Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

மனக்கவலை மற்றும் மன அழுத்தத்துடன் போராடும் ராசிகள்

வேத ஜோதிடத்தின் அடிப்படையில், சில குறிப்பிட்ட ராசிகளைச் சேர்ந்தவர்கள் மனக்கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு ராசியின் தனிப்பட்ட குணாதிசயங்களும் அவர்களின் மனநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்த தமிழ் கட்டுரை ஆராய்கிறது. நம் வாழ்க்கையில் ஜோதிடத்தின் பங்கு அளப்பரியது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் ராசிகள்:

கடக ராசி (Cancer)

கடக ராசி சேர்ந்தவர்கள் பொதுவாக உணர்ச்சிவசப்படக் கூடிய நபர்களாக இருப்பார்கள். இவர்கள் சிறிய விஷயத்தை கூட நுட்பமாகச் செய்ய நினைப்பார்கள். இருப்பினும் இவர்களின் உணர்ச்சிவசத்தால் அல்லது ஏதேனும் ஒரு விஷயங்களை யோசித்து மன அழுத்தத்தில் இருப்பார்கள். அதனால் தங்கள் வேலையை சரியாக முடிக்க முடியாததோடு குற்ற உணர்ச்சிக்கும் ஆளவார்கள். இதன் காரணமாக கடக ராசியினர் யோக, தியானத்தைச் சிறுவயதில் இருந்தே பயில்வது நல்லது. மன அமைதிக்கு முருகன் வழிபாடு சிறந்த வழி.

கன்னி ராசி (Virgo)

கன்னி ராசி பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைகளையும் கூர்ந்து கவனிக்க கூடியவர்கள். இது அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளைக் கொடுக்கலாம். ஆனால் அதுவே அவர்களுக்கு கவலையாகவும் அமையக்கூடும். எல்லா வேலைகளையும் பிழையின்றி, எந்த தவறும் இன்று செய்து முடிக்க நினைப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் எல்லா வேலைகளையும் எந்த தவறும் நடக்காமல் யாராலும் செய்து முடிக்க முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம். இவர்களின் பிரச்சனைகள் குறித்த அதீத கவனித்தால் மன அழுத்தமும், நம்பிக்கையின்மையும் இவர்களுக்கு அதிகரிக்கும்.

விருச்சிக ராசி (Scorpio)

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு தங்கள் செயலில் தீவிரமாகவும் உணர்ச்சி மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எல்லா விஷயத்தையும் உணர்வு ரீதியாக அணுகக் கூடியவர்கள். சில சமயங்களில் சோகமான சூழ்நிலையானது அவர்கள் எதிர்பார்த்ததை விட வருத்தத்தை அதிகரிக்கும். இவர்கள் பல நேரங்களில் பொறாமை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் உணர்வு மற்றும் இவர்கள் நினைத்ததை நடக்காத நேரத்தில் மனக்கவலை அதிகரிக்கும். இவர்கள் நினைத்ததை முடிக்க நிறைய போராட வேண்டியது இருக்கும். உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க விட்டால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். திருச்செந்தூர் முருகன் ஆலயம் போன்ற புனித தலங்களுக்குச் செல்வது மன அமைதியைத் தரும்.

மகர ராசி (Capricorn)

மகர ராசி சேர்ந்தவர்கள் கடின உழைப்பிற்குப் பெயர் பெற்றவர்கள். இவர்கள் சில சமயங்களை அதிக பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். தன்னுடைய வேலையை சரியாக முடிக்கக்கூடிய நபர்கள் என்பதால் இவர்களிடம் அதிக பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பணியிடத்தில் இவர்கள் முடியாது, இயலாது என்ற பேச்சு இவர்களிடம் இருக்காது என்பதால் அதிக வேலையை இவர்கள் மீது திணிப்பார்கள். இதனால் உருவாக்கக்கூடிய மன அழுத்தத்தை பணியிடத்தில் வெளிப்படுத்த இயலாததால் மன நிம்மதி இன்றி சோர்ந்து இருப்பார்கள். மகர ராசி சேர்ந்தவர்கள் தங்களின் மன அமைதியை காத்துக் கொள்ள முயற்சி செய்யவும். சூழலை சரியாக கையாளக் கற்றுக் கொள்வது நல்லது. பொறுப்புகளைக் குறைத்து, பழனி முருகன் கோவில் போன்ற இடங்களுக்குச் சென்று தியானிப்பது நன்று.

முக்கிய அம்சங்கள்

  • கடக ராசி: உணர்ச்சிவசப்படுதல், குற்ற உணர்ச்சி.
  • கன்னி ராசி: அதீத கவனிப்பு, பிழையின்றிச் செய்யும் முயற்சி.
  • விருச்சிக ராசி: தீவிர உணர்ச்சி மனப்பான்மை, பொறாமை.
  • மகர ராசி: அதிக பொறுப்பு, பணியிட மன அழுத்தம்.
  • ஜோதிடம்: ஒவ்வொரு ராசியின் தன்மையை விளக்குகிறது.
  • சீர்செய்ய: யோகா, தியானம், முருகன் ஆலய தரிசனம் போன்றவை உதவும். தமிழ் கலாச்சாரத்தில் ஆன்மீக தீர்வுகளுக்கு முக்கியத்துவம் உண்டு.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகள் மனக்கவலை மற்றும் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படும் ராசிகள் ஆகும். இவர்களுக்கு ஜோதிட ரீதியான தீர்வுகளும் ஆன்மீக வழிகாட்டுதல்களும் உதவலாம்.

யோகா, தியானம், குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், முருகன் ஆலயங்கள் போன்ற ஆன்மீக தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தல் மற்றும் ஆறுபடை வீடுகள் தரிசனம் போன்ற செயல்கள் மன அமைதியையும், கவலையிலிருந்து நிவாரணத்தையும் தரும். தமிழ் மரபில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

Our Other Services