகவும், விநாயகர் வழிபாடு தடைகளை நீக்கும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.