வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரின் ஜனன கால ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் குறிப்பிடப்படும் லக்கின, ராசி, நட்சத்திரம் தொடர்ந்து ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களின் சேர்க்கை, சுப கிரகங்களின் பார்வை உள்ளிட்டவை இந்த நபரின் வாழ்க்கையில் மாற்றக் கூடியதாக இருக்கும். மேலும் இந்த நபர் செய்யக்கூடிய வேலை, அவரின் பொருளாதார நிலை உள்ளிட்டவை நிர்ணயிப்பது அவர்களின் ஜாதகமாகவே அமையும். இங்கு எந்தெந்த ராசிகள் தங்களின் வாழ்க்கையில் விரைவாக அதிக பொருளாதாரம் வசதி, பணக்காரனாகும் வாய்ப்பு உள்ளது என தெரிந்து கொள்வோம்.
விரைவாக செல்வம் ஈட்டும் ராசிகள்: ஜோதிட வழிகாட்டி
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் இயல்பாகவே செல்வம் சேர்ப்பதில் அதிர்ஷ்டசாலிகள். அவர்களின் சிறப்பம்சங்கள் இங்கே:
- ரிஷப ராசி: உறுதியான மனநிலை, விடாமுயற்சி, திட்டமிட்ட செயல்பாடு.
- சிம்ம ராசி: தலைமைப் பண்பு, சிறப்பான வாய்ப்புகள், சிறந்த வெற்றி.
- விருச்சிக ராசி: ஆற்றல், வீரம், துல்லியமான திட்டமிடல், சவால்களில் வெற்றி.
- மகர ராசி: கடின உழைப்பு, சிக்கனம், சரியான முதலீடுகள்.
ரிஷப ராசி: செல்வ வளத்தின் ரகசியம்
ஆசை, ஆடம்பரம் உள்ளிட்டவற்றை அருளக்கூடிய சுக்கிர பகவான் ஆளக்கூடிய ராசி ரிஷபம். அதே சமயம் இவர்களிடம் உறுதியான மனநிலையும், விடாமுயற்சியும் நிறைந்திருக்கும். இவர்களின் தன்னம்பிக்கை பார்த்து பிறர் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய அளவிற்கு இவர்கள் உழைப்பார்கள். மிகவும் அர்ப்பணிப்புடன் உழைக்கக்கூடிய இவர்கள், தங்களின் வாழ்க்கையில் இலக்குகளை அடைவதில் மிகவும் தீவிரமாக செயல்படுவார்கள். இலக்கு குறித்து தெளிவான பாதையும், திட்டமிட்ட செயல்படும் இவர்களிடம் இருக்கும். இதன் காரணமாக தங்களின் வாழ்க்கையில் தான் நினைக்கும் அளவிற்கு பணத்தை சம்பாதிக்க இவர்களால் முடியும். மேலும் செல்வத்தையும் வெற்றியையும் அடைய தேவையான முயற்சியில் ஈடுபட தயங்க மாட்டார்கள். ஜோதிட ரீதியாக சுக்கிரனின் ஆதிக்கம் இவர்களுக்கு செல்வத்தை ஈர்க்கும்.
சிம்ம ராசி: தலைமைப் பண்பும் செல்வமும்
நவகிரகங்களின் தலைவன் ஆன சூரிய பகவான் ஆளக் கூடிய ராசி சிம்மம். இவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும், சிறப்பான வெற்றி பெறுவது உறுதி. இவர்கள் தங்களின் சிறு வயதிலிருந்து தலைவனுக்கான ஆளுமை பண்புடன் வளரக்கூடியவர்கள். அதே போல தலைவருக்குரிய தேவையான பண்புகளை வளர்த்துக் கொள்வார்கள். இதனால் இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு பலவிதத்தில் வாய்ப்புகள் கதவு திறக்கும். இதன் காரணமாக இவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு மிக சிறப்பாக இருக்கும். சூரியனின் ஆதிக்கம் சிம்ம ராசியினருக்கு அதிகாரத்தையும், அதன் மூலம் செல்வத்தையும் ஈட்டித் தருகிறது.
விருச்சிக ராசி: தைரியமான முதலீடுகளும் வெற்றியும்
செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி, ஆற்றல், வீரம், வேகத்திற்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் வெற்றியோடு விளையாடும் மனோபாவம் கொண்டவர்கள். பணம் சம்பாதிக்கும் விஷயத்திலும் பயன்படுத்தவார்கள். இவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக சரியான திட்டமிடல் மற்றும் மதிநுட்பத்துடன் எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவார்கள். இதன் காரணமாக இவர்கள் அடைய வேண்டிய இடத்தில் ஆபத்து குறைவதோடு, இவர்களின் முயற்சியில் நல்ல வெற்றியும் பெறுகிறார்கள். இதன் காரணமாக கஷ்டமான சூழல் மற்றும் பிரச்சனைக்குரிய நேரத்திலும் இவர்களால் வெற்றி பெற முடிகிறது. இதன் காரணமாக இவர்கள் எளிதாக பணம் சம்பாதித்து பெரிய செல்வந்தராக மாறுகிறார். ஜோதிட ரீதியாக செவ்வாயின் துணிச்சல் இவர்களை தடைகளைத் தாண்டி பணம் சம்பாதிக்க உதவுகிறது.
மகர ராசி: கடின உழைப்பால் உயரும் செல்வம்
மகர ராசி சேர்ந்தவர்கள் மற்றவர்களை விட சற்று வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். இவர்களின் தாரக மந்திரமே கடின உழைப்புதான். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு, அதை அடைவதற்கான கடின உழைப்பில் ஈடுபடக் கூடியவர்கள். மேலும் தன்னுடைய முயற்சியில் எத்தனை தோல்விகள் வந்தாலும், உடனே அடுத்த முயற்சியில் ஈடுபட தயங்க மாட்டார்கள். மேலும் இவர்கள் வரவு அறிந்து செலவு செய்யக் கூடியவர்கள். எந்த விஷயத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என நன்கு ஆராய்ந்து அதில் முதலீடு செய்வார்கள். சனி பகவானின் ஆதிக்கம் மகர ராசியினருக்கு விடாமுயற்சியையும், அதன் மூலம் செல்வத்தையும் வழங்குகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வேத ஜோதிடத்தின் படி, ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்கள் தங்களின் கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் மூலம் விரைவாக செல்வம் ஈட்டும் வாய்ப்புகள் அதிகம்.
ரிஷப ராசியை ஆளக்கூடிய சுக்கிர பகவானின் அருள், உறுதியான மனநிலை, விடாமுயற்சி மற்றும் திட்டமிட்ட செயல்பாடு இவர்களை செல்வ செழிப்பாக்கும் முக்கிய காரணங்களாகும். ஜோதிட ரீதியாக இவர்களுக்கு செல்வத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு.
கடின உழைப்பு, எந்த தோல்விக்கும் அஞ்சாத மனப்பான்மை, வரவு அறிந்து செலவு செய்யும் பழக்கம் மற்றும் சரியான முதலீடுகள் மூலம் மகர ராசியினர் வாழ்க்கையில் வெற்றி பெற்று பெரும் செல்வந்தராவார்கள்.