உடல்நல அக்கறை ஜோதிடத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைத் தவிர்க்க, வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சில பானங்கள் உதவுகின்றன. கீல்வாதம், மூட்டு வலி மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளுக்கு இவை சிறந்த தீர்வாக அமைகின்றன.
ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது அவை மூட்டுகள் மற்றும் திசுக்களில் சில கூர்மையாகப் படியும். இதனால் எலும்பு மூட்டுகள் மற்றும் திசுக்களில் வலி மற்றும் வீக்கங்களை ஏற்படுத்தும். அதோடு சிறுநீரக க் கற்கள் மற்றும் கீல்வாதம் ஆகியவற்றையும் ஏற்படுத்தும். இந்த பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், யூரிக் அமிலத்தைக் குறைக்கவும் உதவும் 5 அற்புதமான பானங்கள் இங்கே.
யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் முக்கிய பானங்கள்
- வெதுவெதுப்பான தண்ணீர்காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடலை நீரேற்றத்தோடு வைத்து, ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் செறிவைக் குறைத்து சிறுநீரின் வழியாக வெளியேற்ற உதவுகிறது.
- வெள்ளரி சாறுவெள்ளரிக்காயில் 90 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர்ச்சத்து உள்ளது. இது உடலை நீரேற்றத்துடன் வைத்து, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை சிறுநீரகங்கள் வடிகட்டி வெளியேற்றுவதை ஊக்குவிக்கும். வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இன்ஃப்ளமேஷன்களைக் குறைத்து செல் சேதங்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
- கற்றாழை சாறுசெரிமான அமைப்பை சுத்தம் செய்து கழிவுகளை வெளியேற்றும் தன்மை கற்றாழை சாறுக்கு உண்டு. யூரிக் அமிலமும் அத்தகைய கழிவுகளில் ஒன்று. காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை சாறு தொடர்ந்து 48 நாட்கள் எடுத்து வர யூரிக் அமிலத்தின் அளவில் மிகப்பெரிய மாற்றத்தை உணர முடியும்.
- கேரட் ஜூஸ்கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் ஒரு மிக முக்கியமான ஆன்டி ஆக்சிடென்ட் ஆகும். இது உடலில் ஏற்படும் இன்ஃப்ளமேசன்களைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேரட் உடலின் பிஹெச் (pH) அளவை சீராக வைப்பது மூலம் சிறுநீரக செயல்பாடு மேம்பட்டு அதிகப்படியாக யூரிக் அமிலம் வெளியேற்றப்படுகிறது.
- கிரீன் டீயூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்த கிரீன் டீ மிகச் சிறந்த பானம். காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் கிரீன் டீயுடன் நாளை தொடங்கும் போது உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு, சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகரித்து ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலம் வெளியேற்றப்படும்.
இறுதியாக, மேற்கண்ட ஐந்து வகையான பானங்களும் காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தை சிறுநீரகத்தால் நன்றாக வடிகட்டி வெளியேற்ற முடியும்.
துறப்பு: இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எந்த வகையிலும் மருந்து மற்றும் மருத்துவரின் சிகிச்சைக்கு மாற்றானது அல்ல. உங்கள் மருத்துவ நிலைகளை மருத்துவரிடம் ஆலோசித்து அதன்பின் கூடுதலாக இந்த உணவு முறையை பின்பற்றுங்கள். இதன் உண்மை தன்மை, துல்லியம், செயல்படும் திறன் ஆகியவற்றுக்கு தமிழ் சமயம் பொறுப்பு ஏற்காது.