Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

சனி தோஷம் நீங்க சனிக்கிழமை பரிகாரங்கள்: ஜோதிட வழிகாட்டி

வேத ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் மிகவும் பலம் வாய்ந்த கிரகங்களில் ஒன்று. ஒருவரின் ஜாதகத்தில் சனியின் நிலை, அவர் வாழ்க்கையில் அனுபவிக்கும் நன்மை, தீமைகளைத் தீர்மானிக்கிறது. சனியின் தீய பார்வையில் இருந்து தப்பிக்கவும், அவரது அருளைப் பெறவும் சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கியமான பரிகாரங்களை இந்த ஜோதிட வழிகாட்டி தமிழில் விளக்குகிறது.

சனி பகவானின் அருள் பெற 10 சக்தி வாய்ந்த பரிகாரங்கள்

சனி பகவானின் தோஷத்தால் ஏற்படும் தடைகள் மற்றும் கஷ்டங்களில் இருந்து விடுபட, இந்த சக்தி வாய்ந்த பரிகாரங்களை சனிக்கிழமைகளில் தொடர்ந்து செய்யலாம்:

  1. 1. கருப்பு உளுந்து, எள், நகம் பரிகாரம்:
    உங்கள் நகம், 100 கிராம் கருப்பு உளுந்து, 100 கிராம் கருப்பு எள் ஆகியவற்றை ஒரு சிறிய கருப்பு துணியில் முடிந்து, சனிக்கிழமையில் ஆற்றில் ஓடும் தண்ணீரில் விட்டு விடலாம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 7 சனிக்கிழமைகள் செய்து வந்தால் சனி தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
  2. 2. ஏழைகளுக்கு தானம்:
    ஜாதகத்தில் சனியின் நிலை சரியில்லாததால் எந்த வேலையும் நடக்கவில்லை, காரியங்கள் அனைத்தும் தடையாக உள்ளது என்பவர்கள் சனிக்கிழமையில் ஏழைகள் அல்லது வயது முதிர்ந்தவர்களுக்கு கருப்பு நிற போர்வை, கொப்பரை தேங்காய் ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம். இதனால் சனி பகவான் மனம் மகிழ்ந்து தனது அருளை வழங்குவார்.
  3. 3. வேலைத் தடை நீங்க:
    சனியின் கெட்ட பார்வையால் வேலையில் தொடர்ந்து பிரச்சனை சந்தித்து வருகிறீர்கள் என்றால், உங்கள் எடைக்கு இணையாக அடுப்பு கரி வாங்கி, அதை ஆற்றில் ஓடும் தண்ணீரில் விட்டு விடுங்கள். இதனால் நல்ல மாற்றங்களை உங்களால் காண முடியும்.
  4. 4. பணப்புழக்கம் அதிகரிக்க:
    வீட்டில் எந்த நல்லதும் நடக்கவில்லை, பணப்புழக்கமே இல்லை, கையில் இருக்கும் பணமும் செலவாகிக் கொண்டே இருக்கிறது என்கிறவர்கள் சனிக்கிழமையில் கருப்பு குதிரையின் லாடத்தை வாங்கி வீட்டின் தலைவாசல் கதவில் மாட்டி வைக்கலாம்.
  5. 5. உடல்நல பாதிப்பு நீங்க:
    சனியின் பாதிப்பின் காரணமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறவர்கள் சனிக்கிழமையில், கருப்பு உளுந்தால் செய்யப்பட்ட 3 வடைகளை எடுத்து உங்களின் தலையை ஏழு முறை சுற்றி, காகத்திற்கு கொடுத்து வரலாம். இதனால் சனியால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
  6. 6. காரியத் தடை நீங்க:
    முக்கியமான காரியம் செய்ய போகிறீர்கள், அதில் தடை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் சிவப்பு நிற பட்டு நூலை எடுத்து, உங்களின் உயரத்திற்கு அளந்து கொள்ளுங்கள். இதை மாவிலை ஒன்றை எடுத்து, நன்றாக சுத்தம் செய்து விட்டு, அதை சுற்றி கட்டி வையுங்கள். "ஓம் சனீஸ்வராய நமஹ" என்ற மந்திரத்தை சொல்லிய படியே கட்டி, அதை ஆற்றில் விட்டு விடுங்கள். நீங்கள் துவங்கிய காரியம் விரைவில் வெற்றிகரமாக முடியும்.
  7. 7. சனி பகவான் கோவிலில் தானம்:
    சனியால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து விடுபட, சனிக்கிழமையில் சனி பகவான் கோவிலுக்கு சென்று, உங்களின் கைகளால் நல்லெண்ணெய்யில் செய்த உணவுகளை தானமாக வழங்குங்கள். இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையிலும் செய்வதால் சனி பகவானின் ஆசிகள் கிடைக்கும்.
  8. 8. கருப்பு உடை:
    சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் அவருக்கு உகந்த கருப்பு அல்லது கரு நீளத்தில் இருக்கும் உடைகளை உடுத்துவதால் சனியின் அருளை பெற முடியும். சனி பகவான் கோவிலுக்கு, சனிக்கிழமைகளில் கருப்பு வஸ்திரம் வாங்கிக் கொடுப்பதும், சனி பகவானின் சிலை, படம் போன்றவற்றை வீட்டில் வைக்காமல் இருப்பதும் நல்லது.
  9. 9. பழைய செருப்பு தானம்:
    சனி மகாதிசை நடப்பவர்கள், தாங்கள் அணிந்திருக்கும் பழைய செருப்பை சனி பகவானின் கோவில் வாசலிலேயே விட்டு விட்டு வந்துவிடுங்கள். இதனால் சனியால் ஏற்பட்ட தீய பாதிப்புகள் அனைத்தும் விலகிவிடும். அப்படி நீங்கள் விடும் செருப்பு கருப்பு நிறமாக இருப்பது இன்னும் சிறப்பானதாகும்.
  10. 10. கருப்பு நாய்களுக்கு உணவிடுதல்:
    சனியின் தீய பார்வையில் இருந்து விடுபடுவதற்கு சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய்யில் தேய்த்த பிரெட்டினை கருப்பு நிற நாய்களுக்கு உணவாக கொடுக்கலாம். இது உங்களுக்கு வளர்ச்சிப் பாதையை ஏற்படுத்துவதுடன், வளர்ச்சியில் இருக்கும் தடைகளையும் விலக்கிவிடும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் இருக்கும் நிலை அல்லது சனியின் சஞ்சாரம் சரியாக இல்லாதபோது ஏற்படும் அசுப பலன்களே சனி தோஷம் எனப்படுகிறது. இது வாழ்க்கையில் தடைகள், கஷ்டங்கள் மற்றும் சவால்களை ஏற்படுத்தும்.

சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாளாகும். இந்நாளில் செய்யப்படும் பரிகாரங்கள் சனி பகவானின் அருளைப் பெற்றுத் தருவதோடு, சனி தோஷத்தால் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் குறைத்து, வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என தமிழ் ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.

Our Other Services