சிலருக்கு இயற்கையாகவே தொழில், வியாபாரம் செய்யக்கூடிய அபார திறன் இருக்கும். படித்து முடித்ததும் அவர்கள் தனக்குரிய தொழிலைத் தொடங்கி, அதில் வெற்றியும் பெறுவார்கள். இத்தகையவர்கள் தலைமைத்துவம், படைப்பாற்றல், ஒழுக்கம் போன்ற பல நல்ல குணங்களைக் கொண்டிருப்பார்கள். எந்தெந்த ராசிகளுக்கு இயற்கையாகவே தொழிலில் ஜொலிக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஜோதிட ரீதியாக தெரிந்து கொள்வோம். உங்கள் தனிப்பட்ட ஜோதிட அம்சங்களை அறிந்து, தொழில் துறையில் சிறந்து விளங்க, Jothidam360 உங்களை வரவேற்கிறது.
மேஷ ராசி: சிறந்த தலைவர்கள்
மேஷ ராசியை சேர்ந்தவர்கள் சிறந்த தலைவர்களாக இருப்பார்கள். இவர்கள் தைரியமான நபர்களாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும், எந்த சவாலையும் சமாளிக்கும் திறமை நிறைந்திருக்கும். போட்டி குணம் அதிகம் என்பதால் சொன்ன சொல்லை பின்வாங்குவதில்லை. எதிலும் ஆபத்தை உணர்ந்து முடிவெடுப்பார்கள் என்பதால் பல நேரங்களில் இவர்களின் முடிவு சரியாக போகும். எதிர்காலம் தொடர்பாக தொலைநோக்கு பார்வையோடு செயல்படுவார்கள். பொதுவாக மேஷ ராசிக்கு ஆற்றலும், தைரியமும் அதிகம் என்பதால் தன்னுடைய முடிவு, செயலில் தீர்க்கமாக செயல்படுத்தி வெற்றி காண முடியும். இத்தகைய குணம் கார்ப்பரேட் உலகில் தலைமைத்துவத்திற்குச் சரியாக வரும். இவர்களிடம் இருக்கும் பிரச்னை கோபமும், உணர்ச்சிவசப்படுவதும் தான். இது இவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்பதால் நிதானமாக செயல்படுவது அவசியம்.
சிம்ம ராசி: தன்னம்பிக்கை நிறைந்தவர்கள்
சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் ஆளுமைத் திறனும், படைப்பாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் அதிக தன்னம்பிக்கை இருக்கும். சிம்ம ராசியினர் எப்போதும் தன் மீது அனைவரின் பார்வை இருக்க வேண்டும், ஒரு வெளிச்சம் குவிய வேண்டும் என நினைப்பார்கள். இவர்களிடம் இருக்கும் சிறப்பான ஆளுமைத் திறன் மற்றவர்களை ஊக்குவிக்கக்கூடியதாக இருக்கும் என்பதால் தொழில் முனைவோருக்கான அனைத்து அம்சங்களும் இவர்களிடம் இருக்கும். ஒரு தொழில், நிறுவனத்திற்கு தலைமை நபராக, வெற்றியைப் பெற கடினமாக உழைக்கக்கூடிய நபராக இருப்பார்கள். இவர்களின் வார்த்தைகளைப் பிறர் மதிப்பார்கள்.
கன்னி ராசி: புத்திசாலித்தனமான திட்டமிடுபவர்கள்
கன்னி ராசியை சேர்ந்தவர்கள் நிலைமையை பகுப்பாய்வு செய்து, செயலை நடைமுறைப்படுத்தக்கூடியவர்களாகச் சிந்தனை கொண்டவர்கள். புத்திசாலித்தனமான இவர்கள் ஒவ்வொரு வேலையையும் புதிய விதத்தில் அணுகுவதால், விதிவிலக்காக இவர்கள் செய்யக்கூடிய தொழிலில் வெற்றி பெறுகின்றனர். திறமை மட்டுமல்லாமல், சிறப்பான ஒழுக்கம், ஒழுங்கமைக்கப்பட்ட விஷயங்களால் வேலையிலும், தன் திறமையை செயல்படுத்தவும் முடியும். சிக்கலான பணிகளுக்கு இது உதவக்கூடியதாக இருக்கும். கன்னி ராசிக்கு சிந்தித்து, திட்டமிட்டு செயலை செய்வதால், தான் செய்யும் தொழிலை சிறப்பாக நடத்தி அதை விரிவாக்க முடியும்.
மகர ராசி: அபார அர்ப்பணிப்பு
மகர ராசியை சேர்ந்தவர்கள் இயல்பாகவே கடின உழைப்பு கொண்டவர்கள். தான் எடுத்த செயலை முடிக்காமல் விடமாட்டார்கள். அதனால் இயல்பாகவே வெற்றியை நோக்கி நகர்கிறார்கள். வெற்றிக்கான திட்டமிடும் இவர்கள், அதில் ஏதேனும் பிரச்னை, சிக்கல் என்றால் அதற்கு அனுபவசாலிகளிடம் ஆலோசனை கேட்க தயங்குவதில்லை. அதனால் இவர்கள் செய்யும் தொழில், வணிகத்தில் வெற்றி கிடைக்கும். வணிக செயல்பாடுகளில் சிறந்தவர்களாக இருக்கும் இவர்கள் பிரச்னைகளை கண்டு அஞ்சாமல் உறுதியோடு போராடுவார்கள். அதனால் மகர ராசியினர் தொழில், வியாபாரத்தில் வெற்றி அடைய முடியும்.
விருச்சிக ராசி: சூழலுக்கு ஏற்ப செயல்படுபவர்கள்
விருச்சிக ராசியினர் திறமை, வேகத்தோடு, புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். அதனால் பிரச்னையை பார்க்காமல் அதன் வேரை அறிந்து அதற்கான தீர்வை பெற நினைப்பார்கள். மிக உறுதியான மன நிலை கொண்டவர்கள். இவர்கள் வேலை செய்தாலும், தொழில் செய்தாலும் அதில் ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்து, அதை தொடுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிப்பார்கள். பிறரின் மனநிலையை சிறப்பாக புரிந்து கொள்வார்கள். மிகவும் சாதூர்யமாக பேசும் திறன் உள்ள இவர்கள் புதிய உறவுகளை, நண்பர்களை எளிதாக புரிந்து கொள்ள வைப்பார்கள். இதனால் விருச்சிக ராசியினர் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் பெரியளவில் சாதிக்க முடியும்.
குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ராசிகள் மட்டும் தான் தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள் என்பதில்லை. இவர்களிடம் அதற்கான திறன் ஜோதிட ரீதியில் சற்று அதிகம். முயற்சி செய்தால் அனைவரும் முன்னேறலாம். உங்கள் ஜோதிட பலனை அறிய Jothidam360 உடன் இணையுங்கள்.