கையில் தாளாளமாக பணம் புலங்குவதற்கும், பணம் உங்களை தேடி வந்து கொண்டே இருப்பதற்கும் காலையில் எழுந்ததும் இரண்டு பொருட்களை மட்டும் முதலில் தொட்டால் போதும். அந்த இரண்டு பொருட்கள் என்ன என்பதை வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட ரீதியாக பணம் பெருகும் பரிகாரங்கள்
ஒவ்வொரு நாளுமே சிறப்பானதாக, மகிழ்ச்சியாக, அதிர்ஷ்டகரமானதாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. இதற்கு காலையில் எழுந்ததும் நாம் செய்யும் செயல்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஆனால் நமக்கே தெரியாமல் நாம் செய்யும் சில தவறுகளால் எதிர்மறையான விஷயங்களையே அதிகம் சந்திக்க வேண்டி உள்ளது. இவற்றில் பெரும்பாலானவர்கள் சொல்லும் பிரச்சனை கையில் காசு தங்குவதே இல்லை. ஏதாவது செலவு வந்து கொண்டே இருக்கிறது என்பது தான். இந்த ஜோதிட பரிகாரம் உங்களுக்கு மிகவும் உதவும்.
இந்த பிரச்சனை உங்களுக்கும் இருக்கிறது என்றால், காலையில் எழுந்ததும் இந்த ஒரு விஷயத்தை செய்து பாருங்கள், பணம் வந்து கொண்டே இருக்கும். உங்கள் அதிர்ஷ்டம் நிச்சயம் பெருகும்.
அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் காலை பழக்கவழக்கங்கள்
காலையில் எழுந்து கண் விழிக்கும் போது முதலில் நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும். உள்ளங்கையை பார்க்க வேண்டும், உள்ளங்கையை கண்களில் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லுவார்கள். அது போல் காலையில் எழுந்ததும் முதலில் நாம் தொடும் பொருள் என்பது பண வரவிற்கு மிகவும் முக்கியமானதாகும். தவறான பொருட்களை நாம் தொட்டால் அன்று நாள் முழுவதும் பணம் வருவது தடைபடுவதுடன், ஏதாவது ஒரு வழியில் செலவுகளும் அதிகம் வந்து கொண்டே இருக்கும்.
கையில் பணம் வந்து கொண்டே இருப்பதற்கு காலை எழுந்ததும் எந்த இரண்டு பொருட்களை தொட வேண்டும், எந்த இரண்டு பொருட்களை தொடக் கூடாது, எதனால் தொடக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பணத்தை ஈர்க்கும் மங்களப் பொருட்கள்: தண்ணீர் மற்றும் உப்பு
1. தண்ணீரை தொடுவதன் மகிமை
காலை எழுந்ததும் முதலில் தண்ணீரை கையில் தொட வேண்டும். இது பெருக்கத்தை குறிக்கும் ஒரு பொருளாகும். தண்ணீரை தொட்டு, கைகளை கழுவியோ அல்லது முகத்தை கழுவிய பிறகு தான் மற்ற பொருட்களை தொட வேண்டும். சிலருக்கு காலையில் எழுந்தது வேறு ஏதாவது வேலைகளை செய்யும் பழக்கம் இருக்கும். குறிப்பாக பெண்கள் காலையில் இருந்ததும் சமையல் அறைக்கு சென்று வேலையை சற்று துவக்கி விட்டு தான் முகம் கழுவ செல்வார்கள். இப்படி செய்யக் கூடாது. ஜோதிட ரீதியாக இது பண வரவை குறைக்கும்.
2. உப்பை தொடுவதன் சிறப்பு
பணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்கு காலையில் எழுந்ததும் தொட வேண்டிய மற்றொரு பொருள் உப்பு. இது மகாலட்சுமி வாசம் செய்யும் மங்கள பொருட்களில் ஒன்று. அதனால் காலையில் எழுந்ததும் உப்பினை தொட்டு, மகாலட்சுமியிடம் நம்முடைய ஏதாவது குறை தீர வேண்டும் என தினமும் வேண்டினால் விரைவில் அது நடக்கும். உப்பு கடலில் இருந்து தோன்றுவதால் அதுவும் பெருக்கத்திற்குரிய பொருளாக கருதப்படுகிறது. அதனால் தான் அனைத்து விசேஷங்களிலும் உப்பினை முதலில் வாங்கி வைக்கும் வழக்கம் உள்ளது. பணக்கஷ்டம் நீங்க இது ஒரு சிறந்த ஆன்மீகப் பரிகாரம்.
காலையில் தொடக்கூடாத 2 பொருட்கள்
1. அரிசி
காலையில் எழுந்ததும் தொடக் கூடாத பொருட்களில் முக்கியமானது அரிசி. இது மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாக இருந்தாலும், ஈர்ப்பு தன்மை அதிகம் கொண்டதாகும். இதனால் உங்கள் கையில் இருக்கும் லட்சுமி கடாட்சத்தை முழுவதுமாக ஈர்த்து விடும். அதனால் எழுந்ததும் அரிசியை தொட்டால் கையில் இருக்கும் காசை ஈர்த்து, இழுத்து விடும். மறந்தும் கூட காலையில் எழுந்ததும் நேரடியாக சமையலுக்கு அரிசி எடுக்கிறேன் என அரிசியை தொட்டு விடாதீர்கள்.
2. புளி
அதே போல் தொடக் கூடாத மற்றொரு பொருள் புளி. இது மங்கள பொருள் என்றாலும் எளிதில் கரையும் தன்மை கொண்டது என்பதால் கையில் இருக்கும் காசையும் சீக்கிரம் கரைய வைத்து விடும். பண இழப்பை தவிர்க்க புளியை காலையில் தவிர்ப்பது நல்லது.